Header Ads



மியன்மார் முஸ்லிம்களை முன் உதாரணமாக கொள்வோம்..!



(faji)

முஸ்லிம் சமூகம் எந்த திசையை நோக்கி  பயணிக்க போகிறது என்று தெரியவில்லை.இனவாத தீயின் வேகம் தணியவில்லை.பொருளாதார ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் முஸ்லிம்களை பலவீனப்படுத்துகின்ற பயணத்தில் அதிகாரமிக்கவர்களின் ஆசிர்வாதம் வெளிப்படையாக இருக்கின்றது.

விடுதலை புலிகளின் முடிவோடு நிராயுத பாணிகளான சிறுபான்மை சமூகத்தை அடக்கி ஆள்வதில் பேரினவாதம் ஆர்வம் காட்டிவருகிறது.

முஸ்லிம்களின் ஆன்மீக பலத்தை உடைப்பதற்கு உள்ளே இருக்கும் கொள்கை பிரிவினைகளை சாதகமாக பயன்படுத்துவதும், அரசியல், நிருவாக ரீதியாக முஸ்லிம்களையும் தமிழர்களையும் மோதவிட்டு தனித்தனியே பிரித்து சிறுபான்மை அல்லது தமிழ் பேசும் மக்கள் என்ற பலத்தை உடைப்பதும் இன்று இடம்பெறுகின்றது.

இன்று இடம் பெறும் நிகழ்ச்சி நிரல் நீண்ட காலத்தை கொண்டு தயாரிக்கப்பட்ட இனச்சுத்திகரிப்பின் பின்னணியாகும். 

இவ்வாறான சூழ்நிலையில் சில அரசியல்வாதிகளின் பேச்சு அருவருப்பாகவும் இஸ்லாமிய உணர்வு அற்றவர்களாகவும் இருப்பது முஸ்லிம்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஊடகங்கள் மூலம் மக்களுக்கு ஒன்றும் நேரடியாக அரசாங்க விசுவாசியாகவும்.சர்வேதேச தரப்புகளுக்கு அரச பாதுகாவலர்களாகவும் நடந்துகொள்வது ஆரோக்கியமான விடயம் இல்லை. தான் சார்ந்த சமுக பொறுப்பை புறந்தள்ளிவிட்டார்கள். மாற்று மத சகோதரர்கள் குரல்கொடுக்கும் அளவுக்கு துணிச்சல் அற்று அடங்கி இருப்பது முஸ்லிம் சமூகம் வெட்கித்து தலைகுனிய வேண்டிய விடயமாகும். 

இவர்களின் போக்கு அல்லாஹுவை ஈமான் கொண்டவர்கள் போல அன்றி வேறொன்றை ஈமான் கொண்ட நிலையை வெளிக்காட்டி நிற்கின்றது.

குறிப்பிட்ட நோக்கதிற்காக பயன்படுத்தப்படுகின்ற இவர்கள் அதை அடைந்ததும் தூக்கி எறியப்படுவார்கள். இதுவே உண்மை. இதை உணர்ந்து செயலில் இவர்கள் இறங்க தவறினால் கடலில் மிதக்கும் மியன்மார் முஸ்லிம்களின் நிலைமைதான் சிறந்த முன் உதாரணம்.

அரசியல் வாதிகள் அந்த சமயம் இங்கே அடிமைகளாக அல்லது அரசியல் தஞ்சமாக மேற்கத்தைய நாடுகளுக்கு கஜானாக்களுடன் சென்று விடுவார்கள்.

காலம் இருக்கிறது. அதை சரியாக பயன்படுத்த வேண்டும். கொள்கை ரீதியான பிளவு முஸ்லிம் சமூகத்துக்கு பெரும் கேடாகும்.இந்த நிலைமையிலும் குனூத் ஓதுவதை பற்றி விமர்சனம் செய்கின்ற கொள்கை சார்ந்து பேசுகின்ற எழுதுகின்ற அறிவிலிகளை நினைக்கும் போது வேதனை அழிக்கின்றது. 

இந்த நாட்டின் அதிபர் குனூத் பற்றி எழுப்பிய கேள்வி அறியாமை அல்ல நன்கு அறிந்த வேண்டுமென்று பேசியதாகும். இதன் மூலம் முஸ்லிம்களின் ஆன்மீக உணர்வு அவமதிக்கப்பட்டுள்ளது. 

முஸ்லிம்களுக்குள் முதலில் கொள்கை முரண்பாடு களையப்பட்டு முஸ்லிம் சமூகம் என்ற ஒரே இலக்கோடு இணையாவிட்டால், அவ்வாறானா சமூக உணர்வுகள் மேலோங்காவிட்டால் கட்டுமரக்கப்பலும் தவிர்க்கமுடியாது போகலாம். 

எந்த பாதையால் செல்ல வேண்டும் என்பது முக்கியம் இல்லை எங்கு செல்லவேண்டும் என்ற இலக்கு முக்கியமானது. ஒவ்வொருவரும் தங்களின் ஆன்மீக நாட்டத்தை அதிகரித்து கொள்ளவேண்டும். அல்லாஹுவின் அன்பும்   கருணையுமே நமது பலம்.         

No comments

Powered by Blogger.