Header Ads



சுவிஸ் வாழ் இலங்கை முஸ்லிம்கள் ஜனாதிபதி மஹிந்தவிற்கு கடிதம்


சுவிஸ்சர்லாந்தில் வாழும் இலங்கை முஸ்லிம்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபய ராஜபக்ஸ ஆகியோருக்கு கடிதமொன்றை அனுப்பிவைக்க தீர்மானித்துள்ளனர்.

சுவிஸ் - சூரிச்சில் இலங்கை முஸ்லிம்களினால் நடாத்தப்படும் மஸ்ஜித்துல் ரவ்ளா பள்ளிவாசலில் சனிக்கிழமை, 23 ஆம் திகதி மஹ்ரிப் தொழுகைக்குபின் கூடிய இலங்கைவாழ் முஸ்லிம்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ள கடிதத்தில் கையொப்பமிட்டனர். சுவிஸில் வாழும் இலங்கை முஸ்லிம்கள் மஸ்ஜித்துல் ரவ்ளா பள்ளிவாசலுக்கு சென்று குறித்த கடிதத்தில் கையொப்பமிடமுடியுமென பள்ளிவாசல் நிர்வாகத்தினர் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் தெரிவித்தனர்.

ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்டவுள்ள கடிதத்தில், இலங்கைக்கு அச்சுறுத்தலாக விளங்கிய பாசிசப் புலிகளின் பயங்கரவாதத்திற்கு முடிவுகட்டிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், அதுபோன்று இன ஐக்கியயத்திற்கு சவால் விடும் வகையில் நடைபெறுகின்ற சம்பவங்கள் தொடர்பிலும், முஸ்லிம் - சிங்கள ஒற்றுமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

1 comment:

Powered by Blogger.