மருதமுனையில் ஆண், பெண் பர்டசாலைகள் குறித்து விளக்கம்..!
(சிபான் மஹ்ரூப்)
வெள்ளிக்கிழமை வெளிவந்த பத்திரிகையின் 24ம் பக்கத்தில் 'மருதமுனை அல்மனாரில் ஆண்,பெண் வேறாக வகுப்புக்களை நடாத்துவதற்கு ஏகமானதாக தீர்மானம்| என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்டிருந்த செய்தி உண்மைக்குப் புறம்பான தகவல்களைத் தாங்கியதாக எழுதப்பட்டிருந்தது. இவ்விடயம் தொடர்பான உண்மையான தகவல்களைப் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக இச்செய்தி பிரசுரிக்கப்படுகின்றது.
மருதமுனையில் (பாண்டிருப்பு முஸ்லீம் பிரிவு மற்றும் பெரியநீலாவணை முஸ்லீம் பிரிவு என்பன உட்பட) மொத்தமாக ஏழு அரச பாடசாலைகள் உள்ளன. இவற்றுள் இரண்டு '1' தரப்பாடசாலைகளாகவும் மூன்று ஷஷவுலிந – ஐஐ' பாடசாலைகளாகவும் இரண்டு 'வுலிந – ஐஐஐ' பாடசாலைகளாகவும் உள்ளன. இந்த இரண்டு 1யுடீ தரப்பாடசாலைகளில் ஒன்றான கமுஃஅல்-மனார் மத்திய கல்லூரியையும், வுலிந-ஐஐ பாடசாலைகளில் ஒன்றான கமுஃஅல்-மதீனா வித்தியாலயத்தையும் தனியான ஆண்கள் பாடசாலைகளாகவும் மற்றுமொரு 1யுடீ பாடசாலையாகிய கமுஃஷம்ஸ் மத்திய கல்லூரியையும், ஏனைய இரண்டு வுலிந-ஐஐ பாடசாலைகளாகிய கமுஃஅல்ஹம்றா வித்தியாலயம் மற்றும் கமுஃபுலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன் வித்தியாலயம் ஆகியவற்றைத் தனியான பெண்கள் பாடசாலைகளாகவும் ஏனைய ஆரம்பப் (வுலிந-ஐஐஐ) பாடசாலைகள் இரண்டையும் ஆண்,பெண் கலவன் பாடசாலைகளாகவும் 2013.01.04ம் திகதி தொடக்கம் மாற்றியமைத்துக் கொள்வதென மருதமுனை ஐம்மியத்துல் உலமா சபை, அனைத்துப் பள்ளிவாசல்கள் மற்றும் தஃவா இயக்கங்களினதும் சம்மேளனம் முடிவு செய்து அந்த முடிவு மருதமுனை மக்களுக்கு மத்தியில் பிரகடனம் செய்யப்பட்டு இந்த முடிவுக்கேற்ப மருதமுனையிலுள்ள சகல அரச பாடசாலைகளையும் மாற்றியமைத்துக் கொள்ளுமாறு அனைத்துப் பாடசாலைகளினதும் அதிபர்களுக்கும் பாடசாலை அபிவிருத்திக் குழுக்களுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
மருதமுனையிலுள்ள சகல உலமாக்கள், பள்ளிவாசல்கள் மற்றும் தஃவா இயக்கங்கள் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் மேற்குறித்த சம்மேளனத்தின் இறுதி முடிவுக்கு மாற்றமாக மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் பாடசாலை அபிவிருத்தி குழுவினர் அப்பாடசாலையின் உயர்பிரிவு வளாகத்தை ஆண்கள் பாடசாலையாகவும் அதன் ஆரம்பப்பிரிவு வளாகத்தை பெண்கள் பாடசாலையாகவும் பிரித்துக் கொண்டு அப்பாடசாலை மாணவர்களது பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக அதன் ஆரம்பப்பிரிவு வளாகத்திலிருந்து வந்த 04ம் மற்றும் 05ம் வகுப்புக்களை அதன் உயர்தர வளாகத்திற்கு இடமாற்றியுள்ளார்கள். இதுமட்டுமின்றி அப்பாடசாலையின் அதிபரும் பாடசாலை அபிவிருத்திக் குழுவின் அங்கத்தவர்களும் இந்த உள்ளகப் பிரிப்பு சம்மேளனத்தின் முடிவுக்கு ஏற்ப செய்யப்பட்டது என உண்மைக்குபு புறம்பான செய்தியைப் பத்திரிகைகளுக்கும், இலத்திரனியல் ஊடகங்களுக்கும் வழங்கி வருகின்றனர்.
மருதமுனை ஐம்மியத்துல் உலமா சபை, அனைத்துப் பள்ளிவாசல்கள் மற்றும் தஃவா இயக்கங்களினதும் சம்மேளனம் முடிவுக்கு முரணாக அல்மனார் மத்திய கல்லூரியின் பாடசாலை அபிவிருத்தி சபையினர் மேற்கொண்டுள்ள இந்த உள்ளகப் பிரிப்பை எதிர்த்துப் பெற்றோர்கள் அக்கல்லூரியில் கற்கும் தமது மாணவர்களை அப்பாடசாலையிலிருந்து விலக்கி எடுத்து வேறு பாடசாலைகளில் சேர்த்து வருகின்றனர் என்பது குறிப்பித்தக்கது.
சித்தீக் ஜெமீட் (வைத்திய கலாநிதி )

Post a Comment