குவைத்தில் தற்கொலைக்கு முயற்சித்த இலங்கை பெண் மீது வழக்கு தாக்கல்
குவைட்டில் பணியாற்றி வந்த இலங்கை பெண் ஒருவர் அங்கு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டமைகாக அவருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. குவைட் ஷபாஹியா பகுதியில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அவர் பணியாற்றி வந்த வீட்டின் பிள்ளைகளை பாதையில் விளையாட விட்டமைக்காக, வீட்டு உரிமையாளர் குறித்த பணிப் பெண்ணை தூற்றியதைத் தொடர்ந்து, அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காப்பற்றப்பட்ட போதும், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. sfm

Post a Comment