Header Ads



மடவளை மதீனா பாடசாலைக்கு அருகில் விபத்து..!


(ஜே.எம்.ஹபீஸ்)

மடவளை பஸார் மதீனா மத்திய கல்லூரிக்கு அருகில் இன்று  12-01-2013 இடம்பெற்ற மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று  மோதி விபத்துக்குள்ளானதில்  இரு வண்டிகளிலும் நபயணித்தவர்கள் காயங்களுக்கு உள்ளானர்.

மடவளை பிரதான வீதியல் நேர் எதிர் பக்கங்களில் பயணித்துக் கொண்டிருந்த இவர்கள் இருவரையும் தவிர  வேறு எவரும் பயணிக்கவில்லை எனத் தெரியவருகிறது.

மோட்டார் சைக்கிளில் விபத்துக்குள்ளானவர்களில் ஒருவர் மடவளை வங்குவ கடையை சேர்ந்த ரவ்சான்  எனவும் மற்றவர் வெளியூரை சேர்ந்த ஒருவர் எனவும் அறியக் கிடைத்தது.

காயமடைந்தவர்கள் உடனடியாக கண்டி மற்றும் கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுள்ளனர். பொலிஸார் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர். ரவ்சான் தற்போது கண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிய வருகிறது.




No comments

Powered by Blogger.