வடக்கு, கிழக்கில் 4 ஆயிரம் வீடுகளை அமைக்க ஐரோப்பிய ஒன்றியம் முன்வருகை
வடக்கு கிழக்கு மாகாணத்தில் மீள குடியேறும் மக்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் மேலும் உதவ முன்வந்துள்ளது.
இதற்கமைய 4 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசாங்கத்திற்கு நிதியை வழங்க முன்வந்துள்ளது.
இதுதொடர்பான ஒப்பந்தம் ஒன்று இலங்கை அரசாங்கததுக்கும்;, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் இடையே கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஐரோப்பிய ஒன்றியத்திற்கான தூதுவர் பேனார்ட் சவேஜ், இந்த திட்டம் 2006 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்படும் நான்காவது பாரிய வீடமைப்பு திட்டம் என்று தெரிவித்துள்ளார்.
இந்த உத்தேச திட்டம் எதிர்வரும் 2015 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் நிர்மாண பணிகளுக்காக 190 கோடி ரூபா செலவிடப்படவுள்ளது இந்த நிதி சுவிட்சர்லாந்து அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் அவுஸ்ரேலிய எய்ட் அமைப்புக்களிடமிருந்தும் பெறப்படவுள்ளது.
Post a Comment