Header Ads



பறஹதெனியவில் சுமூக நிலை - 3 முஸ்லிம் இளைஞர்கள் பொலிஸில் ஒப்படைப்பு..!

(இக்பால் அலி)

மாவத்தகம பொலிஸ் பிரிவில் கண்டி குருநாகல் வீதியில்  பறகஹதெனிய என்ற இடத்தில்  மோட்டார் சைக்கிளின் மூலம்  குருநாகலிலிருந்து பறகஹதெனிய நோக்கி வந்த இரு முஸ்லிம் இளைஞர்களுக்கும்  வேஉடயை நோக்கி பயணம் செய்த பௌத்த விஹாரையில் பணிபுரியும் வேன் சாரதிக்குமிடையே  முன் பின் முந்துவதில் ஏற்பட்ட பிணக்கினால்  பறகஹதெனிய சந்தியில் கைகலப்பாக மாறிய சம்பவத்தைத் தொடர்ந்து  அவ்விடத்திற்கு வருகை தந்த பௌத்த தேரர்களினால் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டன. 

இது தொடர்பாக  மாவத்தகம பிரதேச சபையின் எதிர்கட்சித் தலைவர் முஹமட் ரிபாழ் மற்றும் மாவத்தகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜயதிலக ஆகியோர்  மேற்கொண்ட சமரச முயற்சியினால் சுமூகமான நிலையில் தீர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டு பெப்ரவரி முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஜிஸ்ரேட் நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பிரதேச மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள் தற்போதைய கால நேரத்தைக் கருத்திற் கொண்டு சமயோகிதமாக நடந்து கொண்டதன் பிரகாரம்  மாவத்தகம பிரதேச சபையின் எதிர்கட்சித் தலைவர் முஹமட் ரியாழ் தலைமையில் வடமேல் மாகாண பௌத்த விஹாராதிபதி போயாகொட ஹெல விட்டிகம  இந்திரத்தன நாயக சுமாமிவிடம் சென்று   இந்தச் சம்வம் தொடர்பாக கதைத்தனர்.  அவர் குறித்த நபர்களை  ஒப்படைக்க முடியுமாயின் ஆர்ப்பாட்டத்தை கைவிடுவதாக கேட்டுக் கொண்டார்.

அதன் பின் எதிர்க்கட்சித் தலைவர் முஹமட் ரிபாழ், மாவத்தகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி. ஜயதிலக, பொலிஸ் அதிகாரி குனரட்ன ஆகியோரும் மற்றும் 10 பேர்ககொண்ட விஹாராதிபதிகளுடன் சமரச கலந்தரையாடல் ஒன்றில் ஈடுபட்டுனர். அந்தக் கலந்தரையாடலில்  தாக்கியவர்கள் மூவரையும் இனம் கண்டு மாவத்தகம பொலிஸ் நிலையம் ஒப்படைக்கப்பட வேண்டும் என பௌத்ததேரர்கள் வேண்டிக் கொண்டனர்.

அதற்கு இணங்க இவ்விளைஞர்கள் மூவரையும் தான் ஒப்படைப்பதாக அவ்விடத்தில் எதிர்க்கட்சித் தலைவர் முஹமட் ரிபாழ் வாக்குறுதி வழங்கினார். அதன் படி  இவ்விளைஞர்கள் மூவரையும் அழைத்துக் கொண்டு  பொலிஸில் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து இம்மூவின இளைஞர்களும் விளக்கமறியலில் வைக்கக்பட்டுள்ளனர்

விஹாரையில் பணியுரியும் சாரதியை மோட்டார் சைக்கிளில் வந்த முஸ்லிம் இளைஞர்களை கடுமையாக ஏசி தாக்க முற்பட்ட போது அவ்விரு இளைஞர்களுடன் இன்னுமொரு முஸ்லிம் இளைஞரும் சேர்ந்து தாக்கியதனால் விஹாரையின் சாரதி கடுமையாகப் தாக்குதலுள்ளாகி  மாவத்தகம மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து சம்பத்தை அறிந்து திடிரென அவ்விடத்திற்கு சுமார் 15 பேர் அளவிலான பௌத்த சமயத் தேரர்கள் அங்கு வருகை தந்துள்ளனர். இவர்கள் மூன்று வேனிலும் ஒரு முச்சக்கர வண்டியிலும் வருகை தந்துள்ளனர். அவர்கள் பசாரிலுள்ள முஸ்லிம் கடைகளுக்குச் சென்று யார் அடித்தார்கள் என அதட்டிக் கேட்டு விட்டு சாப்பாட்டுக் கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிங்கள நபர்களுக்கு சாப்பிடுவதற்கு வேறு சிங்களக் கடைகள் இல்லையா. கடைகளை நடத்த சவூதி நாட்டுக்குச் செல்ல வேண்டியது தானே எனக் கடுமையாக ஏசியுள்ளனர் அப்போது அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த சிங்கள நபர்கள் சாப்பாட்டை அப்படியே வைத்து விட்டு வெளியே  சென்றுள்ளனர் காரசாரமாக வார்த்தைப் பிரயோகங்கள் மூலம் முஸ்லிம் கடை வியாபாரிகளை கடுமையாக சாடியது மட்டுமல்லாமல் தாக்கிய நபர்களைத் தராவிட்டால் மாவத்தகம நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றைச் செய்து அனைத்துக் கடைகளை எரிப்பதுடன் பறகஹதெனியவிலுள்ள இரு பள்ளிவாசல்களுக்கு முன்னால் சத்தியாக்கிரகம் இருப்போம் என்று  கூறிவிட்டுச் சென்றுள்ளனர்.

இதேவேளை மாவத்தகம பொலிஸார் இந்த விடயத்தில் எந்தவிதமான பக்கசார்வுமின்றி நீதியாக நடந்தமைக்கு நன்றி தெரிவிப்பதுடன் இந்தப் பிரதேசத்தில் சமகால நிலவரம் குறித்து எந்தவிதமான விழிப்புணர்வூட்டும் நிகழ்வுகள் நடத்தப்பட வில்லை எனவும் சமீபத்தில் பொலிஸாருக்கு எதிராக நடத்திய வீதி மறிப்பு ஆர்ப்பாட்டம் என்பதெல்லாம் தற்போதைய நாட்டினுடைய சூழ்நிலைக்கு ஆபத்தான விடயம் எனவும் பிரதேச வாசிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

4 comments:

  1. Idan thaakam sandai il eedu patta 3 perodu mattum mudiwadillai,
    mulu srilankan muslimkalaiyum paadikum.. Muslimkale!!!
    Mihavum nidaanamaahawum,vittuk kodupudanum seyatpada wendiya kaalam...

    Inda widayangal patri muslim ummah vitkaana vilippunarwu awasiyam...
    Allahvidam dua seiwom.

    ReplyDelete
  2. Entha pirachchinaiku mudiukadum mugamaga Hon Rishad Bathirudeen,fawzi & N.M.Ameen ahiyorin thalamaiel Mahintha Rajapksa meet panurinranar

    ReplyDelete
  3. Race ஓடனும் என்றால்
    Sigiriya Rally cross
    Walawe Super Cross
    Sigiriya Rally cross
    Katukurunda
    Wayamba Speed
    என்று 1000 Rally programme இருக்கிறது நாட்டில், அவற்றில் போய் உங்கள் திறமையை காட்டுவதுதானே!

    எங்கடா ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என்று கண்ணில் எண்ணெய் விட்டு பார்த்துக்கொண்டிருகின்றனர் பேரினவாதிகள்,இந்த சூழலில் ரோட்ல rally போனார்களாம் சண்டை இட்டார்கலாம்.வீதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தின்போது மூன்றாவதாக இணைந்து கொண்ட அந்த நபர் சமாதானப்படுத்த முயற்சித்திருக்க வேண்டுமே தவிர முட்டாள் போன்று அவரும் சேர்ந்து தாக்கியிருக்கக்கூடாது.எமது பக்கம் நியாயம் இருந்தாலும் நாம் பொறுமையுடன் செயற்பட்டிருக்க வேண்டும்.

    Jazaak Allah Hairan Mohamed Rifal அவர்களே!

    ReplyDelete
  4. நாங்கள் வென்றுவிட்டோம் என்று அவர்கள் நினைக்க கூடும்
    தவறு செய்தவர்களுக்கு அல்லாஹ் தண்டிப்பான்.
    மனிதன் தண்டித்தால் மறைந்து விடும், மறந்து விடும் ஆனால்
    அல்லாஹ் தண்டித்தால் ......................திரும்ப அழுந்திருக்க மாட்டான்.

    ReplyDelete

Powered by Blogger.