திவிநெகுமே இன்று பாராளுமன்றத்தில் - மு.கா. எம்.பிக்களின் செல்போண்கள் செயல் இழப்பு..!
வறுமையை ஒழிக்கும் அரசின் தேசிய வேலைத் திட்டம் என ஒருதரப்பும், மாகாண அதிகாரங்களை திருடும் சட்டம் என மறுதரப்பும் வர்ணிக்கும் திவிநெகுமே சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்கிழமை 8 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படுகிறது.
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் பாராளுமன்றத்தில் சட்டமூலமாக்கப்படவுள்ள திவிநெகுமே சிறுபான்மை தமிழ், முஸ்லிம், மலையக சமூகங்களுக்கு ஆபத்தானது என வாதிடப்படுகிறது. இருந்தபோதும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறுபான்மை தரப்பு கட்சிகள் இச்சட்டமூலம் சிறுபான்மை சமூகங்களுக்கு நன்மையை ஏற்படுத்துமென்று கூறுகின்றன.
இச்சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம்
இச்சட்டமூலத்திற்கு ஆதரவாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் கட்சிகள் வாக்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தபோதும் இதுவரை முஸ்லிம் காங்கிரஸ் இச்சட்டமூலம் தொடர்பில் எத்தகைய தீர்மானத்திற்கு வந்துள்ளது என்பதை பகிரங்கமாக அறிவிக்கவில்லை.
திங்கட்கிழமை இரவு இதுதொடர்பில் மேலதிக விளக்கம் கேட்பதற்காக யாழ் முஸ்லிம் இணையமானது ரவூப் ஹக்கீம், ஹசன் அலி உள்ளிட்ட முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்களின் கையடக்க தொலைபேசிக்கு தொடர்புகளை ஏற்படுத்தியது. எனினும் நள்ளிரவு வரை, அவர்கள் அனைவருடைய கையடக்க தொலைபேசிகளும் செயல் இழந்து காணப்பட்டன.
எனினும் யாழ் முஸ்லிம் இணையத்திற்கு கிடைத்த நம்பகரமான வட்டார தகவல்களின்படி முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்கள்ள திவிநெகுமே சட்டமூலம் தொடர்பில் அமைச்சர் பஸில் ராஜபக்ஸவுடன் இறுதிக்கட்ட பேச்சுக்களில் ஈடுபடடுள்ளனர். எனினும் பேச்சுவார்த்தை முடிவுகள் எமது இணையத்திற்கு கிடைக்கப்பெறவில்லை.
இதேவேளை திவிநெகுமே சட்டமூலம் தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளதாவது,
இது இலங்கை வரலாற்றில் அரசொன்று சமர்ப்பிக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களைக் கொண்ட சட்டமாகும். இந்நாட்டில் வறிய மக்களே இதனால் பலம் பெறு வர்.அவர்களை எப்போதும் வறியவர்களாக வைத்திருப்பது அரசின் நோக்கம் அல்ல. 'மஹிந்த சிந்தனை' கோட்பாடுகளின் மூலம் காட்டிய ஒரு தரிசனம் உள்ளது.

மற்றைய முஸ்லிம் MP ( அதாவுல்லா, ஹிஸ்புல்லாஹ், ரிஷாத், அஸ்வர் , ஏறக் ) களினதும், அரசாங்கத்திலுள்ள தமிழ் MP களினதும் நிலையென்ன?
ReplyDeleteஏன் முஸ்லிம் காங்கிரஸ் மட்டும் விமர்சிக்கப்பட்டும், பொறுப்பும் கூறவேண்டும் ?
முஸ்லிம் காங்கரஸ் கண்டிப்பாக சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும். அப்புறமாக கட்சியை பாதுகாக்கவேண்டிய இக்கட்டான சூழலில் வாக்களித்தோம் என்று பொருக்கி ஹசன் அலி அறிக்கை விடுவார். இன்தா அறிக்கைக்கு ஆகக்கூடியது ஒரு வாரத்துக்கு எதிப்பு அறிக்கைகள் அது இது என்று பத்திரிகை தர்மம் பேசும். அப்புறம் எல்லாம் ஓடி அடங்கிவிடும். இப்படியான ஒரு நிலைமைதான் இன்று முஸ்லிம் மக்களின் கையில் உள்ள அரசியல். மக்களின் பலகீனம்தான் இந்த காங்ரசின் எதிர்கால வெற்றியும் கூட. இதுதான் கசப்பான உண்மை. மக்கள் தேழிவுபெற வேண்டும் புது யுகம் பெற.
ReplyDeleteAtavulla, Hiballaa and Rishard are publicly supporting MR. they are the people will raise their hand for what ever MR ask to do. But in case of SLMC, they promised many thing and got people votes that they will act only for the benifit of Muslims. after the election they do the U turn and become same Atavulla Hisbulla and Rishard. that is the different betwwen these two parties. Infact Attavulla Hisbullah and Rishard are 100 times better than SLMC. they did not promise the right of muslims during election.
ReplyDelete