தாய்லாந்தில் இஸ்லாமிய போராளிகளுடன் அரசு சமாதான ஒப்பந்தம்
தெற்கு தாய்லாந்தில் இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் 2004-ம் ஆண்டு முதல் கலவரங்கள் நடந்து வருகிறது. கலவரத்தில் இதுவரை 5000-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியாக முதல் முறையாக அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
கோலாலம்பூரில் இன்று தாய்லாந்து பிரதமர் 'இங்க்லக் ஷினவத்ரா'வும், மலேசியா பிரதமர் 'நஜிப் ரசாக்'கும் சந்தித்தனர். இதையொட்டி தாய்லாந்து தேசிய பாதுகாப்பு கவுன்சில் பொதுச்செயலாளர் பாரடானும், அந்நாட்டின் 'தேசிய புரட்சிகர முன்னணி' என்ற இஸ்லாமிய குழுவின் தலைவர் ஹசன் தாயிபும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, ஒருவரையொருவர் கைகுலுக்கிக் கொண்டனர்.
தாய்லாந்தில் 'தேசிய புரட்சிகர முன்னணி' உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் இயங்கி வருகின்றன. மலேசிய அரசாங்கம், தாய்லாந்து அரசுக்கும் இஸ்லாமிய குழுவுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்த உதவி செய்து வருகிறது.

Post a Comment