Header Ads



ஷிராணிக்கு எதிரான குற்றபிரேணை 106 மேலதிக வாக்குளால் நிறைவேற்றம் - அடுத்தது என்ன?


(Tm) பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு  எதிரான குற்றப்பிரேரணை அறிக்கை 106 மேலதிக வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் நிறைவேற்றப்பட்டது.

அறிக்கைக்கு ஆதரவாக 155 வாக்குகளும் எதிராக 49 வாக்குகளும் கிடைத்தன. ஐக்கிய தேசியக்கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் அறிக்கைக்கு எதிராக வாக்களித்தன.

நாடாளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட குற்றப்பிரேரணை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டதன் பின்னர், அவரால் வழங்கப்படும் தீர்மானத்துக்கமைய பிரதம நீதியரசர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என இலங்கை அரசியலமைப்பின் 107 (2) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஜனாதிபதியினால் கைச்சாத்திடப்பட்டு வெளியிடப்படும் அதிகாரப் பத்திரத்தின் ஊடாக பிரதம நீதியரசர் கலாநிதி உபதிஸ்ஸ அத்தபத்து பண்டாரநாயக்க வாசல முதியன்ச ராலஹாமிகே ஷிராணி அன்ஷுமாலா பண்டாரநாயக்கவை பதவிலியிலிருந்து நீக்க முடியும் என அரசியலமைப்பின் 107 (1) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

4 comments:

  1. அடுத்தது என்ன ஒரு டம்மி தான் .............

    ரவூப் ஹக்கீம் அதை ஒரு மு. கா உறுப்பினருக்கு தவணை (கிழக்கு முதல் அமைச்சரை போல் )முறையில் கேட்கிறாராம்

    ReplyDelete
  2. is rauf hakeem awake now? anyway whats the use of him?

    ReplyDelete
  3. நீதிக்கு நீதி கேக்க நாதி இல்லை...!
    எம் சதிக்கும் நீதி கேக்க நாதியில்லை...!
    ஏக இறைவா உன்னை
    மண்றாடிக்கேக்கிறோம்
    எம்மை பிறக்கவைத்த நாட்டில்
    எம்மை பிழைக்கவை,
    எமக்கு சமதானமும், சமாதானமும் நிலைக்கவை..!

    ReplyDelete
  4. rauf hakkeem mattumthan muslimkalai patri sinthikanum, averthan muslim kaluku porupu entru ninaipathu wrong. Matre muslim ministers ennethe kilikirange?

    ReplyDelete

Powered by Blogger.