Header Ads



கலாபூசனம் விருது வழங்கும் நிகழ்வு - 25 முஸ்லிம் கலைஞர்கள் (படங்கள்)


(அஸ்ரப் ஏ சமத்)

28 வது வருடமாக நடைபெற்று வரும்  கலாபூசன அரச விருது வழங்கும் நிகழ்வு  15-12-2012 இன்று 268 கலைஞர்களுக்கு வழங்கப்பட்டது.    சிங்கள கலைஞர்கள் 183 பேர் தமிழ் கலைஞர்கள் 60 பேர் முஸ்லீம் கலைஞர்கள் 25 பேருக்குமாக மொத்தம் 268 பேருக்கு  அரச விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந் நிகழ்வு இன்று கொழும்பு ஜோன் டி சில்வா அரங்கில் கலாச்சார அமைச்சர் டி.பி.எக்கநாயக்க தலைமையில் நடைபெற்றது. கிராமிய பிரதேச தேசிய கலைஞர்களை இனம் கண்டு  அவர்களுக்கு அரச விருது வருடா வருடம் கலாச்சார திணைக்களம் முஸ்லீம் சமய பண்பாட்டுத் திணைக்களம் ஹிந்து கலாச்சார திணைக்களமும் இணைந்து இவ் விருதிணை கலைஞர்களுக்கு வருடா வருடம் வழங்கி வருகின்றது.

இக் கலைஞர்கள் யாவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும் இவர்களுக்கு விருதும்  10 ஆயிரம் ருபா பணப்பரிசிலும் சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் அமைசச்ர் டி.பி. எக்கநாயக்க பாராளுமன்ற் உறுப்பினர் ஏ.எச்.எம் அஸ்வர், அமைச்சின் செயலாளர்  எம்.கே.பி திசாநாயக்க கலாச்சார திணை;ககளத்தின் பணிப்பாளர் விஜித் ஹூனுகல  பணிப்பாளர்கள் சாந்தி நாவுக்கரசு. வை.எல்.எம் நவவி  புரவலர் ஹாசீம் உமர் ஆகியோரும் கலந்து கொண்டு விருதுகளை கலைஞர்களுக்கு வழங்கி வைத்தனர்

இங்கு உரையாற்றிய அமைச்சர் தெரிவித்தாவாது,

ஐனாதிபதி மஹிந்த ராஜபக்ச கலைஞர்களை கொளரவிப்பதற்கும் அவர்களது மேம்பாண்டுக்கும் எதிர்வரும் வருடத்தில் 600 மில்லியன் ருபாவை ஒதுக்கித் தந்துள்ளார். அத்துடன் மருதாணை எலிபன்டன் திரை அரங்கினை திருத்தி அமைப்பதற்கு 300 மில்லியன் ருபாவை வழங்கி உள்ளார். நோய்வாய்ப்பட்டு உள்ள கலைஞர்களை நேரடியாகச் சென்று உதவும் படி எனது அமைச்சின் செயலாளாரைப் பணித்துள்ளார். அவர்களது  மரண மற்றும்  கலை செயற்பாடுகளுக்கு நிதியம் ஒன்றை ஏற்படுத்துமாறு எண்னைப் பணித்துள்ளாத அமைச்சர் எக்கனாய்கக் தெரிவித்தார்.












No comments

Powered by Blogger.