Header Ads



சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சையில் முஸ்லிம்கள் சாதனை - சிங்களவருக்கு வந்த சந்தேகம்



இலங்கை சட்டக்கல்லூரி 2013 கல்வியாண்டுக்கு இம்முறை 78 முஸ்லிம்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சிங்கள சமூகத்தைச சேர்ந்த தேசிய புலமையாளர்கள் கவுன்சிலின் தலைவர் பந்துல சந்திரசேகர இவ்வாறு முஸ்லிம்கள் பெருமளவு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளதுடன், இதன் பின்னணயில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் காணப்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கை சட்டக்கல்லூரி 2013 கல்வியாண்டுக்கு 309 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதில் 191 சிங்களவர்களும் 78 முஸ்லிம்களும் 40 தமிழர்களும் அடங்குவர். முதல் மூன்று இடங்களை முஸ்லிம்களே பெற்றுள்ளனர்.

சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சை பெறுபேறுகளில் இந்த வருடம் அதிகளவான முஸ்லிம்கள் தெரிவாகியுள்ளமைக்கு நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமின் பக்கச்சார்பான செயற்பாடுகளே காரணம் எனத் தெரிவித்துள்ள தேசிய புலமையாளர்கள் கவுன்சிலின் தலைவர் பந்துல சந்திரசேகர, அமைச்சர் நீதித்துறையை முஸ்லிம் மயப்படுத்திவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். நீதியமைச்சர் ஹக்கீம் நீதிபதிகளையும் நீதித்துறை அதிகாரிகளையும் நியமிப்பதில் மாத்திரமன்றி சட்டக் கல்லூரி அனுமதியிலும் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை அளிப்பது இதன் மூலம் தெளிவாகியுள்ளது” என்றும் அவர் மேலும் குற்றம்சாட்டியுள்ளார்.

இப் பரீட்சை வினாத்தாள் ஆங்கிலத்திருந்து சிங்களத்திற்கும் தமிழுக்கும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழ் மொழிபெயர்ப்புக்காக நியமிக்கப்பட்டவர்களில் அதிகமானோர் முஸ்லிம்களேயாவர் என்றும் அவர் மேலும் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ் மொழி மூலத்தில் முதல் மூன்று இடங்களையும் முஸ்லிம்களே பெற்றுள்ளனர்.தெரிவு செய்யப்பட்ட முதல் ஐம்பது இடங்களில் 28 முஸ்லிம்கள் உள்ளடங்கியிருக்கின்றனர். ஆர்.எச்.எப். நுஸ்ரத் 87 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தையும் எம்.எச்.இசட்.அஸ்ரா, எம்.எச்.எம்.சிராஸ் ஆகியோர் 84 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமைச்சர் ரவூப் ஹக்கீம் சார்பில் விரைவில் விளக்கம் அளிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.