ஹிஸ்புல்லாவின் ஆயுதக்கிடங்கு மீது தாக்குதல் - சிரியா புரட்சிப்டை பழிவாங்கியது
லெபனான் தலைநகர் பெய்ரூட் அருகே நபிஷீட் என்ற கிராமம் உள்ளது. இதில் ஹிஸ்புல்லாகள் ஆதிக்கம் நிறைந்த பகுதி. இங்கு ஹிஸ்புல்லா அமைப்புக்கு சொந்தமான ஆயுத கிடங்கு உள்ளது.
நேற்று அந்த ஆயுத கிடங்கு மீது திடீரென குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் ஆயுத கிடங்கு செயல்பட்ட 4 மாடி கட்டிடம் இடிந்து நாசமானது. அதில் 3 ஹிஸ்புல்லாகள் பலியாகினர். 40-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு சிரியாவில் இயங்கும் போராட்டக்காரர்களின் புரட்சி படை பொறுப்பேற்றுள்ளது. சிரியா அதிபர் பஷர் அல்-ஆசாத்துக்கு ஆதரவாக இவர்கள் செயல்படுகின்றனர். அவருக்கு எதிராக போராடும் புரட்சி படை மற்றும் பொதுமக்களை தாக்கி அழித்து வருகின்றனர். எனவே அவர்களுக்கு பதிலடி கொடுக்க இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக சிரியா புரட்சி படையினர் அறிவித்துள்ளனர்.

Post a Comment