புத்தளத்தில் இரத்ததான நிகழ்வுக்கு ஏற்பாடு
(அபூ நாதில்)
தேசிய சுகாதார வாரத்தினை முன்னிட்டு புத்தளம் நகர சபை, புத்தளம் தள வைத்தியசாலை, புத்தளம் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் அனைத்து அரசாங்க நிறுவனங்களின் ஒத்துழைப்புடனும் புத்தளத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றன.
இதன் ஒரு நிழ்வாக இரத்த தான நிகழ்வொன்று எதிர்வரும் 15.12.2012 சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. Puttalam Buddies அமைப்பின் ஏற்பாட்டில் புத்தளம் மஸ்ஜித் வீதி பழைய கொத்பாப் பள்ளி மைதானத்தில் அமைந்துள்ள முஸ்லிம் கலாச்சார மண்டபத்தில் இரத்த தான நிகழ்வு இடம் பெறவுள்ளது. பெண்களுக்கு விஷேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமது இரத்தத்தை தானம் செய்வதன் மூலம் ஏற்படும் சுகாதார நலன்களையும் அதனால் கிடைக்கும் நன்மையையும் உணர்ந்து அனைவரும் இந்த இரத்த தான நிழ்வில் பங்குபற்றுமாறு Puttalam Buddies அமைப்பினர் வேண்டுகோள் விடுள்ளனர்.

Post a Comment