அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலய மாணவர்களுக்கு கௌரவம் (படங்கள்)
(இக்பால்.எம்.பிஹாம்)
அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பூமாலை சூடும் புகழ்மாலை விழா (13.11.2012)ஆம் திகதி கல்லூரி மண்டபத்தில் அதிபர் எம்.ஏ.சி கஸ்ஸாலி தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வலயக்கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.எம் காஸிம் மௌலவி பிரதம அதிதியாக கலந்துகொண்டார். ஆதிதிகளாக ஆசிரிய ஆலோசகர் யூ.எல் நியாஸ் மௌலவி, பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல் முனாஸ், சமுகசேவை உத்தியோகத்தர் எஸ்.எம்.எம் அமீன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன்;போது மாணவர்களுக்கு பதக்கம் அணிவித்து சான்றுதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் கற்பித்த ஆசிரியரும் கௌரவிக்கப்பட்டார்.





Post a Comment