Header Ads



காத்தான்குடியில் போசாக்குள்ள சமூகத்தை உருவாக்க அறிவூட்டும் நிகழ்வு


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

சுகாதார அமைச்சின் போசாக்குள்ள சிறந்த சமூகத்தை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளில் அறிவூட்டும் நிகழ்வு-மட்டு-காத்தான்குடியில்-(படங்கள் இணைப்பு)

சுகாதார அமைச்சின் போசாக்குள்ள சிறந்த சமூகத்தை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளில் போசாக்கு தொடர்பாக அறிவூட்டும் நிகழ்வு இலங்கையில் மாவட்டம் தோரும் இடம்பெற்று வருகின்றன.

மட்டக்களப்பு  பிராந்திய சுகாதார பணிமனையினால் பிரதேச சுகாதார காரியாலங்கள் ஊடக பிரதேச காரியலயங்கலிலுள்ள பிரிவுகளில் நடைபெறுகின்றன.

இதனடிப்படையில் காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலைய மாணவர்களுக்கு அறிவூட்டும் நிகழ்வு இன்று சனிக்கிழமை இஸ்லாமிய வழிகாட்டல் நிலைய முன்மாதிரிப் பாடசாலையில் சிரேஸ்ட விரிவுரையாளர் ஜாபிர் நளீமி தலைமையில் இடம்பெற்றது.

ஆண்-பெண் இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற இவ் அறிவூட்டல் நிகழ்வில் உணவுப் பழக்கமும் ஆரோக்கியமான வாழ்வும்,நோயற்ற வாழ்வுக்கான நேரிய வழிகாட்டல்கள் ,நமது சமூகத்தில் மறைந்திருந்து கருவறுக்கும் தொற்றாத நோய்கள் போன்ற விடயங்கள் தொடர்பான விரிவுரைகள் ஆண்கள் பிரிவு மாணவர்களுக்கும்  நமது சமூகத்தில் மறைந்திருந்து கருவறுக்கும் தொற்றாத நோய்கள், உணவுப் பழக்கமும் ஆரோக்கியமான வாழ்வும், நோயற்ற வாழ்வுக்கான நேரிய வழிகாட்டல்கள் போன்ற விடயங்கள் தொடர்பாக பெண் மாணவிகளுக்கும் காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நஸீர்தீன் மற்றும் காத்தான்குடி பிரதேச பொதுச் சுகாதார பரீசோதகர் ஏ.எல்.எம்.றஹ்மதுல்லாஹ் ஆகியோரினால் விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டன.





1 comment:

  1. இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள் .........

    போஷாக்கு மட்டுமல்ல, சீரான கல்வியையும், நல்ல பழக்கங்களையும்தான்.

    இறைவா இவர்களை நல்ல ஆரோக்கியம் உள்ள சமுதாயகமாக உருவாக்குவயாக. ஆமீன்.

    ReplyDelete

Powered by Blogger.