மஹரகமயில் பேரினவாதிகளின் எழுச்சிப்பெரு விழாவும் - அரசாங்கம் கூறிய சிறிய குழுவும்..!
(ஜே.எம்.ஹாபீஸ்)
மகரகமையில் ஞாயிற்றுக் (17.2.2013) கிழமை மாலை மகரகமையில் நடந்த பௌத்த மகாநாடு அவர்களைப் பொருத்தவரை பாரிய வெற்றியாகக் கொள்ள முடியும்.
ஏனெனில் ஆயிரம் பேரை எதிர்பார்க்கும் சில இஸ்லாமிய எதிர்ப்புக் கூட்டங்களுக்கு நூறு பேராவது சேர்வது சிரமமாக இருந்த உண்மையை கடந்த காலங்களில் கண்டோம். கண்டியில் நடந்த மாநாடு கூட மூடிய அறையிலேதான் இடம் பெற்றது.
ஆனால் மகரகமைக் கூட்டத்திற்கு பத்தாயிரம் பேரை எதிர்பார்த்த போதும் அவ்வாறு இல்லாவிட்டாலும் நான்கு முதல் ஐயாரிம் பேர் வரை குழுமி இருந்ததைக் கான முடிந்தது. இதில் காவியுடையினரே மிகக் கூடுதலாக இருந்தனர். முழு மகரகமையும் பௌத்த கொடிகளால் விழாக் கோலம் பூண்டு காணப்பட்டது. எங்கும் ஒலி பெருக்கிகள் இணைக்கப்பட்டிருந்தன.
கலகத் தடுப்பும் பொலீஸாரும் நீர்பாச்சும் யந்திரங்களும் காத்து நின்றது மட்டுமல்லாது முழு மகரகமைப் பிரதேசத்திலும் பொலீஸார் காவல் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இவ் ஏற்பாட்டுகள் அனைத்தும் பொதுமகனான எமக்கா? அல்லது ஆசிர்வாதம் வழங்கப்பட்ட மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படாது இருக்க வழங்கப்பட்ட சலுகையா? என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
நாட்டில் தற்போது நடப்பவற்றைப் பார்க்கும் போது நாலடி பின் நின்று அவதானிப்பதே புத்தி சாதுர்யமாகத் தெரிகிறது. பி.பி.சி. ஊடக வியலாளர்களுக்கு இல்லாத பாதுகாப்பு எமக்கா? என எண்ணத் தோன்றுகிறது.
கண்டிக் கூட்டத்தின் போது பின்பற்றப்பட்ட அவர்களது நடைமுறையில் பாரிய வித்தியாசம் காணப்படவில்லை. ஒன்று கூடிய அறை. மற்றது திறந்த வெளி. எனவே செய்தி சேகரிப்பதை விட எமது தலையைப் பாதுகாப்பதுவே சிறந்தது எனத் தோன்றியது.
சிவில் சீர் உடை வாலிபர்கள் அதிகமாக இருந்ததுடன் அவர்களை நிறுவன ரீதியல் ஒழுங்கமைத்து வழி நடத்தியதையும் காண முடிந்தது. இவர்கள் உத்தியோகப் பற்றற்ற பாதுகாப்பு மற்றும் தாகசாந்தி உற்பட நலன்புரி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இவர்களை இடத்திற்கிடம் அழைத்துச் செல்ல பஸ்வண்டிகள் கூட பணிக்கமர்த்தப்டடிருந்தன. அவை பௌத்த கொடிகளைத்தாங்கிய இளைஞர்களை அழைத்துச் சென்றன. முச்சக்கரவண்டிகள் இதனை விட ஒரு படி மேலே இருந்தன.
ஒரு சில வாலிபர்கள் சிவில் சீர் உடையில் ஏதோ தேடி அழைவதைக் காண முடிந்தது. எனது நண்பர் நகைக்சுவையாகச் சொன்ன விடயம் ஒரு வேளை உண்மையாகவும் இருக்கலாம். 'அதி விசேட' பாணம் ஒன்றை தேடுவதாக அவர் குறிப்பிட்டர்.
இலங்கையில் இவ்வளவு இலத்திரனியல் ஊடகங்கள் இருக்கின்றனவா என பிரமிக்க வைக்கும் அளவு டீ.வீ . கெமராக்கள் நூற்றுக்ணக்கில் இருந்தன.
சுருங்கக் கூறின் இவ்வளவு காலமும் அரச தரப்பால் சிறிய குழு என்று அழைக்கப்பட்டவர்கள் சிறு குழுவல்ல. தேசிய மட்டத்தில் நடைபெற்ற இனவாத எழுச்சி பெருவிழா என்று கூறலாம்.



SOOLCHI KAARARHALUKKELLAM PERIYA SOOLCHCHI HAARAN ALLAAH ENPATHAI NANRAAHA NINAIVIL VAITHTHUK KODU ALLAHVAIP PIRAARTHIPPOAM
ReplyDeleteஇந்தப் பேரணிக்கு பொலிசாரின் அல்லது பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றிருக்க வேண்டும் அல்லாவிட்டால் சட்ட விரோதமாக நடந்த பேரணியை பொலிசார் கலைத்திருக்க வேண்டும்.
ReplyDeleteசிறிய குழு - மகிந்தவின் கணக்கில் கொள்ளிய வைக்க.
இது சம்பந்தம்மாக முஸ்லிம் தலைமைகள் -
1) ஹக்கீம் - எடுத்தோம் கவுத்தோம் என்றில்லாமல் அடுத்த வருட பேராளர் மாநாட்டில் ஆற அமர விவாதிக்கப்படும். காய் நகர்த்தப்படும்.
2) றிஷாத் - பத்திரிகை வாயிலாகவே அறிந்தேன். பொது பல சேனாவின் மேலதிக தகவலுக்காக காத்துக்கொண்டிருகிறேன். எப்படி போனாலும் நான் மகிந்தவின் முடிவுக்கு ஆதரவளிப்பேன்.
3) அதாவுல்லாஹ் - பொது பல சேனா என்னையும் அழைத்திருந்தது, ஆனால் நான் தூங்கி விட்டேன். நல்ல காலம் சில நேரம் நானே அந்த சைட்டில சேர்ந்திருப்பேன் ஆனா மகிந்த ஒத்துக்க மாட்டார் என விட்டு விட்டேன்.
4) பசீர் - நான் அடி விளாமலிருக்க ஆன்மீக பலத்தை அதிகரிக்கிறேன். காரணம் பொது பல சேனாவுக்கு ஆன்மீக பலத்தை அதிகரிக்க ஆள் தேவையாம்.
5) ஹிஸ்புல்லாஹ் - என்னுடைய வேலை செய்யாத டம்மி கையடக்க தொலைபேசியில் ஜனாதிபதியை தொடர்பு கொள்ள முயன்றேன்; ஆனால் முடியல. அதனால் தாங்க முடியல.
6) ஹசன் அலி - கலந்துகொண்ட மக்கள் மீதும், பாதுகாப்பு கொடுத்த பொலிசார் மீதும் விசாரணை செய்யப்படும், ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.
7) மற்றவர்கள் - இவர்களின் தீர்ப்பே எங்களின் தீர்மானம்.
Here's the petition for forwarding to your friends:
ReplyDeleteTake action and introduce a law to stop inciting hatred in Sri Lanka
Dear All,
After the 30 year old bloody war (between LTTE and GSOL) now we seems building up for another one. This time it seems against the second minority the Muslims. The pioneer in the build is an organisation called Bodu Bala Sena, followed by other groups including Jathika Hela Urumaya who is a government ally. These are well funded, organised and highly influential groups. The local media are flooding them with airtime in order to gain popularity through nationalism. The trend is quite dangerous and human causalities will be imminent if this carries on.
The issue is already out of hand. Day in day out many protests and violence are reported. It needs to be stopped by the government as no awareness program seems helping much. The minority has again started feeling un-assured.
In Sri Lanka there are no laws to protect any one from Race related violence. We feel it is the best time to campaign for one before the current trend leads to bloodshed or a war.
Please table a bill in the parliament to INTRODUCE A NEW LAW AGAINST INCITING HATRED BETWEEN RACES OR RELIGION ASAP!!!
This should prohibit all sorts of hate campaigns against any religion or race!
Thanking you!
Let's Unite Against Fascism!
UAF Sri Lanka
Sri Lanka
unitedagainstfascism@gmail.com
unitedagainstfascismsl.wordpress.com
http://www.avaaz.org/en/petition/Take_action_and_introduce_a_law_to_stop_inciting_hatred_in_Sri_Lanka/?tgKKIdb
எங்களவர்கள் செய்யும் ஒரு தவறு என்ன தெரியுமா எல்லாவற்றிற்கும் எல்லோரும் பதில் சொல்ல முனைவது. கேள்வி கேட்டால் பதில் சொல்லலாம். ஆனால், விதண்டாவாதங்களுக்கு பதில் சொல்லத் தேவையில்லை. ஏன்னென்றால் அது விதண்டாவாதம்.அடுத்தது இஸ்லாத்திற்கு எதிரானவற்றை அவர்கள் சமூத தளங்களில் போடும் போது அவற்றை நாம் share, like, comment பண்ணாது report பண்ண முயற்சிக்கவும். இல்லாவிட்டால் நாமே இச்செய்தியை எமது மாற்றுமத நண்பர்களைச் சென்றடைய வழி செய்கின்றோம்.
ReplyDeleteசிந்தித்து செயல்படுவோம். முஸ்லிம்களால் இந்நாட்டில் செய்திருக்க வேண்டிய வேளையை அந்தச் சேனா செய்கிறது. அதாவது இஸ்லாத்தை பற்றி அதிகமாக இந்நாட்டு மக்களுக்கு சொல்கிறார்கள். இன்ஷா அல்லாஹ் இதன் பலனை இவர்கள் விரைவில் அறிந்து கொள்வார். அல்லாஹ்வின் தீனை ஊதியணைக்க எத்தனிக்கின்றார்கள்.