Header Ads



சமகால இலங்கையில் அதிதீவிரவாதப் போக்குகளும், பிளவுகளும் கருத்தரங்கு..! (படங்கள்)



(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)    

சமகால இலங்கையில் முஸ்லிம்களின் நிலை என்ற தலைப்பிலான கருத்தரங்கொன்று  கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றது.

ஜாமியா நழீமியா கலா பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.எச்.எம் பழீல், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.எச்.எம். ஜெமீல், கண்டி சமாதான நிறுவனத்தின் இயக்குநர் முஸம்மில் காதர் உட்பட இலங்கையில் பல்வேறு சமூக அமைப்புக்களில் பணியாற்றும் சுமார் 50 முக்கியஸ்தர்கள் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் வேந்தரும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்பினருமான தேசபந்து ஜெஸீமா இஸ்மாயில் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இலங்கையில் இஸ்லாமியக் குழுக்களுக்கிடையே காணப்படும் அதிதீவிரவாதப் போக்குகளும் குழுப்பிளவுகளும் என்ற கருப்பொருளில் ஆய்வு ஊடகவியலாளரான ஆஷிப் ஹுஸைன் கருத்துரை வழங்கினார்.

முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் நிகழ்ச்சித் திட்ட அலுவலர் லெய்லா உடையார் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.










No comments

Powered by Blogger.