நீதியரசர்களுக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல்
(Tm) பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுக்களை விசாரித்த மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழுவில் அங்கம் வகித்த அனில் குணரத்ன மற்றும் ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோருக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம், பொரளை மற்றும் பம்பலப்பிட்டி பொலிஸாருக்கு இன்று உத்தரவிட்டது.
அத்துடன், மேற்படி அச்சுறுத்தல் அழைப்புக்கள் விடுப்பதற்காக பயன்படுத்தப்பட்ட தொலைபேசி இலக்கங்கள் தொடர்பான விபரங்களை பொலிஸாருக்கு கையளிக்குமாறு தொலைபேசி இணைப்பு நிறுவனங்களுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Post a Comment