Header Ads



இலங்கையில் அல்ஹைதா தலிபான் அமைப்புகளுடன் தொடர்புடையோருக்கு எதிராக நடவடிக்கை


(Vi) அல்கொய்தா, ஜிஹாத், தலிபான் போன்ற இயக்கங்களுடன் தொடர்புடையோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி இயக்கங்களுடன் தொடர்புடைய பலர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக அடுத்த மாதம் முதல்  சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இயக்கங்களுடன் தொடர்பு இருக்கின்றமை உறுதிசெய்யப்படுமானால் 2 வருட சிறைத்தண்டனையும், ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்படுமெனவும் தெரியவருகின்றது.

இதுகுறித்த செய்தியை சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள அதேவேளை இதுகாலவரையும் இலங்கையில் அல்ஹைதா மற்றும் தலிபான்களின் செயற்பாடுகள் காணப்படுகின்றமைக்கான எந்தவொரு ஆதாரமோ அல்லது இலங்கை முஸ்லிம்கள் அவர்களுக்கு உதவுகிறார்கள் அல்லது இலங்கை முஸ்லிம்கள் அந்த அமைப்புக்களுடன் தொடர்பு வைத்துள்ளார்கள் என்பதற்கான எந்தவித ஆதாரமும் இல்லையென்பது கவனிக்கத்தக்கது.

3 comments:

  1. நல்ல கண்டு பிடிப்பும், நல்ல அரசும், நல்ல உளவுத்துறையும் ;

    அது ஏன் சார் வடக்கும் கிழக்கும் ?

    ஒரு வேலை கிறீஸ் மனிதர்களோ ?

    ReplyDelete
  2. ஆஹா இப்ப புரியுதா யார் இந்த பொதுப்பல சேன என்று வேறு யாரும் இல்லை அரசாங்கமேதான் சீண்டி சீண்டி பார்த்தார்கள் ஏதாவது அவர்கள் சொல்லும் பெயரில் யாராவது வெளிப்படுவார்கள் என்று யாரும் இல்லாததால் இப்படி ஒரு குண்டைப்போட்டு அப்பாவி மக்களை கைது செய்து அவர்களது நீதிமன்றத்தில் (குறுட்டு நீதிமன்றம்)தீர்ப்பு வழங்கி இல்லாத ஒன்றை திணிக்கும் செயலாகவே அது இருக்கும் உண்மையில் உலகில் முதலாவது பயங்கரவாதிகள் அரசாங்கங்கள்தான் அவர்களது பயங்கரவாத செயல்களால்தான் அப்பாவி மக்கள் பயங்கரவாதிகளாக்கப்படுகிறார்கள் நாம் உஷாராக இருக்கவேண்டும் அவர்களுக்கு வேண்டாத முஸ்லிம் அரசியல்வாதியை போட்டுத்தள்ளிவிட்டு இப்படி ஒரு பெயரை வைப்பார்கள் அல்லாஹ்தான் இந்த அரச பயங்கரவாதத்தில் இருந்து நம் சமூகத்தை பாதுகாக்கவேண்டும்

    ReplyDelete
  3. Appa kavi udaila erukkum payangaravadi?.......Enna chaivathu Naleem?

    ReplyDelete

Powered by Blogger.