Header Ads



திரள வேண்டிய தருணம்..!



(தம்பி)

'மாப்பிள இவருதான் - ஆனா, இவரு போட்டிருக்கிற ட்ரெஸ் (ஆடை) என்னோடதில்ல' என்கிற படையப்பா திரைப்படத்தின் பிரபல்யமான பகிடி பற்றி அறிந்திருப்பீர்கள். 'பொது பல சேனா அமைப்புக்கும் அரசுக்கும் தொடர்புகள் எவையும் இல்லை' என்று கூறப்படுவதைக் கேட்கும் போதெல்லாம் தவிர்க்க முடியாமல் - அந்த நகைச்சுவை நினைவுக்கு வந்து போகிறது.

முஸ்லிம் விரோத நடவடிக்கைகளில் அண்மைக் காலமாக - பொது பல சேனா என்கிற சிங்கள இனவாத அமைப்பு மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றமை குறித்து நாம் அறிவோம். முஸ்லிம்களுக்கெதிராக இரவு வேளைகளில் கள்ளத்தனமாக போஸ்டர்களை ஒட்டுவதில் ஆரம்பித்த இவர்களின் இனவாத நடவடிக்கையானது - இப்போது தொலைக்காட்சிகளில் விவாதம் என்கிற பெயரில் 'மல்லுக் கட்டுவது' வரை - வந்து நிற்கிறது. 

முஸ்லிம்களுக்கு எதிராக - பொது பல சேனா செயற்படத்தொடங்கிய காலகட்டத்தில் அரசாங்கம் 'வெட்டொன்று துண்டிரண்டு' பாணியில் நடவடிக்கை எடுத்திருந்தால், பொது பல சேனாவும், அதன் முஸ்லிம் விரோத செயற்பாடுகளும் இப்படி பூதம் மாதிரி வளர்ந்திருக்காது.

ஆனால், 'இப்படி வளர வேண்டும்' என்பதற்காகவே, பொது பல சேனாவின் அத்தனை நடவடிக்கைகளையும், அரசு – கண்டும் காணாமல் விட்டிருந்ததோ என்கிற சந்தேகம் அநேகமானோரிடம் உள்ளது. 

'பொது பல சேனாவுக்கும் அரசுக்கும் தொடர்புகள் எவையும் இல்லை' என்று அறிக்கைகள் விடுவதன் ஊடாக – தனது நேர்மையினையும், நிலைப்பாட்டினையும் அரசினால் நிரூபிக்க முடியாது. அப்படிச் சொல்லும் போதெல்லாம் படையப்பா திரைப்படப் பகிடி அல்லது 'அப்பன் குதிருக்குள் இல்லை' என்கிற கதைதான் தவிர்க்க முடியாமல் மக்களின் நினைவுக்கு வரும். 

'முஸ்லிம்களின் வர்த்தகத்தினை அழிப்பதுதான் – இவ்வாறான முஸ்லிம் விரோத செயற்பாடுகளின் இலக்காகும்' என்று மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் அண்மையில் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனாலும், முஸ்லிம்களின் வர்த்தக நடவடிக்கைகளை அழிப்பது 'மட்டும்'தான் இவர்களின் நோக்கம் என்று கூறினால் அது தவறாகும். அதற்கு அப்பாலும் இலக்குகள் இருக்கின்றன.

முஸ்லிம்களுக்கெதிரான இந்தக் கூத்துக்கள் - இன்று அல்லது நாளையுடன் நிறைவடையப் போவதில்லை. இது நீளும். அதற்குரிய அறிகுறிகள்தான் தெரிகின்றன. ஆனால், இவை குறித்து முஸ்லிம் அரசியல்வாதிகளோ, சிவில் அமைப்புக்களோ ஆக்கபூர்வமான அல்லது ஆரோக்கியமான நடத்தைகள் எவற்றிலும் இதுவரை வெளிப்படையாக ஈடுபடவேயில்லை.

முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் அதிகரித்துள்ள தற்போதைய காலகாட்டத்தில், முஸ்லிம்கள் அனைவரும் தமது தொழுகைகளில் 'குனூத்' ஓதி பிராத்தனைகளில் ஈடுபடுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த வேண்டுகோளானது - அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையினரின் கோமாளித்தனத்தினையே வெளிப்படுத்துவதாக உள்ளது. 

'குனூத்' ஓதுவது மட்டும்தான் நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கான ஒரே வழி என்றால், கடந்த வருடம் ஜெனீவா மாநாட்டில் ஜனாதிபதி ராஜபக்ஷவைக் காப்பாற்றுவதற்காக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையினர், ஏன் 'மடித்துக் கட்டிக் கொண்டு' வெளிநாடு வரை சென்று வந்தார்கள் என்று புரியவேயில்லை. ஜனாதிபதியைக் காப்பாற்றுமாறு தொழுகைகளில் 'குனூத்' ஓதிப் பிரார்தித்து விட்டுப் போயிருக்கலாமல்லவா?  

முஹம்மது நபி (லஸ்) அவர்கள் நெருக்கடியான அல்லது ஆபத்தான காலகட்டங்களில் தொழுகையில் குனூத் ஓதி – பிராத்தனைகளில் ஈடுபட்டதாக ஹதீஸ்கள் உள்ளன என்பது உண்மைதான். ஆனால், நபியவர்கள் வெறும் பிரார்தனைகளோடு மட்டும் நின்று விடவில்லை என்பதையும் நினைத்துப் பார்த்தல் வேண்டும். முஸ்லிம்களுக்கெதிராக அந்நியர்கள் படையெடுத்து வந்தபோது, நபியவர்கள் பிரார்த்தனைகளைப் புரிந்துகொண்டே, சமாதானத்தின் வழியாகவோ அல்லது யுத்தத்தின் மூலமோ எதிராளிகளை முகம் கொண்டார்கள் என்பதையும் நாம் எண்ணிப் பார்த்தல் வேண்டும்.

பொது பல சேனாவின் பெயரில் இடம்பெற்று வரும் முஸ்லிம் விரோத நடவடிக்கைகளின் பின்னால் - மிகத் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலொன்று ஒளித்து வைக்கப்பட்டுள்ளது. பொது பல சேனாவின் பின்னணியில் மிகப் பலம் வாய்ந்த கரங்கள் மறைந்திருந்து செயற்படுகின்றன என்பதை – நிகழ்வுகளை அவதானித்து வரும் குழந்தைகள் கூடப் புரிந்து கொள்வார்கள்.

முஸ்லிம் விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் பொது பல சேனாவுக்கு பாதுகாப்பு அமைச்சிலிருந்தே நிதி வழங்கப்படுவதாகவும், அந்த அமைப்பினை அரசாங்கமே ஊட்டி வளர்த்து வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தமை உன்னிப்பானதொரு செய்தியாகும். பொது பல சேனாவுக்கு அரசுதான் நிதியளிக்கிறது என்பதை மிகவும் பொறுப்புணர்வுடன் தெரிவிப்பதாகவும் மங்கள இதன் போது கூறியிருந்தார். ஆனால், அரசாங்கம் இந்தக் குற்றச்சாட்டை மறுத்திருந்திருந்தது.

நாட்டில் இனங்களுக்கிடையில் பாரிய கொதி நிலையொன்றினை பொதுபல சேனா ஏற்படுத்தி வருகிறது. இந்தக் கொதிப்பு எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் அபாயம் உள்ளது. அப்படியொரு துர்நிகழ்வு இடம்பெறக் கூடாது என்பதே நமது பிரார்த்தனையாகும். ஆனால், அரசும் ஆட்சியாளர்களும் இது விடயத்தில் அலட்டிக் கொள்வது போல் தெரியவேயில்லை. சமூகங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தியமை, அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தி வருகின்றமை, அடுத்த மதத்தவர்களை நிந்திக்கும் வகையில் நடந்து கொண்டமை போன்ற குற்றங்களுக்காக பொது பல சேனா அமைப்பினரை ஆகக்குறைந்தது புனர்வாழ்வு முகாம்களுக்காவது அனுப்பி வைக்க வேண்டும். அதை விடுத்து - ஜனாதிபதியே அவர்களை அலறி மாளிகைக்கு அழைத்துப் பேசுவதென்பது கவலையளிக்கிறது என்கிறார் மூத்த ஊடகவியலாளர் ஒருவர்!

இது ஒருபுறமிருக்க, பொது பல சேனா அமைப்பினர் முஸ்லிம்கள் மீது சுமத்தி வரும் குற்றச்சாட்டுகளுக்கு  -நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட வகையில் பதிலளிக்க வேண்டிய தேவை முஸ்லிம் சமூகத்துக்கு உள்ளது. அதேவேளை, சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் குறித்து பொது பல சேனா பரப்பி வைத்துள்ள 'நச்சுக் கருத்துக்களைக்களையும் நடவடிக்கைகளிலும்'முஸ்லிம் சமூகம் தீவிரமாகச் செயற்பட வேண்டியுள்ளது. 

ஆனால், இவை மிகச் சரியாக திட்டமிட்டுச் செய்யப்படவில்லை என்பதையும் இங்கு அழுத்திச் சொல்ல வேண்டியுள்ளது. உதாரணமாக, கடந்த வாரம் ரி.என்.எல். தொலைக்காட்சியில் பொது பலசேனா அமைப்பைச் சேர்ந்த பௌத்த பிக்குகளுக்கும் முஸ்லிம் தரப்பினருக்குமிடையிலான விவாத நிகழ்வொன்று இடம்பெற்றது. ஆனால், இந்த நிகழ்வில் கலந்து கொண்ட முஸ்லிம் தரப்பினர்கள் எவரும் சரியாகவும், செம்மையாகவும் தமது பதில்களையும், கருத்துக்களையும் முன்வைக்கவில்லை என்று முஸ்லிம் சமூகத்தவர்களே கூறுகின்றனர். 

இவ்வாறான நிகழ்சிகளில் கலந்து கொள்ளும் முஸ்லிம் தரப்பினரால் கூறப்படும கருத்துக்களை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் கருத்தாகவே கணிசமான சிங்கள மக்கள் நோக்குவார்கள். எனவே, இனியாவது இதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். 

இதேவேளை, இவ் விவகாரங்கள் தொடர்பாக முஸ்லிம் அரசியல்வாதிகளின் நடத்தைகள் ஏமாற்றம் தருபவையாக உள்ளன. உதாரணமாக, இலங்கையில் எந்தவொரு பள்ளிவாசல் மீதும் தாக்குதல்கள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவ்வாறு இடம்பெற்றிருந்தால் அவை குறித்த பட்டியலை வழங்குமாறும் அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா அண்மையில் நாடாளுமன்றில் கூறியிருந்தார். ஆனால், இது குறித்து ஆளுந்தரப்பில் இருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள் எவரும் மூச்சு விடவில்லை. 

குறிப்பாக, கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் பள்ளிவாசல்கள் உடைக்கப்படுகின்றன எனக் கூறி அரசுக்கெதிராக பிரசாரம் செய்துவந்த மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் கூட, இதன்போது மௌனியாகவே இருந்தார். அமைச்சர் அதாஉல்லாவும்தான் இதன்போது பேசவில்லை. ஏன் ஹக்கீமை மட்டும் வம்புக்கு இழுக்கின்றீர்கள் என்று உங்களில் எவரேனும் கேட்கக் கூடும். 

இலங்கையில் எந்தவொரு பள்ளிவாசல் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் அதாஉல்லா இதுவரை எந்தவொரு இடத்தில் வைத்தும் கூறியதாகத் தெரியவில்லை. இன்னும் சொன்னால், பள்ளிவாசல்கள் உடைக்கப்படுவதாக கூறப்படும் செய்திகள் வெறும் கட்டுக் கதைகள் என்றுதான் அமைச்சர் அதாஉல்லா கூறி வந்தார். அவ்வாறான ஒருவர் எவ்வாறு உடைக்கப்பட்ட பள்ளிவாசல்களின் பட்டியலை வழங்க முடியும். ஆனால், அமைச்சர் அதாஉல்லாவைப்போல் ஹக்கீம் இருக்க முடியாது!

எனவே, இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இனவாத நடவடிக்கைகளை முகம் கொள்வதற்காக, முஸ்லிம் அரசியல்வாதிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் புத்திஜீவிகளின் ஒன்றிணைவுடன் கூடிய ஒரு அமைப்பு மிக அவசரமாக உருவாக்கப்படுதல் வேண்டும். முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பிரசாரத்துக்கு பதிலளிப்பதில் இருந்து, அனைத்து  நடவடிக்கைகளும் இந்த அமைப்பினூடாகவே மேற்கொள்ளப்படுதல் வேண்டும். 'கண்டவர் நிண்டவர்' எல்லோரும் இந்த விவகாரத்தில் தலையிட்டு, இருப்பதையும் கெடுத்து விட்டு வருகின்றதொரு நிலையினை உருவாக்கி விடக் கூடாது என்பதே நமது பெரு விருப்பாகும்!
·
  

12 comments:

  1. "அரசியல் தலைவர்கள் என்ற ரீதியில், முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதற்கு முதலில் பதவியில் இருக்க வேண்டும். அதனாலேயே தான் மௌனமாக இருந்து, பொருத்தமான முறையில் எடுத்து சொல்ல வேண்டிய இடத்தில் எடுத்துச் சொல்லி, சரியான சந்தர்ப்பம் வரும் வரை காத்திருக்கிறோம்" என்பதே அவர்களது இரகசியமான பதிலாக இருக்கும்.

    இந்த சந்தர்ப்பத்தில் எழுந்திருந்து செயற்படா விட்டால், எதற்கு இந்தத் தலைவர்கள்? எதற்கு இந்தப் பதவிகளைக் கட்டிக் காக்க வேண்டும்?

    ReplyDelete
  2. Maash Allah Superb. Every one Must Read this. @almshoora

    ReplyDelete
  3. எமது சமூகத்திற்கு ஒரு பொது தலைமைத்துவமாக 'அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவை' பிரகடனப்படுத்தி அனைத்து தரப்பினரும் அதன் பின் அணிதிரண்டு, ஒவ்வொருவரும் தம் பங்களிப்பினை இவ்வமைப்பிற்கு வழங்குவதன் மூலம் அதனை வழுப்படுத்தலாம்.

    ReplyDelete
  4. jashalahu hair .tampi .halal is very important now days in every muslim umma. otherwise we cant expect the help of allah
    jamithul ulamma should take decision quickly.pls avoid more problem

    ReplyDelete
  5. முக்கியமாக இரு தரப்புக்களை குறிப்பிட்டுள்ளீர்கள் முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா. மெய்யாகவே இவர்கள் வழி காட்டுகிறார்களா வழி கெடுக்கின்றார்களா என்று புரியவில்லை.

    ஹசனலி இன்று கூறியுள்ளார் அரசுக்கும் எங்களுக்குமான உறவு ஆரோக்யமகவே உள்ளது அனால் அரசுக்கும் மக்களுக்குமான உறவுதான் சரியாக இல்லை என்று. இந்த உண்மை எதை வெளிக்காட்டுகிறது..? எஆங்க எந்த பாட்டுக்கும் ஆடுவோம் ஆம் போடுவோம் நீங்கதான் மாட்டேங்கிறிங்க.

    முஸ்லிம்கள் அரசுக்கு எதிராகவோ பெரும்பான்மைக்கு எதிராகவோ போராட வேண்டிய அவசியமே இல்லை. மாறாக நாம் அனுப்பியிருக்கின்ற அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிராகவே போராட வேண்டும்.
    @almashoora

    ReplyDelete
  6. இங்கு ஜமியத்துல் உலமா சபைக்கோ சதாரண முஸ்லிம் சமுகமுக்ஹோ குறை கூரி வேலையில்லை.அன்றைக்கு ஜெனிவா மகாநாடுக்கு முன்பு இந்த முஸ்லிம்களுக்கு எதிரான திவிரவாதம் இருக்கவில்லை மற்றக இது நிகழ்காலத்தில் வந்த ஒரு பிரச்சினை.நாங்கள் காலத்துக்கு ஏற்ற மாதிரி சவால்களுக்கு தயாராக இருக்க வேண்டும்.இன்னும் ஒன்றை சொல்ல வேண்டும் யாருக்கும் எச வேண்டாம் அதாவது எங்கள் முஸ்லிம் சமுகத்துக்கு ஏனனில் யாருக்கும் அல்லாஹ்வையன்றி தெரியாது என்னா எதிர் காலத்தில் நடக்கும்மென்று.
    நாங்கள் முஸ்லிம்கள் வேற்று மதம் காரர்களோடு எப்போதும் நல்லா தான் இருக்கிறோம் ஆனாலும் அவர்களின் ஒரு சிலர் அரக்கர்கள் தான் அவர்களின் இதயங்களில் முத்திரை அடிக்கப்பட்டு இருக்கின்றன.

    ReplyDelete
  7. மிகவும் கவனத்தில் கருத்தில் கொள்ளவேண்டிய கருத்தை இந்த கட்டுரை தாங்கி உள்ளது... தம்பிக்கு எனது நன்றிகளும் பாராட்டுகளும்...

    ஆனால் இந்த கற்றுரையில் உலமா சபையை குறித்து கூரிய கருத்துக்களும் பாவித்த வார்தைபிரயோகங்களும் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது.. உலமா சபையை கண்ணியப்படுத்தும் கடமை ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

    ReplyDelete
  8. To the Witer Thambi- it would be nice if you would have published your name. first of all it is a big joke. talking about Islamic issue on the back ground of padayapa joke. i hope your a good movie fan.
    firstly i think rather you critisise jamiyathul ulama you should have met them personally and asked them what are they doing to resolve this issue. "As a muslim what do we do criticize every one we do not do anything and not let any one to do anything" only we talk ill about others.
    there is a good speech by sheik agar. if you wanted to listen regarding the current issue

    "http://slhub.com/jummah-bayan/2013-feb-15/ash-sheikh-c-agar-muhammed-%28naleemi%29/solution-its-problem-at-kollupitty-jumuah-masjid-colombo-03"


    as a ordinary muslim we can go and debate every one and explain this to every one. we have to make dua to allah. the community leasers will do their part. if you do not know what they have done and what they are doing. you need to look for it. your running a website under jaffna muslim you need to go and speek to people with the relevant issue. ther fore mr. THAMBI you advises are good but they way you have written the article is not professional. therefore do not take padyapa joke. one last thing this is not your house divorce case to finish in "Vettu ondru thundu rendu"
    this is the muslim comminity issue we are living as a second minority we are talking with lives . we have to everything slowly and steadly. think about the badhr if you know the story.

    ReplyDelete
  9. masha allah jazakallah hair for ur usefull article

    ReplyDelete
  10. கட்டுரையாலரே! உலமா சபைக்கு குரை கூருவதை நிருத்துங்கல். குனூத் ஓதுவதையும் குரை கூருகிதரீர்கல்.அது நபி வழி என்ரு தெரிந்திருந்தும் கூட. நாம் முதலில் துவாவோடும் பொருமையொடும் தான் நடக்க வேண்டும். சிலவ வேலை அது எமக்கு தொல்வி போன்ரு தோன்ரலாம். ஆனால் வெற்றி இருக்கிரது.இன்ரு முச்லிம்கல் அல்ஹம்டுலில்லாஹ் பொருமையொடு நட்ப்பதே வெற்றி தான்.இன்ரு நாமும் வீதியில் இரங்கி ஒரு பொவ்த்த்னுக்கோ அல்லதது மத குரு ஒருநருக்கோ அடித்துப் பாருங்கல். அப்போ இலங்கையும் இன்னொரு மியன்மார் தான்.அவர்கல் எதிர்பார்ப்பதும் அதுவே. ஹுடைபிய்யா உடன்படிக்கையில் நபி (சல்) அபர்கலும் முஷ்லிம்கலுக்கு பாதகத் தன்மை இருந்தும் கைச்சாத்திட்டார்கல். பிரகு வெற்றி கிடைத்தது.

    ReplyDelete
  11. எவன் கன்னியமானவனோ எவன் நித்தியமானவனோ அந்த அலலஹ் மேல் சத்தியமிட்டு நான் உரக்க சொல்கிறேன் உங்கள் எல்லா நடவடிக்கைகளுக்கும் முன்னால் உங்களுக்கும் அல்லாஹ்வுக்கும் உள்ள தொடர்பை சீராக்குங்கள் அதிகரியுங்கள் தொழுகையை தொழுகையாக நிலை நிறுத்த முன்வாருங்கள் முழு முஸ்லிம் உம்மத்தையும் ஸுபஹ் தொழுகைக்கு ஒன்று சேருங்கள் இப்படி நாம் எல்ல்லோரும் செய்வோமெனில் பொதுபலசேனைக்கி பின்னால் இந்த நாட்டின் இராணுவ சக்தி ஒன்று சேர்ந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது நிச்சயமாக முஃமின்களை கண்டால் விரோதிகள் அச்சதினாலேயே தைரியம் இழந்து கதி கழங்கி நிட்பர் எங்கே எலோரும் தயாரா ஹராத்தை வட்டியை மோசமான நடத்தைகளை விட்டு அகன்று அல்லாஹ்வின் பக்கம் முன்னோக்க???

    ReplyDelete

Powered by Blogger.