Header Ads



இலங்கை முஸ்லிம்களுக்கு அவசரத்திற்கு முன் அவதானம் வேண்டும்...!


(மக்காவிலிருந்து ஐ.எல்.தில்ஷாத் முஹம்மத் (கபூரி))

இலங்கை முஸ்லிம்களுக்கெதிரான கெடுபிடிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகின்ற காட்சிகளை அண்மைய நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன. இதன் உச்ச கட்டத்தினை அடைந்தாகியும் விட்டாயிற்று. முஸ்லிம்களை வலுக்கட்டாயமாக ஓர் இனக்கலவரத்திற்கு அழைக்கின்ற செய்லபாடுகளை பெரும்பாண்மையினர் கூட மிகத் துள்ளியமாக புரிந்து வைத்துள்ளனர். இதன் கெட்ட முடிவுகள் பற்றியும் இதன் பிண்ணனி பற்றியும் அவர்கள் அறிக்கைகள் விடுத்தும் வருகின்றனர். இவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தும் வருகின்றனர். உண்மையில் இவர்களது முயற்சிகள் வெரும் அரசியல் இலாபம் என கருத்திற்கொள்ளாது அவற்றை பாராட்டி ஒத்துழைக்க வேண்டிய கடப்பாடு முஸ்லிம்களுக்கின்றது. 

இதுவரைக்கும் இணையங்கள் மூலம் செய்து கொண்டிருந்த இப்போரட்டம் நாடளாவிய ரீதியில் போஸ்டர்கள் வரை முன்னேறியிருக்கின்றது. இணையங்கள் மூலம் நபர்கள் இனங்காணப்படாத முறையில் மறைவாக நிறைவேறிய விடயங்கள் இன்று பகிரங்கமாக நடைபெருவது அவர்களது முஸ்லிம் விரோத செயல்பாடுகளுக்கு தேசிய ரீதியில் கிடைத்த வெற்றியினை உறுதிசெய்வதாக இருக்கின்றது. அதன் ஒரு படி மேலாக முஸ்லிம்களை கேவலமாக சித்தரித்து ஒட்டப்பட்ட பதாதைகள் முஸ்லிம் சமூகத்தின் உணர்ச்சிகளை உறசிப்பார்க்கும் ஒரு செயலாகவே பார்க்க முடிகின்றது. இது ஒரு ஆரம்பம் மாத்திரமே என்று கூறலாம்.

பௌத்த பயங்கரம் தனது நிகழ்ச்சி நிரலை மிக நேர்த்தியான முறையில் ஒழுங்கமைத்து முன்னேறிக் கொண்டிருக்கின்றது. இலங்கை முஸ்லிம்களால் மேற்கொள்ளப்பட்ட காத்திரமான நடவடிக்கைகளை பாராட்டாலும் இருக்க முடியாது. எனினும் இதற்கு முன்னர் ஏற்பட்டது போன்ற இனக்கலவரங்கள் ஏற்படுமிடத்து ஏற்கனவே வெளியான அறிக்கைகளின் திகதியும் இடமும் திருத்தியமைக்கப்பட்டு அச்சிற்கும் ஊடகத்திற்கும் செல்வதற்கும் தயாராகவே இருக்கும் என நினைக்கின்றேன். (அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்) 

இது ஒரு சிரு கும்பலின் வேளை. இனக்கலவரத்தில் ஈடுபட்டவர்கள் பிற பகுதிகளில் இருந்து பஸ்களிலும் வான்களிலும் கொண்டுவரப்பட்டனர். இந்தப் பகுதியில் வாழ்ந்த சிங்களவரும் முஸ்லிம்களும் எப்போதும் ஒரு தாய் பிள்ளைகள் போலவே வாழ்ந்து வந்தனர். நடந்து முடிந்த கசப்பான சம்பவத்தை மறந்து முன்பு போலவே ஒற்றுமையாக வாழ இருசாராரும் விரும்புகின்றனர். புதிதாக பதவியேற்ற பொலிஸ் அதிகாரிக்கு நிலமையினை கட்டுப்படுத்தக் கூடிய அதிகாரங்கள் சரிவர வழங்கப்பட்டிருக்கவில்லை...... என்பன போன்ற அறிக்கைகள் இருதரப்பிலிருந்தும் வெளியாகுவதற்கு தயாராகவே இருக்கும்.

குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம் சமூகம்

இலங்கை முஸ்லிம் சமூகம் இரண்டுவித குற்றங்களுக்கு அல்லாஹ்வினால் தண்டிக்கப்படலாம். அதில் ஒன்று தணிப்பட்டதாக இருப்பினும் மற்றையது முஸ்லிம் சமூகம் சார்ந்ததாகும். அது தான் நாம் போற்றிப் பின்பற்றுகின்ற தூய இறைவழிகாட்டலை எமது மற்ற சகோதர இனங்களுக்கு எத்திவைக்காத வரலாற்றுக் குற்றமாகும். அதன் கொடுமையினைத் தான் நாம் தற்போது உணர்ந்து கொண்டிருக்கின்றோம். மற்றையது நாம் பெயரளவிலே முஸ்லிம்களாக இருக்கின்றோம். எமது அன்றாட செயல்பாடுகளுக்கும் இஸ்லாம் இயம்புகின்ற வரையரைகளுக்கும் மலைக்கும் மடுவிற்கும் இடையிலான இடைவெளியாகும்.

முஸ்லிம்கள் பெரும்பாண்மையாக வாழ்கின்ற அரபு நாடுகளில் இஸ்லாமியப் பண்பாடுகளும், இஸ்லாமிய ஷரீஆவும் தூயமுறையில் அமுலில் இருக்குமாயின் அங்கு தொழில் நிமித்தம் செல்கின்றவர்கள் குறைந்த பட்சம் இஸ்லாம் பற்றிய நல்ல செய்திகளுடனாவது தமது நாடுகளுக்கு திரும்புவார்கள். ஆனால் நிலைமை வேறுவிதமாகவே இருக்கின்றது. 

இதனையே யூசுப் இஸ்லாம் புனித இஸ்லாத்தை தனது வாழ்வாக ஏற்றுக்கொண்டதும் (நான் அல் குர்ஆனை படித்தே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன். முஸ்லிம்களை பார்த்திருப்பேனேயாயின் இஸ்லாத்தில் நுழைந்திருக்க மாட்டேன் என்று) கூறிய வார்த்தைகள் இன்றைய முஸ்லிம்களின் நிலையினை எப்படியிருக்கின்றது என்பதற்கு போதுமான சான்றாகும்.

உலகம் இன்று ஏதோவொரு வகையில் இஸ்லாத்தையும் இஸ்லாமிய போதனைகளையும் கற்றுக்கொண்டு தான் வருகின்றது. இதனால் தான் இன்று இஸ்லாத்தை நோக்கி மாறுகின்றவர்களின் எண்ணிக்கை முன்பொருபோதுமில்லாத அளவு கூடிக்கொண்டே செல்கின்றது. மறுபக்கத்தில் இஸ்லாத்திற்கெதிரான கெடுபிடிகளும் தன்பாட்டிற்கு வளர்ந்து வருகின்றன. முன்பொருகாலத்தில் இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்ற வாதம் பொய்யாகி, இன்று எந்த துப்பாக்கியும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள யாரையும் நிர்பந்தித்ததாக எங்கும் காணமுடியவில்லை. கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் படித்த மற்றும் உலகின் பிரபலங்கள் இஸ்லாத்தில் இணைந்து கொண்ட ஆண்டாக கடந்த 2012ம் ஆண்டு அறியப்படுகின்றது.

எனவே இன்று தேவைப்படுவதெல்லாம் அழகிய பண்பாடுகளும் இஸ்லாமிய நடைமுறைகளும் தான். இஸ்லாம் இயம்புகின்ற பழக்கவழக்கங்கள் மாற்று மத சகோதரர்களிடத்து எப்போது எந்த சந்தர்ப்பத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது தெரியாது. எனது எகிப்து நன்பர் ஒருவர் கூறிய ஒரு சிறு சம்பவத்தை உங்களுடன் பகிந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.

ஒருவர் தொழுகைக்காக வுழு செய்து கொண்டிருப்பதை கிருஸ்த்தவ சகோதரர் ஒருவர் அவதானித்துக் கொண்டிருந்திருக்கின்றார்.  அதன் போது இறுதியில் தனது கைவிரல்களை கால் விரல்களுக்கிடையில் இட்டு காலை கழுவச்செய்திருக்கிரார். அப்போது அவர் அருகில் சென்ற கிருஸ்த்தவ நன்பர் ஏன் இவ்வாறு செய்கின்றீர் எனக் கேட்க, நாம் தொழகைக்கு தயாராகும் போது இவ்வாறு சுத்தம் செய்ய ஏவப்பட்டுள்ளோம் என பதிலலித்திருக்கின்றார். 

இதைக் கேட்ட அந்த கிருஸ்த்தவ சகோதரர் உடனே தானும் இஸ்லாத்தை ஏற்றகவேண்டும் என இஸ்லாமிய நண்பரிடத்து கேட்டிருக்கிறார். ஏன் உங்களிடம் இந்த திடீர் மாற்றம் எனக்கேட்க 'தனது காலில் ஒருவித நோய் ஏற்பட்டிருக்கின்றது. மறுத்துவரிடம் சென்றபோது உங்கள் கால் விரல்களுக்கிடையில் சரியாக சுத்தம் செய்யப்படாததினால் நீங்கள் உங்களது கால்கலையே இழக்க நேர்ந்திருக்கலாம். ஆனால் சரியான நேரத்தில் சிகிச்சைக்காக வந்ததினால் காப்பாற்றப் பெற்றீர்கள். தொடர்ந்து தினமும் உங்களது பாதங்களை குறைந்தது 15 நிமிடமாவது தண்ணீரில் இருக்கச் செய்வதோடு குறைந்தது 5 தடவைகளாவது உங்களது கால் விரல்களுக்கிடையில் நன்றாக சுத்தம் செய்யுமாறு என்னை வேண்டினார் எனக் கூறிவிட்டு நான் ஆரம்பத்திலே ஒரு முஸ்லிமாக இருந்திருப்பின் இந்த நிலை என்கேற்பட்டிருக்காதல்லவா' என்று தான் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கான காரணத்தை விளக்கியிருக்கிறார்.

நான் இங்கு இதனை எதற்கு கூறினேன் என்றால் இஸ்லாத்தின் ஒவ்வொரு பகுதியும் ஏதோ ஒரு வகையில் மற்றவர்களுக்கு அவசியமாக இருக்கலாம். ஆனால் அவை மற்றவர்களிடம் போய்ச் சேறுவதற்கு முதலில் நாம் தான் தடையாக இருக்கின்றோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையில் குறிப்பாகவும் உலகளவில் பொதுவாகவும் இஸ்லாமும் முஸ்லிம்களும் தவராகவே புரிந்து கொள்ளப்பட்டிருக்கின்றனர். இன்றைய முஸ்லிம்களே இதன் முதல் தர குற்றவாளிகள். 

இன்றைய முஸ்லிம்களுக்குள்ள சவால்

இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்குமான சவால்கள் ஒன்றும் புதியதல்ல. ஆனால் அவற்றை எதிர்கொள்ள தகுதியற்ற ஒரு சமூகமாக இன்றைய முஸ்லிம் சமூகம் இருப்பதுவே பரிதாபகரமான நிலையாகும். ஏதும் ஒரு பிரச்சினை பெரும்பான்மை சமூகத்திடமிருந்து வரும்போது இது நம்மவர்களுக்கு தேவையா என்று எரிச்சல்படுகின்ற ஒரு சமூகத்துடனே நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். உதாரணத்திற்கு ஹலால் சின்னத்திற்கான எதிர்ப்பு பிரச்சினையாக வந்த போது ஒரு சிலரின் மனநிலை இவ்வாரே காணப்பட்டமை எமது சமூகத்தின் துர்ப்பாக்கிய நிலையை எடுத்துச் சொல்லப் போதுமானதாகும்.

ஹலால் அங்கீகாரப் பிரச்சினை இல்லாதிருப்பின் பிரிதொரு விடயத்தை பெரிதுபடுத்தி முஸ்லிம் சமூகத்திற்கு அழுத்தங்களை கொடுத்திருப்பார்கள். பள்ளிவாயில்கள், அரபு மத்ரஸாக்கல், இஸ்லாமிய ஹிஜாப் முறை, இன்னும் பல இவர்களது நிகழ்ச்சி நிரலில் இருக்கவே செய்கின்றன. எனவே எந்ந சிறிய பிரச்சினையாக இருப்பினும் நாம் இவற்றை முஸ்லிம்கள், இலங்கையர்கள் என்ற வட்டதில் இருந்தே சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

முஸ்லிம்களின் பொருளாதாரத்தை குறிவைத்து ஒரு பாரிய நிகழ்ச்சித் திட்டம் தயாரிக்கப்பட்டு விட்டதனை தெளிவாக புரிந்து கொள்ள கடமைப்பட்டிருக்கின்றோம். இதனை எதிர்கொள்வதற்கு முஸ்லிம்களிடம் வஹியின் பலம் இருக்கவே செய்கிறது. அது தான் இஸ்லாம் கற்றுத்துறுகின்ற வியாபார கொடுக்கல் வாங்கள் முறையாகும். வியாபாரத்தை ஒரு இபாதத்தாக இறைவணக்கமாக நோக்குகின்ற நிலை உருவாக வேண்டும். வியாபாரிகள் மூலமாகவே இந்த நாட்டில் இஸ்லாம் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த வியாபாரிகளே இஸ்லாத்திற்கானதும், இஸ்லாமிய பொருளாதார அமைப்பிற்கும் சவாலானவர்களாக ஒரு போதும் இருக்கக் கூடாது.

நாம் தூய இஸ்லாமியர்களாக இருப்பது முஸ்லிமல்லாதவர்களுக்கு எப்போதும் ஒரு பிரச்சினையாகவே இருக்கும். இதனையயே பொது பல சேனா அமைப்பின் செயலாளர் அண்மைய பத்திரிகையாளர் சந்திப்பின் போது தெளிவு படுத்தியிருந்தமை ஒன்றும் எமக்கு புதிய செய்தியல்ல. ஒரு முஃமின் எப்போதும் சவால்களை சந்தோஷமாக ஏற்றுக் கொள்வான். 
அவசியப்படும் நல்ல மாற்றங்கள்.

சில விடயங்களில் நிச்சியம் முஸ்லிம்களிடம் நல்லதொரு மாற்றம் ஏற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். குறிப்பாக இறைச்சிக் கடை நடத்துவர்கள் கருத்தில் கொள்ள வேண்டி சில விடயங்கள் இருக்கின்றன. 

இறைச்சிக்கடைகளில் சுத்தம் சம்பந்தமாக நம்மவர்களே திருப்த்திகரமான நிலையில் இல்லை என்பது பொதுவானதொரு அபிப்பரயமாகும். மாடுகள் அறுக்கின்ற விதம், அறுக்கப்பட்ட மாடுகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள விதம், இறைச்சி வாங்குபவர்களுக்கு அது பரிமாறப்படுகின்ற விதம், இறைச்சிக் கடையில் பணியாற்றுகின்றவர்களின் ஆடையமைப்பு, சுத்தம் போன்ற இவை எல்லாவற்றிலும் மாற்றம் நிச்சியம் தேவைப்படுகின்றது.

மாடுகளை வணங்கி வழிபடுகின்ற ஒரு சமூகத்தின் மத்தியில் வாழ்கின்ற நாம் இது சம்பந்தமாக கூடுதல் கரிசனை காட்டவேண்டும். வெளிநாடுகளில் இறைச்சிக் கடைகளில் பின்பற்றப்படுகின்ற சில ஒழுங்குகளையாவது கட்டாயம் நாம் கடைபிடிக்க வேண்டும். கூறிய கத்தியினால் அறுக்கப்படுகின்ற போது வெளியாகின்ற பெருந்தொகையான இரத்தித்தினால் உள்ள விஞ்ஞான ரீதியான நலன்களை தமது கடைகளில் மும்மொழியிலும் பார்வைக்காக வைப்பது நல்ல பல விளைவுகளை கொண்டுவந்து தரும். 

எழும்பு தோல்போன்ற விற்பனையாகாத பகுதிகளை வீதியோரங்களில் எறிந்து விடுவதால் ஏற்படும் சுகாதாரக்கேடுகள் மாத்திரமல்லாம் முழு முஸ்லிம் சமூகமும் விமர்சனத்திற்குள்ளாகின்ற சந்தர்ப்பங்கள் ஏராளமிருக்கின்றன. இவைகள் குத்பாக்களிலும் பயான் நிகழ்ச்சிகளிலும் பலதடவைகள் சொல்லப்பட்டாலும் திருந்தாத ஒரு சமூகமாகவே நாம் இருக்கின்றோம். 

இதன் மறுபக்கமாக சிந்தித்துப்பாருங்கள். முஸ்லிம்கள் வாழ்கின்ற பகுதிகளில் முஸ்லிம்கள் விரும்பாத வியாபார நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டால் நாம் எவ்வளவு மனவேதனையடைவோம். எனவே நாமும் எமது நடவடிக்கைகள் மூலம் மற்றவர்கள் புண்படாத வகையில் நடந்து கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

ஹலால் ஏன் சவாலானது..?

ஹலால் விவகாரம் பெரும்பான்மையினத்தவருக்கு புரிந்தும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விவகாரமாக காண்பிக்கப்பட்டது ஒரு துரதிர்ஷ்டமான சம்பவமாகும். ஆரம்பத்தில் ஹலால் பொருட்கள் மதமாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக இஸ்லாமிய மந்திரம் கலந்த ஒன்றாக அப்பாவி பௌத்த மத்தவர்களிடத்து அறிமுகம் செய்யப்பட்டது. இன்றும் அவ்வபிப்பராயம் பல அப்பாவிகளிடத்து இருப்பதனை அறியமுடியுமாயுள்ளது.

பின்னர் முஸ்லிம்களாலும் முஸ்லிமல்லாத படித்தவர்களாலும் ஹலால் விடயமாக தெளிவுகள் வழங்கப்பட்டமை நல்ல பல மாற்றங்களை ஏற்படுத்தியிற்று. அவர்களது இந்த நல்ல முயற்சியை பாராட்டாமல் இருக்;க முடியாது. உலமாக்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆரோக்கியமான பத்திரிகையாளர்கள் சந்திப்புகள் மேடைப் பேச்சுக்கள் மூலம் அவர்களது பங்களிப்புகளை ஓரளவு செய்துள்ளார்கள் என்ற திருப்த்தியும் இருக்கவே செய்கிறது. என்றாலும் இது சம்பந்தமான விவாதங்களும் முஸ்லிம்களுக்கெதிரான விஷமப்பிரச்சாரங்களும் குறைந்து விட்டன என்று கூறமுடியாது.

பொதுபல சேனாவிற்கு நன்றிகள்

உண்மையில் இலங்கை முஸ்லிம்கள் பொதுபல சேனா மற்றும் பௌத்த தீவிரவாத அமைப்புகளுக் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றனர். (இது எனது தப்பட்ட கருத்தாகும்) ஹலால் விவகாரத்தை இவர்கள் பெரிதுபடுத்திய பின்னர் தான் முஸ்லிம்கள் தங்களது தார்மீக கடமை பற்றி சிந்திக்க வழியமைத்துக் கொடுத்தார்கள்:- 

* இயக்கங்களாகவும் குழுக்களாகவும் கட்சிகளாகவும் பிரிந்து செயல்பட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்கள் இவற்றையெல்லாம் மறந்து நாம் ஒன்றுபட வேண்டும் என்ற உண்ணத செய்தியினை உணர்த்தினார்கள். 

* ஹலால் ஹராம் பற்றி மாற்று மதத்தவருக்கு தெளிவை பெற்றுக் கொடுக்க ஒரு சந்தர்ப்பத்தை உறுவாக்கித் தந்தார்கள்.

* இதுவரை காலமும் இஸ்லாம் பற்றியும் இஸ்லாமிய இறை கொள்கை பற்றியும் தெளிவை பெற ஆர்வமற்றிருந்த பௌத்தர்களுக்கு அதற்கான ஆர்வத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். 

* தான் உண்டு தன்பாடுண்டு என்றிருந்த முஸ்லிம்களுக்கு தனது சமூகம் சார்ந்த சிந்தனையோடு வாழ்வதன் அவசியத்தை உணர்த்தினார்கள்.

* தங்களது தேவைகளோடும் கொடுக்கள் வாங்கள்களோடும் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த பௌத்தர்களுடனான எமது தொடர்பு, அவர்களுக்கும் தூய இஸ்லாமிய செய்தியினை எத்திவைக்க ஒரு வாய்ப்பினை அமைத்துக் கொடுத்தார்கள்.

* அன்றாட தேவைகள் நிமித்தம் மாத்திரம் பேசிய பௌத்த சகோரதர்கள் இஸ்லாமிய விவகாரங்கள் சம்பந்தமாக அறிவையும் தெளிவையும் வேண்டி தொடர்பு மேற்கொள்ள இடம் அமைத்துக் கொடுத்தார்கள்.

* இன்றைய முஸ்லிம்கள் பெயரளவில் மாத்திரம் முஸ்லிம்களாக இருக்காமல் தங்களது அனைத்து காரியங்களிலும் உண்மையான முஸ்லிம்களாக இருக்கவேண்டும் என்பதை உணர்த்தினார்கள்.

* ஹலால் என்பது ஒரு மாயாஜால வார்த்தையள்ள, பதிலாக சுத்தம் சுகாதாரம் பேணப்பட்ட நவீன விஞ்ஞானம் உறுதியளித்து வேண்டுகின்ற ஒரு விடயத்தின் சூத்திரம் என்பதை முழு இலங்கைக்கும் புரியவைக்க சந்தாப்பம் அமைத்துக் கொடுத்தார்கள்.

* இன்னும் பல... விரிவஞ்சி விடுகின்றேன். மொத்தத்தில் பொது பல சேனாவினரே உங்களுக்கு எங்களது நன்றிகள். நண்பர்கள் யார் பகைவர்கள் யார் என்பதை தெரியப்படுத்திமைக்காக விஷேட நன்றிகள்.

இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக பாரிய யுத்தம் ஒன்றை ஏற்படுத்த யூத நரிகள் அமெரிக்காவில் இரட்டை கோபுரம் மீது தாக்குதல் நடத்தி அதனை அறியப்படாத புரியப்படாத அல்கைதாவின் தலையில் போட்டார்கள். உலகம் பூரா உள்ள மக்கள் இஸ்லாம் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் அல்குர்ஆன், அஸ்ஸுன்னா பற்றியும் பலவாரு கதைத்தார்கள். இஸ்லாம் பற்றியும் அல்குர்ஆன் ஸுன்னாபற்றி படித்தார்கள். இதன் விளைவாக பல லட்சக்கணக்கான மக்கள் இஸ்லாத்தில் நுழைவதற்கான வாயிலை யூதர்களே திறந்து கொடுத்தார்கள். 

அதேபோன்று நிச்சயமாக பொதுபல சேனாவினரின் அண்மைய நடவடிக்கைகள் பௌத்த மக்களை இஸ்லாம் பற்றி கற்பதற்கான வாயிலைத் திறந்துவிடும் என்பது மாத்திரம் உறுதி. இவர்களது செயலினால் பல பௌத்த சகோதர்கள் ஆத்தரமும் கவலையும் அடைந்திருக்கிறார்கள் என்பது அவர்கள் எம்முடன் கதைக்கும் போது தெரிகின்றது. எதுவானாலும் நல்ல முடிவைத் தறுமாரு பிரார்த்திப்பது முஸ்லிம்களது கடமையாகும்.

அவதானம் பிரதானம்

இலங்கையில் தற்சமயம் காணப்படுகின்ற நிலைமையினை கருத்திற் கொண்டு மிக அவதானமாக கருமமாற்ற கடமைப்பட்டுள்ளோம். இது விடயத்தில் இலங்கை முஸ்லிம்கள் காட்டுகின்ற பொருமை அனைவராலும் பாராட்டப்படுகின்றது. நிச்சயமாக நாம் பொருமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் பிரார்த்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். அல்ஹம்துலில்லாஹ் பௌத்த தீவிர வாதிகளின் எண்ணம், தேவை என்ன என்பது இன்று பெரும்பாலான இலங்கையர்களால் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது. 

இதன் பிண்ணனியில் பல காரணங்கள் இருப்பினும், முஸ்லிம்களை ஆத்திரமூட்டி ஓர் இனக்கலவரத்தை வலுக்கட்டாயமாக ஏற்படுத்தி, அதன்மூலம் முஸ்லிம்களிடம் ஆயுதங்கள் இருப்பின் அவற்றை வெளிக்கொணர்வதற்கான ஓர் முயற்சி என்பது மாத்திரம் உறுதியாகிவிட்டது. முஸ்லிம்களிடம் கூரிய ஆயுதமோ கூரிய புத்தியோ இல்லை என்பது பொதுவான (உண்மையான) ஒரு சொல்லாகும். எனவே இவை இரண்டினதும் தேவை முன்பைவிட தற்போது மிக அவசியமானது என்பதில் என்னுடன் பலர் உடண்படுவர் என நினைக்கின்றேன்.

ஓன்றுபட்டால் உண்டு வாழ்வு

அண்மைய நிகழ்வுகளை உற்று நோக்குகின்ற அனைவரும் ஒரே ஒரு விடயத்தை மாத்திரம் உறுதியாகக் கூறுகின்றனர். அது தான் நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்பதாக. நிச்சியமாக உண்மையான முஸ்லிம்களுக்கு இதனை அடைந்து கொள்வது மிக இலகுவானதாகும்.

ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உறுதியான ஒரு கட்டடத்தை போன்ற மிக நெருக்கமான இறுக்கமான ஒரு சமூகத்தை உறுவாக்கிக் காட்டினார்கள். இதற்காக அவர்கள் மாநாடுகள், கருத்தரங்குகளை நடத்தவில்லை. தமது தோழர்களுக்கு உடற்பயிற்சிகளோ, இரானுவப் பயிற்சிகளோ வழங்கவில்லை. 

மாறாக தமது தோழர்களை தொழுகைக்காக நிற்கும் போது வரிசையில் (ஸப்புகளில்) நேராக நெருக்கமாக நிற்குமாறு கூறினார்கள். நீங்கள் பிரிந்து பிரிந்து நிற்பதால் உங்கள் உள்ளங்களில் பிளவுகளும் பிரிவினைகளும் ஏற்படும் என்ற எச்சரித்தார்கள். இதன் பலனை ஆழமாக அறிந்திருந்த உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தொழுகைக்காக நின்றால், மஃமூம்கள் வரிசையில் (ஸப்புகளில்) நேராகவும் நெருக்கமாகவும் நிற்காதவரை தொழவைக்கமாட்டார்கள். 

எனவே பள்ளிகளில் கடமையாற்றுகின்ற இமாம்களே! உலமாக்களே! எமது சமூகத்தை பிளவுகள் பிரச்சினைகளிலிருந்த காப்பாற்ற மிக இலகுவான ஒரு வழி எம்முன்னுள்ளது. இது வஹியின் வழிகாட்டல் என்பதை நாம் ஞாபகத்தில் வைத்துக் கொள்வோமாக. முடிவுகளை நல்ல முடிவுகளாக அமைத்துத் தர அல்லாஹ்வைப் பிரார்த்திப்போமாக.




4 comments:

  1. காலத்துக்கேற்ற நல்ல கட்டுரை ஒன்ரைத்தந்த உங்களுக்கு என் நன்றிகள்.மேலும் உங்களுடன் சேர்ந்து நானும் பொது பல சேனாவுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைக் கூறிக் கொள்கின்றேன்.

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ். மிக ஆழமான ,தூர நோக்குக்கொண்ட கட்டுரை.காலத்தின் தேவை உணர்ந்து எழுதப்பட்டுள்ளது.பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. marvelous. well done,.ovvoruvarum islathil irundu kondu islam sonna piraharm sindhiththu valanum.islathuku veliel(out side)irundu kondu ethaium sindhika kudathu.inda problem allah atpadu seithathu because non muslimgalukana oru dawwath.very soon buddhist people come to our islam.many thanks to bodu bala sena for open the doors to learn to the great islam for their people

    ReplyDelete
  4. Assalamualaikum,Brother Dilsaath Mohammed (Gaffori)

    Alhamthulillah and Jeshakallah Hairan for your writtings. This should be translated in to Sinhala and taken in to Buddhist head and mind.

    ReplyDelete

Powered by Blogger.