Header Ads



இனி புதிதாய் ஓர் அரசியல் பிரவேசம்..!


(MIFRAAZ SHAHEED, TIANJIN MEDICAL UNIVERSITY - CHINA)

முஸ்லிம் சமூகத்தின்  மீதான இன்றைய அடக்குமுறைகளை உன்னிப்பாக  அவதானிக்கின்ற   போது வெளிப்படையான  உண்மை     ஒன்றை நாம் புரிந்து கொண்டு தான்  ஆகவேண்டும். அதுதான்  குறிப்பிடத்தக்க  அளவு  அரசாங்கத்தின்  மீது  அழுத்தங்களை    பிரயோகிக்க  முடியாத  முஸ்லிம் அரசியலின்  நிலை.   வழிய  வந்தால்  கிழவி,  விலகி  சென்றால் குமரி என்பது  இலங்கை  அரசியலில்   சரியாக   தான்  இருக்கிறது. இது  தான்  இன்றைய  முஸ்லிம்  கட்சிகள்  தொடர்பான  அரசாங்கத்தின் நிலைப்பாடு.

ஒவ்வொரு முறையும் எமது  முஸ்லிம் அமைச்சர்கள்  அரசாங்கத்துடன் இணையும் பொது  எதிர் கட்சி  அரசியலில்  இருந்து  கொண்டு  முஸ்லிம் சமூகத்துக்கு  ஒன்றுமே செய்ய  முடியாது,  கிடைப்பதை வைத்து  மக்களுக்கு  ஏதாவது  செய்யலாம்  என்ற நோக்கத்தில் தான்  செல்கிறார்கள்.  ஆனால்  அரசாங்க வரிசையில்  அமர்ந்த  பிறகு  முஸ்லிம்  சமூகத்துக்காக  பேசுகின்ற  உரிமையை  கூட இழந்து  விடுகின்றார்கள்.  எதிர்  கட்சியில் இருந்தால்  கூட  பிரச்சினைகளின்  போது  பேசி  இருப்பார்கள்.  உண்மையில்   அவர்களையும்  குறை  கூற  முடியவில்லை. அதுதான்  அவர்களின்  நிலை.

அரசியலுக்கு வெளியே இருந்து கொண்டு எவ்வளவுதான் பேசினாலும்  அங்கே  போனால்  பெட்டிப்பாம்பாக  அடங்கித்தான்  ஆகவேண்டும்  என்பது இலங்கை  அரசியல் சாசனத்தில்  எழுதப்படாத  விதியாக  போய்விட்டது.  இதனால்  தான்  என்னவோ உடைக்கப்பட்ட  பள்ளிவாசல்கள்  தொடர்பான  சரியான  தரவுகளை  அரசாங்கத்திடம்  சமர்ப்பிக்க முடியாமல்  போனதும்  இதற்கு ஒருபடி  மேலே  சென்று  இலங்கையில்  எந்த  பள்ளிவாசலும்  உடைக்கப்படவில்லை  என்று  அறிக்கை  விட்டதுமோ  தெரியவில்லை. இது தான் யதார்த்தம்.

ஆனால் மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் இல்லை என்றால் சந்திரிக்காவின் அரசாங்கமே இல்லை என்ற ஒரு காலம்  இருந்தது. இப்போது மரம் என்று சொல்லிக்கொண்டு இருப்பவர்கள்   எல்லாம் செடியாக கூட முளைக்காத ஒரு காலம். முஸ்லிம்கள் அஷ்ரபை தூக்கி நிறுத்தினார்கள், அஷ்ரப் அரசாங்கத்தை தாங்கிப்பிடித்தார்.சந்திரிக்காவின் அரசாங்கம் முஸ்லிம்களுக்காக  தலை சாய்த்தது. அஷ்ரப் சாணக்கியத்தால் சாதித்தார்.

இதை நன்றாக  விளங்கிய பேரினவாதிகள்  எந்த ஒரு சிறுபான்மை  கட்சியினதும்   தயவு  தாட்சண்யம் இன்றி  சிங்களவர்களை மையமாக  கொண்ட தனியான அரசாங்கமே  இன  ஒடுக்குமுறைக்கும்  அவர்களின்  நிறுவனமயப்பட்ட  அரசியலுக்கும்  காட்டு  தர்பாருக்கும்  வழி  கோலும்  என்ற உக்தியை  உன்னதமாக  புரிந்து  கொண்டார்கள்  அவர்களின்  சதியால்  முஸ்லிம்  அமைச்சர்கள்  பிரிந்து   சென்றார்கள்.  இதை  இன்றைய  அமைச்சர்கள்   புரிந்து  கொள்ள  வேண்டும். மாற்று  கருத்துகளை  கொண்ட பேரின வாத  கட்சிகள்  கூட  பிரிந்தன.

பிரிந்துசென்ற  எமது  ஒவ்வொரு அமைச்சரும் தன்னை  தலைவனாக வைத்து  ஒரு  புதிய கட்சியை  தொடங்கினார்களே  தவிர  சமூகத்தின்  தலைமைகளை  ஒன்றிணைத்து யாருமே  ஒரு  கட்சியையும் தொடங்கவில்லை  என்பது,  ஒவ்வொருவரும்  சமூக  ஒற்றுமையை  கருத்தில்  கொள்ளாமல்  தமது  அரசியல் இருப்பையே உறுதி  செய்தார்கள்  என்பதற்கு  சான்றாகும். அன்று  அவர்கள்  அவ்வாறு  செய்திருந்தால்  இன்று இவ்வளவு பாரிய  சமூக  அரசியல்  இடைவெளியை  தவிர்த்திருக்கலாம் அவர்களும்  நினைத்தவாறு  வளர்ந்திருக்கலாம்.

அன்றைய தமிழரசு கட்சி மீதும்,  தந்தை  செல்வா  மீதும்    பற்றுக்கொண்டு அரசியல்  பிரவேஷம்  கண்ட  அஷ்ரப்  அவர்கள்  தான் உருவாக்கிய  கட்சிக்கு என்ன  நோக்கத்தில்  தான்  முஸ்லிம்  காங்கிரஸ்  என்று  பெயர் வைத்தார்களோ தெரியவில்லை,இன்றைய  அமைச்சர்கள்  தாங்கள்  உருவாக்கிய ஒவ்வொரு  கட்சிக்கு  பின்னாலும்  காங்கிரஸ்   என்று சேர்த்து  எழுத  பழகிக்கொண்டார்கள்.  

இது ஒரு anti congress phobia ஆக உருவெடுத்து எமது   தந்தைமார்களும்   தாய்மார்களும்  ஏதாவது  ஒரு  காங்கிரசுக்குத்தான்  ஒட்டு போடுவேன்  என்று  ஒற்றைக்காலில்  நிற்கிறார்கள். அவர்களின் அனுபவமுள்ள சிந்தனைக்குள்   அர்த்தங்கள்   இல்லாமல்  இல்லை.  இருக்கின்ற  காங்கிரஸ்களும்   இல்லாம போனால்  ஏற்படப்போகும்  அரசியல் வெற்றிடத்தை இனி எப்போதுமே நிரப்பமுடியாமல்   போய்விடுமோ   என்ற  உள்ளார்ந்த  பயம்  அவர்களை  ஆட்கொண்டிருக்கின்றது. இதுவே  காங்கிரஸ்  ஆதிக்கத்தின்  ஆயுட்காலத்தை  வளர்த்துக்கொண்டு  செல்கின்றது.  

இருக்கின்ற  காங்கிரஸ்களை  இனிமேலும் ஒன்றிணைப்பது சாத்தியம்  இல்லாமல் போனால், முஸ்லிம்களின் வாக்குப்பலம்  இனிமேலும்  பலவீனப்படுமேயானால், முஸ்லிம்களின்  வாக்கு வங்கிகள்  பேரினவாதிகளினால் திட்டமிடப்பட்டு  கொள்ளை அடிக்கப்படுமேயானால், சமூகத்தின்  பல்வேறு  தலைமைகளை  ஒன்றிணைத்த  ஒரு  புதிய  அரசியல்  பிரவேசம் எதிர்காலத்தில்  கண்டிப்பாக   வருவதை யாராலும் தடுக்க  முடியாது.

அதற்கான  தலைமைகளும்  ஆட்பலமும் சிந்தனை பலமும்  சர்வதேச  அரசியல் வழிகாட்டல்களும் எமது  சமூகத்துக்குள் இல்லாமல்  இல்லை. ஆனால்  தாமும் காங்கிரஸ் லேபலுடன்  prado   இல்  வந்து  இறங்குவதையோ  அல்லது மஞ்சள்   கலந்த  பச்சை  மாலையுடன்   பவனி  வருவதையோ  விரும்பாமல்  இன்னும்  அவதானிகள்  அணியில் தொடர்ந்து  இருந்து  கொண்டு  அறிக்கை  எழுதிக்கொண்டு  இருக்கிறார்கள்.   

முஸ்லிம்  சமூகத்துக்கு  அல்லாஹ்   மிக  விரைவில்  வழிகாட்டுவான்  இன்ஷா  அல்லாஹ்...!!!

4 comments:

  1. They are deaf and blind and they will never listen any thing. They only thinking of their own position and their pockets. Never their Muslim Umma.

    We can never expect these Muslim Politicians come to unity.

    It is timely need to come some people to think about the Muslims and their beings in SL with dignity and respect...!

    Will they and who...???????????????

    ReplyDelete
  2. அன்று தலைவர் அவர்கள் சானக்கியம் செய்து காட்டினார்கள்
    இன்று ............... சொல்லில் மட்டும் காட்டுகிறார்கள்.

    பார்ப்போம் அல்லாஹ் இதற்கும் வழி வைத்திருப்பான். இன்ஷா அல்லாஹ்

    சரியான தலைமைத்துவம் வராமலா போகப்போகிறது.

    ReplyDelete
  3. ஜஸாகல்லாஹு கைர்.... இன்றைய காலநிலையில் இதுபோன்ற சிந்தனைகள் எமக்கு கட்டாயம் தேவை எமது அரசியல் வாதிகள் அல்லாஹ்வுக்காக அவனது தூதருக்காக அவனது தீனுக்காக தங்களது சுயவிருப்பு வெறுப்புகளை விட்டுவிட்டு சமூகத்துக்காக ஒன்றுபட முன்வரவேண்டும் இவர்களை ஒற்றுமைப்படுத்த அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவுடன் இணைந்து ஏனைய முஸ்லிம் அறிஞர்களும் முன்வரவேண்டும் தகுதியுள்ள அனைவர்மீதும் இது கட்டாய கடமை தனக்கு ஏன் இந்த வம்பு என்று ஒதுங்க வேண்டாம். நமது தலைவர் மர்ஹூம் அஷ்றப் அவர்களினால் ஸ்தாபிக்கப்பட்ட அரசியல் கட்சியையும் அதன் அனுகு முறையகளயும் கண்டு எமது அயல் நாடான தமிழ்நாட்டில் தமிழ் நாட்டு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் என்ற பேரில் ஒரு சமூக சேவை அமைப்பு ஆரம்பமானது அதன் வளர்ச்சி இன்று மனித நேய மக்கள் கட்சி என்ற பேரில் மாஷா அல்லாஹ் இரண்டு எம் எல் ஏ களைக்கொண்டு அரசியலில் சாதித்துக்கொண்டிருக்கிறது அதற்க்கு காரணம் அவர்கள் மார்க்க அடிப்படையில் பக்குவப்பட்டவர்கள் அவர்களுக்கிடையில் உறுப்பினர்களுக்கு மார்க்க பயிட்சியளிக்கப்படுகிறது மார்க்கம் இருந்தால் மனசாட்சி படி நடப்பார்கள் இங்கு மனிதனை கடவுள் என்று சொல்வதும் கும்பிடுவதுமான மார்க்க அறிவீனர்கள் அரசியலில் இருப்பதுதான் இத்தனைக்கும் காரணம். எனவே நல்ல படித்த சகோதரர்கள் தயவு செய்து முன்வாருங்கள் இருப்பவர்களை ஒற்றுமைப்படுத்துவோம் இல்லாவிடின் எல்லோரும் ஒன்றாகி புதிதாய் உருவாக்குவோம். அல்லாஹ் நமக்கு உதவுவானாகவும்

    ReplyDelete
  4. நீங்கள் சொல்வது சரிதான். அஸ்ரப் ஒரு அரசியல் சாணாக்கியன் மட்டுமல்ல ஒரு அரசியல் தீர்க்க தரிசியும் கூட அதனால்தான் தான் வளர்த்த கட்சியை ( காங்கிரஸ் ) அழித்துவிட்டு "நுஆ" வை ஆரம்பித்தார்.

    அந்த மனிதருக்கு நன்றாக தெரியும் ஆளாளுக்கொரு, ஊருக்கொரு காங்கிரஸ் வரும் என்று .

    அரண்டவன்( கிழக்கு முஸ்லிம்கள் ) கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று.

    ReplyDelete

Powered by Blogger.