Header Ads



தொடர்ச்சியான அத்துமீறல்களும், மௌனத்தால் சிறைப்பட்ட முஸ்லிம்களும்


(மதீனாவிலிருந்து பஷீர் ஆதம்)

அன்மைக்காலகமாக இலங்கை முஸ்லீங்கள் மீது இனவாதம் சீரிபாய்கின்றது. அரசாங்கமும் இதனை உரியமுறையில் தட்டிகேட்டதாக தெரியவில்லை. ஜனநாயக நாடு என்றவகையில் ஒவ்வொரு சமூகத்துக்கும் தமது கலாசார மத விழுமியங்களை பேணி நடப்பதற்கான உரிமை அரசியல் யாப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இருந்தாலும் அது வெறும் ஏட்டுச் சுரக்காயாகத்தான் தெரிகின்றது. அரசாங்கம் நினைத்தால் இந்த பொது பலசேன காடையர்களின் அடாவடித்தனங்களை தடுத்து நிறுத்தலாம்.

ஆனால் அரசாங்கம் பிள்ளையும் கில்லி தொட்டிலும் ஆட்டுகின்ற கைங்கரியத்தை புரிகின்றது. பள்ளியில் கை வைத்து பர்தா  வரைக்கும் காடையர்களின் ஈனச் செயல் தொடர்கிறது. நேற்று மாத்தறையில் ஹிஜாப் அணிந்து சென்ற மூன்று முஸ்லிம் மாணவிகள் மீதான தாக்குதல் பேரினவாத கும்பல்களின் குரோதத்தின் எல்லையை நன்கு புலப்படுத்துகின்றது. ஆனால் நம் சமூகம் இன்னும் மௌனியாக இருந்தால் நிச்சயம் நம்மை  குற்றவாளிக்கூண்டில் நிறுத்திவிடுவார்கள். 

எனவே நாமும் எமது எதிர்ப்பை காட்டும்   முகமாக சாத்வீக போராட்டங்களை  முன்னெடுக்கவேண்டும். அமைதியான முறையில் நமது எதிர்ப்பை வெளிப்படுத்தவேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக அல்லாஹ்விடத்தில் நாம் அனுதினமும் பிரார்த்திக்கவேண்டும்.

2 comments:

Powered by Blogger.