Header Ads



'பேய்களோடு இணைந்து ஆட்சியில் இருப்பதை நினைத்துப்பார்க்கும் போது கவலையடைகிறேன்'


கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் மூன்று வருடங்களாக கடமை நிiவேற்று அதிபர்களாக பணியாற்றுவோருக்கு நிரந்தர அதிபர் நியமனம் வழங்க கிழக்கு மாகாண சபை விசேட நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவைப் பேச்சாளரும் வீதி அபிவிருத்தி அமைச்சருமான  எம்.எஸ்.உதுமாலெப்பை குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு சபையின் தவிசாளர் ஆரியவதி கலப்பதி தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போது கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் 3 வருடங்களாக கடமை நிறைவேற்று அதிபர்களாக பணியாற்றுவோருக்கு நிரந்தர நியமனம் வழங்கவேண்டும் எனக்கோரி மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் முன்வைத்த தனிநபர் பிரேரணைக்கு பதிலளித்து உரையாற்றும்போதே மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணம் யுத்தத்தினாலும் இயற்கை அனர்த்தத்தினாலும் பாதிக்கபட்டிருந்த வேளையிலும் கூட, கடந்த 20 ஆண்டு காலமாக கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் கடமை நிறைவேற்று அதிபர்களாக கடமைபுரிந்தோர்கள் தங்களுக்கு நிரந்தர அதிபர் நியமனம் வழங்கப்பட வேண்டும் என்று நீண்ட காலமாக போராட்டம் நடாத்தி நீதிமன்றம் வரை சென்ற பின் தற்போது ஒருபகுதி அதிபர்களுக்கு நிரந்தர அதிபர் நியமனம் வழங்கப்பட்டுள்ளன இவ்நிரந்தர அதிபர்; நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்ட நமது நாட்டின் ஜனாதிபதி, மத்திய கல்வி அமைச்சர், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர், உயர் அதிகாரிகளுக்கு நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றோம்.

கடந்த  மூன்று வருடகாலமாக கடமை நிறைவேற்று அதிபர்களாக கடமையாற்றும் அதிபர்களுக்கு நிரந்தர அதிபர் நியமனம் வழங்குவதற்கு மத்திய  கல்வி அமைச்சின் ஊடாக விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

பாடசாலைகளில் கடமை நிறைவேற்று அதிபர்களாகக்  கடமை புரிவோர்; பல சவால்களுக்கும் தியாகங்களுக்கு மத்தியில் தங்களுடைய ஆளுமையினூடாக பணி செயகின்றனர், பாடசாலைக்கு தலைமை தாங்கி பாடசாலை சமூகத்தோடு இணைந்து தியாக சிந்தனையுடன் செயல்பட்டுவருகின்றனர். இவ்வாறு பாடசாலைக்கு தலைமை கொடுத்து தியாக மனப்பாங்குடன் கடந்த மூன்று வருடகாலமாக சேவை செய்துவரும் அதிபர்களின் சேவை பாராட்டத்தக்கதாகும்.

அக்கரைப்பற்றில் உள்ள ஒரு ஆசிரியருக்கு நான்கு இடமாற்றக் கடிதங்களின் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டதாக உறுப்பினர் தவம் குறிப்பிட்டார் அப்போது சபை உறுப்பினர்கள் எல்லோரும் இதைக் கேட்டு ஆச்சரியம் அடைந்தனர் ஆனால், இந்த ஆசிரியர் இடமாற்றம் தொடர்பாக அரசியல் பின்னனி ஒன்று இருப்பதனை இந்த சபைக்கு தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. கல்முனை, சம்மாந்துறை, கல்வி வலயத்தில்  மேலதிகமாக உள்ள ஆசிரியர்களை அருகிலுள்ள கல்வி வலயப் பாடசாலைக்கு சமப்படுத்தும் நோக்கத்துடன் கல்வி அமைச்சால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் உள்ள பொத்துவில் பிரதேச பாடசாலைகளில் ஏற்பட்டுள்ள ஆசிரியர் பற்றார்குறைகளை நிவர்த்தி செய்யும் நோக்குடன் கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று ஆகிய பிரதேசங்களிலுள்ள மேலதிக ஆசிரியர்களை ஒரு வருடம் மற்றும் இரு வருட கால ஒப்பந்தங்களின் அடிப்படையில் ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு குறிப்பிட்ட காலங்களை நிறைவு செய்துள்ள ஆசிரியர்கள் பழைய பாடசாலைக்கு சென்றுள்ளதால் அக்கரைப்பற்று வலயத்தில் குறிப்பாக பொத்துவில் கோட்டத்தில் ஆசிரியர் பற்றார்குறை ஏற்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை கோட்டத்தில் இருந்து 50 ஆசிரியர்களை சில நியாயங்களின் அடிப்படையில் தெரிவு செய்து பொத்துவில் பிரதேச பாடசாலைகளில்  நிலவும் ஆசியர் பற்றார்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு அக்கரைப்பற்று வலயக்கல்வி பணிப்பாளரும், இடமாற்ற சபையும் இணைந்து எவ்வித அரசியல் தலையீடுகள் இன்றி சுதந்திரமாக நடவடிக்கைகளi மேற்கொண்டு இந்த இடமாற்றத்தை வழங்கியுள்ளனர்.; பொத்துவில் பிரதேச பாடசாலைகளுக்கு  இடமாற்றம் செய்யப்பட்டுள்ள 50 ஆசிரியர்களில் அரசியல் கட்சிகள் பலவற்றுக்கு ஆதரவளிக்கும் கட்சி ஆதரவளர்களான ஆசிரியர்களும் உள்ளனர். அக்கரைப்பற்று, அட்டாளச்சேனை கல்விக் கோட்டங்களி;லிருந்து  பொத்துவில் பிரதேச பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யும் பட்டியில் குறிப்பிட்ட ஆசிரியரின் பெயரும் இடம்பெற்றுள்ளது. 

பொத்துவில் பிரதேச பாடசாலைகளின் ஆசிரியர் பற்றார்குறையை தீர்க்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஆசிரியர் இடமாற்ற நடவடிக்கையினை அரசியல் அதிகாரத்தை பாவித்து, பொத்துவில் அல் - கலாம் வித்தியாலயத்திற்கு வழங்கப்பட்ட இடமாற்று கடிதத்தினை இரத்து செய்து விட்டு, திருகோயில் வலயத்திற்கு இடமாற்றம் எடுத்து திருக்கோவில் வலயத்திலுள்ள அக்கரைப்பற்று கோலாவில் பாடசாலைக்கு பிழையான தகவல்களை சொல்லி இடமாற்றுக் கடிதத்தைப் பெற்றுள்ளார் இதனை அறிந்து அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று கோட்டங்களில் இருந்து பொத்துவில்லுக்கு இடமாற்றம் செய்வதற்கு தெரிவு செய்யப்பட்ட 49 ஆசிரியர்கள் நாங்கள் பொத்துவில் பிரதேசத்திற்கு போகமாட்டோம் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 ஆனால் பொத்துவில் பிரதேசப் பாடசாலைகளின்  ஆசிரியர் பற்றார் குறையை நிவர்த்தி செய்யும் தார்மீகப் பொறுப்பு எம் எல்லோருக்கும் உள்ளது பொத்துவில் பிரதேச பாடசாலைகளின் ஆசிரியர் இடமாற்றம் சம்பந்தமாக எதிர்க்கட்சி தலைவரும்  முன்னாள் கல்விப் பணிப்பாளருமான. சி. தண்டாயுதபாணி நன்கு அறிவார். அத்துடன் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் ஒரு சிங்கள மகானாக இருந்த போதிலும் நமது மாகாணத்தின் இன ஒற்றுமைக்கும் நமது தமிழ் பேசும் மக்களினது கல்வி துறையை வளர்ப்பதற்கும் பாரிய பங்கினை வழங்கியுள்ளார். அவரை நாம் பாராட்ட வேண்டும்.

கிழக்கு மாகாண அமைச்சர் என்றவகையில் நான் கவலையயடைகின்றேன். கடந்த மாகாணசபை ஆட்சிக் காலத்தில் கூட்டுப் பொறுப்பு, இன ஒற்றுமை, இன ஐக்கியம் எல்லாம் வளர்த்தெடுக்கப்பட்டன. இந்த ஆட்சியிலே ஆளும் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் இவைகள் எல்லாம் இல்லாமல் இருப்பது பெரும் கவலையளிக்கின்றது. இதனை நினைத்துப்பார்க்கும் போது பேய்களோடு சேர்ந்து ஆட்சியில் இருப்பது போன்று  எண்ணத் தோன்றுகின்றது  என அமைச்சர் உதுமாலெவ்வை மேலும் குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. உலகில் உள்ள பிரச்சினைக்கு முக்கிய காரணிகள்

    01. கடமையை ஒழுங்காக செய்யாதோர்.
    02 கடமையை செய்யும்போது குறுக்கிடுவோர்
    03. கடமையை துஷ்பிரயோகம் செய்வோர்.

    ஆளும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களே! மேற்குறப்பட்டவற்றில் யாருக்கு எந்தத்தொப்பி பொருந்துமோ அதை போட்டுகொள்ளவும்.

    ReplyDelete
  2. viraddi adikka veandiyavarhalai udan viradda veandum iyyya

    ReplyDelete

Powered by Blogger.