Header Ads



முஸ்லிம்கள் அந்நிய மதத்தவர்களின் கவலைகளில் பங்கெடுக்க சந்தர்ப்பம் (படங்கள்)



(ஆ.சு.ஆ. கியாஸ்)

கம்பளை வட்டதெனியவச் சேர்ந்த சிங்கள சகோதரர்கள் 5 பேர்  22.02.2013 அன்று நாவலப்பிட்டிய மகாவலி கங்கையில் நீராடச் சென்று, நீரில்  மூழ்கி மரணமான சம்பவம் முழு உலகமுமே அறிந்த விடயமாகும்.

இவர்கள்  அனைவரும் வட்டதெனிய எனும் கிராமத்துக்குப் பக்கத்தில் உள்ள 'தள்வெடிய' எனும் சிறு கிராமததில் வசிப்பவர்களாவர். இவர்கள் முதல், இவர்களது குடும்பத்தினர்கள், அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் வட்டதெனிய கிராமத்தினர்களுடன் நல்ல  பண்பான முறையில் சகோதரத்துவத்துடன் வாழ்கின்றவர்களாவர். 

சம்பவத்தினைக் கேள்விப்பட்டதும், வட்டதெனிய மக்களினது உள்ளத்தில் பெரும் கவலையைக் காணக் கூடியதாக இருந்தது.  அதுமட்டுமின்றி சம்பவம் நடந்த இடம் முதல் வைத்தியசாலை வரைக் கும்  முஸ்லிம்கள் குவிந்து காணப்பட்டர்கள். 

அதாவது அந்நிய மதத்தினர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு நமது முஸ்லிம் சகோதரர்கள் குவிந்து காணப்பட்டார்கள். அதுமட்டுமல்லாமல் சம்பவத்தினைத் தொடர்ந்து இவர்களின் உடல்களை வீட்டுக்குக் கொண்டு வரும் வரைக்கும் நமது முஸ்லிம் சகோதரர்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கினார்கள்.

அத்துடன் நின்று விடாமல் எங்களது துக்கத்தையும் அவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்குடன் நமது 'பஸார்' முழுமையாக வெள்ளை நிறக் கொடி அலங்கரிக்கப்படடது.  அந்த செயல் அவர்கள் அனைவரினதும் மனதுக்கு ஒரு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக நிறைய தகவல்கள் எமக்குக் கிடைக்கப் பெற்றது.

அத்துடன் அந்த மக்களினது உணவு விடயங்களிலும், நமது பங்களிப்பைச் செலுத்த வேண்டும் என்ற நோக்குடன் அதற்கான ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கின்றது.

(எனவே இவையெல்லாம் ஏன் கூறுவதென்றால், இது போன்ற சந்தர்ப்பங்களில் நமது முஸ்லிம்கள் இது போன்ற நிகழ்வுகளில் ஈடுபட்டால், இன்றைய சூழ்நிலையில் முக்கிய பயனாக இருக்கும் என் பதை நாம் அனைவரும் சிந்திப்போம்) நம்  அனைவருக்கும்  வல்ல அல்லாஹ் துணை புரிவானாக!  





5 comments:

  1. sure we should be make good Relationship with them. its way of Islam.

    ReplyDelete
  2. brother mehdi,
    ithuthan islam kattithanda valimurai, nam ithai seyyadaduthan matra samuham islaththai inthathanai sandeha kangaludan parka vali vittathu. naam islathin sandru paharpavarhala illamal santharpathukku payanpaduthupavarhalaha iruka koodathu.
    anyway welldone watadenniya.

    ReplyDelete
  3. சகோதர மதங்களோடு நாம் அன்னியோன்யமாய் இருப்பதை நம் நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தந்ததே
    ஆனால் இத்தகவலைத்தந்தவர் மட்டுமல்லாது நம் சமுதாயத்தில் உள்ள பல ஆலிம்கள், பேச்சாளர்கள், கட்டுரையாளர்கள் எல்லோருமே ஒரு சில வார்த்தைகளை தவறுதலாக பயன் படுத்துவதை நம் மாற்று மத சகோதரர்களே சுட்டிக்காட்டியுள்ளார்கள் அது ....
    ...... அன்னியர்களின் மதம் அல்லது அன்னியர்கள் எனச்சொலவது மாற்று மத நண்பர்களின் மனதை புண்படுத்துகிறது . அச்சொல்லிலுள்ள இரு கருத்துக்களில் விரோதமான கருத்தை , அல்லது முரணான கருத்தைத்தான் அவர்கள் கவனிப்பார்கள் ஆகவே இவ்வாறான வார்த்தைப் பிரயோகங்களிலிருந்து நாம் தவிர்ந்து கொள்வது நம் நபி(ஸல்) அவர்களின் அழகிய வழிகாட்டலிலொன்றே.

    ReplyDelete
  4. சகோதர பாசமும், சகோதர முறையும். பொதுவான விசயத்தில் ஒன்றுபடுவோம்.

    ReplyDelete
  5. ETHYLLAM KANKATTY VITHTHAI,ETHATTKU MUN YARUM ERANTHATHILLAYA?WAR TIME HOW MANY DEATH BODIES AAN YARUM ENTHAMATHIRI ERUKKA ELLA ,,PUTHIYA EMATTURA RELATION SHIP SARIWARATHU BRO,ENTHA MATHIRI SEYTHU
    MUSLIMKALA KEWALAPADUTHTHA WANAM,

    ReplyDelete

Powered by Blogger.