Header Ads



சகல பெருந்தோட்டத் தொழிலாளர்களது குடும்பங்களுக்கும் தலா ஏழு பர்ச்சஸ் காணி


(ஜே.எம்.ஹபீஸ்)

சகல பெருந்தோட்டத் தொழிலாளர்களது குடும்பங்களுக்கும் தலா ஏழு பர்ச்சஸ் காணி வீதம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்டக் கைத் தொழில் அபிவிருத்திப் பிரதி அமைச்சர் ஏர்ள்ஸ் குணசேகர தெரிவித்தார்.

இன்று (19.1.2013) கண்டி கட்டுக்கலை ஸ்ரீ செல்வவினாயகர் ஆலய கல்யாண மண்டபத்தில் இடம் பெற்ற பெருந்தோட்டக் கைத் தொழில் அமைச்சின் பொங்கள் திருவிழாவஜல் பிரதம அதிதயாகக் கலந்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மத்திய மாhண ஆளுனர் டிக்கிரி கொப்பே கடுவ தலைமையில் ஆரம்பமான இவ்வைபவத்தில் அவர் மேலும் கூறியதாவது,

பொருளாதார அபிவிருத்தி அமைச்சு உணவு உற்பத்தித் துறைiயில் ஊக்கு விப்புக்களை வழங்குவதன் மூலமும் பெருந்தோட்டக் கைத் தொழில் அமைச்சு வதிவிடங்களை அமைக்கும் பணியிலும் ஊக்கு விப்புக்களை வழங்கி  பெருந்தோட்டப் பகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்;த முயற்சி எடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். வாழ்கைத் தர உயர்ச்சியில் இன்று வீடமைப்பு முக்கிய இடத்தைப் பெறுகின்றது. அந்த வகையில் எமது இத்தீர்மானம் சாலப் பொருத்தமானது என்றார்.

முன்னொறு காலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவுள்ள காணிகளில் தேயிலைச் செய்கையில் ஈடுபடுவோரே தேயிலைத் தொட்ட உரிமையாளர்காளாகக் கணிக்கப்பட்டபட்டனர். ஆனால் இன்று அப்படியல்ல வெறுமனே இரண்டு ஏக்கர் காணியைக் கொண்ட தோட்ட உரிமையாளர்களே 70 சதவீதத்திற்கு மேல் உள்ளனர் என்றார்.



No comments

Powered by Blogger.