லிபியாவில் திடீர் தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!
முகமது நபியை அவதூறாக சித்தரித்து எடுக்கப்பட்ட சினிமா படத்தை கண்டித்து லிபியாவில் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது பெங்காசியில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
அப்போது தூதர் ஜெ.கிறிஸ்டோபர் ஸ்டீவ்ஸ் உள்பட 4 அமெரிக்கர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதில், அன்சர் அல்-ஷரியா என்ற அமைப் ஈடுபட்டது புலன் விசாரணையில் தெரியவந்தது.
எனவே, தூதர் உள்ளிட்ட 4 பேரை கொன்றகளை தாக்கி அழிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் ஏமன் நாடுகளில் ஆளில்லா விமானங்கள் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தி தீவிராவதிகளை அமெரிக்கா அழித்து வருகிறது.
அதுபோன்று தாக்குதல் நடத்தலாமா? அல்லது அல்கொய்தா தலைவர் பின்லேடனை போன்று சிறப்பு அதிரடிபடை அமைத்து அவர்கள் மூலம் தீர்த்து கட்டலாமா என்று ரகசிய ஆலோசனை நடந்து வருகிறது.
இந்த தாக்குதல் வேட்டையில் ராணுவ தலைமையகமான பெண்டகனும், அமெரிக்க வெளிநாட்டு உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.வும் ஈடுபடுகிறது. மேலும் இதுகுறித்த திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்த திட்டத்தை இறுதி செய்து அதிபர் ஒபாமாவிடம் விரைவில் ஒப்புதல் பெறப்படுகிறது. அதன் பின்னர் லிபியாவில் புகுந்து மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும். அதற்கு முன்னதாக இதுகுறித்து லிபியா அரசுடன் அமெரிக்கா ஆலோசனை நடத்தி வருகிறது.

தங்கள் நினைத்ததை நிறைவேற்ற ஏற்கனவே நாள் குறித்து விட்டு பம்மாத்துக்கு உலகுக்கு சொல்கிறார்கள்
ReplyDelete