Header Ads



குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதில் இஸ்லாம் முக்கிய பங்காற்றுகிறது


(எம்.ரீ.எம்.பாரிஸ்)

பாதுகாப்பு செயலாளரின் ஆலோசனையில் பொலிஸ்மா அதிபரின் வழகாட்டலில் பொலிஸ் சேவையை மக்களின் காலடிக்கு எடுத்துச் செல்லும் செயற்திட்டம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற நடமாடும் பொலிஸ் நிலைய வேலைத்திட்டத்தில் வாழைச்சேனை பொலீஸ் நிலைய மக்கள் தொடர்பால் பிரிவு பல் வேறுபட்ட நிகழ்ச்சி திட்டங்களை இதன் போது சிவில் பாதுகாப்புக் குழுக்களும் பிரதேச அமைப்புக்களும் இணைந்து டெங்கு ஒழிப்பு சிரமதான நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன் கலாச்சார நிகழ்வுகள்,சமய நிகழ்வுகள், இடம் பெற்று வருகின்றன.

 நேற்று ஞாயிற்றுகிழமை 17.02.2013 மட்- ஜெயந்தியாய அஹமட் ஹிராஸ் வித்தியாலய மைதானத்தில் வாழைச்சேனை பொலீஸ் நிலைய மக்கள் தொடர்பால் பிரிவு பொறுப்பதிகாரி யூ.எல் இமானுல்லாஹ் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் சமயங்கள் சொல்லும் நற்போதனை எனும் தொனியில் போதை வஸ்து பாவனை தொடர்பாகவும்,தற்போது நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும்  பெண்கள் மற்றும்  சிறுவர்களுக்கெதிரான  துஷ்பிரயோகங்களை தடுப்போம் விழிப்பாக இருப்போம் எனும் சமயபோதனை கல்குடா அல்-கிம்மா சமூக சேவைகள் அமைப்பின் பணிப்பாளர் மௌலவி ஹாறூன் (ஸஹ்வி) நிகழ்த்தினார்.

இதன் போது தமது உரையில் உலகில் உள்ள அனைத்து சமயங்களும் குற்ற செயல்களில் இருந்து ஒவ்வொரு மனிதனையும் மீள வேன்டும் அதனை செய்ய கூடாது என மிக கடுமையாக தடுக்கின்றது யார் எம் மதத்தினை பின்பற்றினாலும் அவர் அவர்களுடைய மதத்தில் சொல்லப்படுகின்ற நற் போதனைகளை அலசி ஆராய்ந்து  பின்பற்றுகின்ற போது குற்றசெயல்களையும் வன்முறைகளையும் தடுக்க முடியும் என குறிப்பிட்டார் இதனால் தான் இஸ்லாம் குற்ற செயல்கள் புரிகின்ற போது கடுமையான தன்டனைகளை வழங்குகின்றது களவு எடுத்தால் கைகள் தூண்டிக்கப்படவேன்டும் கொலை செய்தால் அதற்கு பதிலான கொலை என்ற தன்டனை சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது உதாரணமாக அன்மையில் இடம் பெற்ற ஒரு சம்பவத்தினை முன்னுதாரணமாக கௌளலாம் சவூதி அரோபியாவில் ரிஸானவுக்கு மரண தன்டனை வழங்கியதும் இஸ்லாமிய தன்டனை சட்டத்தில் ஒன்றாகும் எனவும் இவ்வாறான குற்றசெயல்கள் இடம் பெறாமல் அதில் இருத்து நாம் ஒவ்வொரு வரும் மீண்டு குற்ற செயல்களை தடுக்கின்ற நல்லவர்களாகவும் அனைத்து சமயங்களுடனும் தமிழ்,சிங்கள முஸ்லிம்,கிறிஸ்வர் என்ற இன முரன்பாடுகளை களைத்து நல்ல மனிதர்களாக வாழ்வோம் என தமதுரையில் குறிப்பிட்டார் இந்நிகழ்வில் பெருந்தொகையான பெண்களும் ஆண்களும் கலந்து கொண்டமை குறிப்பிட தக்கது.

போதைவஸ்துப் பாவணையினை தடுப்போம் எனும் தூண்டு பிரசுரமும் அல்-கிம்மா சமூக சேவைகள் அமைப்பினால் வினியோகிக்கப்பட்டது.




No comments

Powered by Blogger.