Header Ads



இலங்கையை விட்டுச்செல்லும் பாடும் மீன்கள்..!


இலங்கையில் அருகிவரும் பலவகையான நன்னீர் உயிரினங்கள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இவற்றில் நன்னீர் நண்டு வகைகள் பலவும் அடங்குவதாகவும் செய்திகள் வருகின்றன.

இலங்கைக்கு மாத்திரமே உரித்தான இந்த நன்னீர் உயிரினங்கள் பல இவ்வாறு அருகுவதற்கு அவை கடத்தப்படுவது மாத்திரமன்றி, வேறு காரணங்களும் இருப்பதாக மட்டக்களப்பு, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை பேராசிரியர் டாக்டர். பி. வினோபாபா கூறுகிறார்.

குறிப்பாக இலங்கைக்கே உரித்தான நண்டுகள் மாத்திரமன்றி, மட்டக்களப்பில் பிரபலமாகப் பேசப்படும் பாடும் மீன்களும் தற்காலத்தில் அருகி வருவதாகவும் அவர் கூறுகிறார்.

வெளிநாடுகளில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட திலாப்பியா (செல்வன் அல்லது ஜப்பான் மீன்) வகை மீன்களும் இந்த பாடும் மீன்களின் அழிவுக்கு ஒரு காரணம் என்றும் வினோபாபா விளக்குகிறார்.

அவற்றைவிட, மனிதனால் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்கள், நீர் நிலைகளின் ஆழம் குறைதல், வயல்களில் பயன்படுத்தப்படும் இரசாயன உரவகைகள் ஆகியனவும் இந்த மீன்வகைகள் மற்றும் நண்டு இன வகைகள் அழிவதற்கு காரணம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

இலங்கைக்கே உரித்தான 50 வரையிலான நன்னீர் இன நண்டு வகைகள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. bbc


No comments

Powered by Blogger.