Header Ads



பொலிஸ் மா அதிபருக்கு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பில் கொடுக்கப்பட்ட மனு


நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் எதிர்வரும் 25ம் தேதி வெளியிடப்படவிருக்கும் விஸ்வரூபம் திரைப்படத்தை இலங்கையில் தடை செய்யக் கோரி இலங்கை பொலிஸ் மா அதிபருக்கு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பில் கொடுக்கப்பட்ட மனு.




4 comments:

  1. Well done guys.

    .

    விஸ்வரூபம் நல்லபடியாக ஓட, உங்கள் பூரண விளம்பர அனுசரணைக்கு நன்றிகள்.
    போராட்டம் என்று ஜமாயக்கனும், அடுத்த நாள் சிறிலங்கா பேப்பர்ல எல்லாம் விஸ்வரூபம் பத்தித்தான் தலைப்புச் செய்தி வரணும், சரியா? நல்லபடியா பாத்துகோங்க.
    (Dear SLTJ, நம்ம டீல் யாருக்கும் தெரிய வேண்டாம்)

    ReplyDelete
  2. Hi Friends,

    இந்தியாவில் அண்மையில் மறைந்த இனவாதக்கோமாளி பால் தாக்கரே தமிழ்நாட்டின் டாக்டர் ராமதாஸ் போன்றவர்களின் பாணியில் தவ்ஹீத் ஜமாஅத்தினரும் இறங்கிவிட்டார்கள் போலும். விஸ்வரூபம் படத்தின் கதைபற்றியே யாருக்கும் தெரியாதபோது எப்படி தவ்ஹீத் ஜமாஅத்தினர் மட்டும் அறிந்தார்கள்? அவர்களுக்கு மட்டும் கமல் விஷேட காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தாரோ?

    எனது விஸ்வரூபம் வெளியான பின்பு அவசரப்பட்டு ஆத்திரப்பட்டு விட்டோம் என்பதை ஒவ்வொரு எதிர்ப்பாளரும் உணர்ந்து மனதுக்குள் மறுகவேண்டியிருக்கும் என்று கமல் ஒரு பேட்டியிலே குறிப்பிட்டிருக்கின்றார். கமல் ஒரு சிறந்த கலைஞர் அதேவேளை நல்ல வியாபாரியும் கூட. ஆகவே தனது சந்தைப்பொருளை செல்லாக்காசாக்கும் கைங்கரியங்களைச் செய்திருப்பார் என்று நம்ப முடியாதிருக்கின்றது.

    விஸ்வரூபம் இந்தியாவின் தீவிரவாத நெருக்கடிகள் பற்றி பேசும் ஒரு திரைப்படம் என்று இந்திய ஊடகங்களில் அரசல்புரசலாக வந்த செய்திகளையும் விளம்பரப் போஸ்டர்களிலே படத்தின் தலைப்பு உருது எழுத்துக்கள் போல வடிவமைக்கப்பட்டிருப்பதையும் பார்த்துவிட்டு ஒரு குத்துமதிப்பான யூகத்தில் இஸ்லாத்திற்கு எதிரானதாகத்தான் இருக்க வேண்டும் என்றுதவ்ஹீத் ஜமா அத்தின் உளவுப்பிரிவு கருதுகின்றதோ என்னவோ?

    இன்றைய நவீன உலகில் சினிமாவை பயன்படுத்தி விளம்பரம் தேடும் எத்தனையோ நிறுவனங்களில் நமது தீவின் மதஅமைப்புகளும் இறங்கிவிட்டதால் இலங்கையிலே செய்யவேண்டிய விளம்பரச் செலவும் மீதமாகும் மகிழ்ச்சியில் கமல் என்ற புத்திஜீவிச் சினிமா வியாபாரி துள்ளிக்குதிக்கப்போகின்றார்.

    ReplyDelete
  3. BY TAMILCINEMA ....

    இப்படம் துவங்கி சில நாட்களுக்குள்ளேயே இது முஸ்லீம்களுக்கு எதிரான படம் என்று முண்டா தட்ட ஆரம்பித்துவிட்டன முஸ்லீம் அமைப்புகள். 'நான் அப்படியெல்லாம் படம் எடுப்பேனா?' என்று அப்பாவியாக கேட்ட கமல், அதற்கு பின்பும் கூட எவ்வித மாற்றமும் இல்லாமல் விஸ்வரூபத்தை உருவாக்க ஆரம்பித்துவிட்டார். படம் முடிந்து ரிலீசுக்கு நாள் குறிக்கிற நேரத்தில் தங்கள் ஆத்திரத்தை சற்று அழுத்தமாகவே பதிவு செய்தன முஸ்லீம் அமைப்புகள்.

    இதற்கிடையில் டிடிஎச்-ல் படம் என்ற புது யுக்தியை அறிமுகப்படுத்த நினைத்த கமல், அந்த விஷயத்தை அமலாக்குவதற்காக போராடிய போராட்டத்தில் சற்றே ஒதுங்கியிருந்தன அந்த அமைப்புகள். ஒருவழியாக அங்கேயும் போராடி களைத்த கமல், இம்மாதம் 25 ந் தேதி விஸ்வரூபம் வெளியீடு என்று நாள் குறித்துவிட்டார். மீண்டும் குறுக்கே சுவர் எழுப்பிய முஸ்லீம் அமைப்பினர் எங்களுக்கு காட்டாமல் படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தார்கள்.

    ஜே.எம்.ஆருண் போன்ற முக்கியமான சில முஸ்லீம் தலைவர்களுக்கு மட்டும் முன்கூட்டியே படத்தை திரையிட்டு காண்பித்த கமல், அவர்களை விட்டே சமாதான முயற்சியில் இறங்கினார். ஆனால் அதிலும் சிக்கல்.

    வேறு வழியில்லாமல் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பை சேர்ந்தவர்களுக்கு 22 ந் தேதி தன் எல்டாம்ஸ் அலுவலகத்திலேயே படத்தை போட்டு காண்பித்தார் கமல்.

    இந்திய உளவுப்பிரிவு அதிகாரியான கமல், நாட்டியக்கார கோஷ்டியினருடன் ஆப்கானிஸ்தான் செல்கிறார். அங்கிருக்கும் அல்-கொய்தா அமைப்புக்கு போர் பயிற்சி அளிக்கிறார். அவர்கள் கமலிடம் 'எங்களுக்கு தமிழ் ஜிகாதிகள் வேண்டும்' என கேட்க, 'மதுரை, கோயமுத்து£ரில்தான் அவர்கள் இருக்கிறார்கள்' என்றெல்லாம் கமல் பதில் சொல்வது போல காட்சிகள் இடம் பெற்றிருக்கிறதாம்.

    இதில்தான் ரொம்பவே வெகுண்டெழுந்துவிட்டார்கள் இவர்கள். படம் பார்த்த வெளியே வந்த வேகத்தில் அப்படியே நேரடியாக சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டார்கள். இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று ஒரேயடியாக அவர்கள் முழக்கமிட, செய்வதறியாது கையை பிசைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது கமலுக்கு.

    LATEST NEWS...
    விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட தமிழக அரசு தடை விதித்துள்ளது.

    தமிழக அரசின் இம்முடிவை நாம் தமிழர் இயக்கத் தலைவரும், இயக்குநருமான சீமான் வரவேற்றுள்ளார். முஸ்லிம்களை இழிவாகச் சித்தரித்திருப்பதாக முஸ்லிம் அமைப்புகள் பலவும் முறையிட்டதன் பேரில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    தமிழக அரசின் இம்முடிவை வரவேற்றுள்ள நாம் தமிழர் இயக்கத் தலைவரும், இயக்குநருமான சீமான், பொதுவாக, தமிழ்த் திரைப்படங்களில் தீவிரவாதிகளாக முஸ்லிம்களையும், காபரே நடனக்காரர்களாக கிறிஸ்தவர்களையும் காண்பிக்கும் போக்கு உள்நோக்கம் கொண்டதோ என்று ஐயுறச் செய்வதாகக் கூறி, அவ்வகையில் 'விஸ்வரூபம்' படத்துக்கு விதிக்கப்பட்ட தடை சரியானதே என்று தெரிவித்துள்ளார்""....


    ReplyDelete
  4. தெளஹீத் ஜமாஅத் விடும் முட்டையை விட கொக்கரிப்புத்தான் மிக அதிகமாகவுள்ளது. எத்தனையோ அமைப்புக்கள் எப்படியெல்லாம் பண்ணிவிட்டு இஹ்லாசோடு நின்று கொள்கிறது. நீங்கள் சராசரி அரசியல் வாதியோடு ஏன் சமனாகிப் போகிறீர்கள்.

    ReplyDelete

Powered by Blogger.