சட்டத்தரணிகள் சங்க கூட்டதில் குழப்பம் - 3 தீர்மானங்களும் நிறைவேற்றம்
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பொது கூட்டம் இன்றைய தினம் புதுக்கடை மேல் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. இதன் போது சட்டத்தரணிகளுக்கு இடையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றவியல் பிரேரணை தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தக் கட்ட நடவடிக்கை தொடர்பிலான யோசனை ஒன்று இன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த யோசனை நிறைவேற்றப்பட்டதன் பின்னரே இந்த குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் போது தங்களில் சிலரது வாக்குகளை கணக்கெடுக்கவில்லை என்றும், இந்த யோசனை தொடர்பில் தங்களிடம் கருத்துக்களை கேட்கவில்லை என்றும் குழப்பத்தை ஏற்படுத்திய சில சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் கூட்டத்தில் முக்கிய மூன்று யோசனைகள் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டதை அடுத்து புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்தே மூன்று யோசனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
01.பிரதம நீதியரசர் குறித்த பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை சுயாதீன குழுவால் ஆராயப்படும் என கடந்த 11ம் திகதி ஜனாதிபதி அறிவித்துள்ளார். அதன்படி குற்றப்பிரேரணைனை மீள்பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதிக்கு வலியுறுத்தல்.
02.மீள்பரிசீலனை செய்யப்பட்ட பின் தொடர் விசாரணைகள் இடம்பெறுமாயின் அந்த விசாரணைகளை நியாயமான முறையில் நடத்த சட்ட ஒழுங்குகளை மேற்கொள்ள ஜனாதிபதி மற்றும் சபாநாயகரை வலியுறுத்தல்.
03.அப்படியல்லாமல் பிரதம நீதியரசர் பதவி விலக்கப்பட்டு புதிய பிரதம நீதியரசர் தெரிவு செய்யப்பட்டால் அவரை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏற்காது.
மேற்கூறிய மூன்று யோசனைகள் இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினரும் ததேகூ பாராளுமன்ற உறுப்பினருமான தெரிவித்தார்.

Post a Comment