இலங்கையில் சிவப்பு மழைக்கு அண்டவெளி செயற்பாடுகளும் காரணமாக இருக்கலாம்..!
நாட்டின் சில பகுதிகளில் கடந்த காலங்களில் ஏற்பட்ட சிவப்பு நிற மழைக்கு, அண்டவெளியில் ஏற்படுகின்ற சில செயற்பாடுகள் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பிரித்தானியாவின் பெக்கிங்ஹேம் பல்கலைக்கழகத்தின் கிரகங்கள் தொடர்பிலான ஆராய்சியாளர் சந்திரா விக்ரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இந்த சிவப்பு மழை தொடர்பில் ஆராய்கின்ற வைத்தியர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது, அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
எனினும் இதனை உறுதி செய்வதற்கு மேலும் பரிசோதனைகள் அவசியப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment