Header Ads



‘மானுட வசந்தம் மாநபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்’


(இப்னு நஸீர்)

ஆதிவேதங்கள் அணைத்திலுமே ஆருடம் சொல்லப்பட்டவரும் இறைமை கொண்டவனின் இறுதித்தூதராக வந்தவருமான முத்திரை நபியின் ஜனனத்தை முழு உலகும் மீட்டிப்பார்க்கும் இக்காலத்தில்,  சமுகங்களுக்கிடையில் சகவாழ்வையும்  சமூக நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பும் நோக்கில் ‘மானுட வசந்தம் மாநபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்’ எனும் கருப்பொருளில் அனைத்து சமூகத்தவர்களையும் இணைத்து அக்கரைப்பற்று ஆயிஷா பாலிகா மகா வித்தியாலயத்தில் மாநாடு ஒன்றை நடாத்த இலங்கை ஜமாஅதே இஸ்லாமி திட்டமிடப்பட்டுள்ளது.

சமூக நல்லிணக்கத்தை கட்டி யெழுப்பும் நோக்கில் நடாத்தப்படும் இந்நிகழ்வு;  அகிலங்களுக்கெல்லாம் அருட்கொடையான நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருள் சொரியும் வாழ் நெறியை மீட்டிப்பார்க்கும் நன்னிகழ்வாகும்.

எனவே, புரிந்துணர்வும் சகவாழ்வும் தழைத்தோங்க நலமே நாடும் நன்மக்களை நயமோடு அழைக்கிறார்கள் இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் அக்கரைப்பற்று மன்றத்தினர்.

No comments

Powered by Blogger.