Header Ads



உலகின் நிரந்தர பணக்காரர் பட்டியலில் ஐதராபாத்தை ஆண்ட நிஜாம் உஸ்மான் அலிகான்


உலகின் நிரந்தர பணக்காரர்கள் பட்டியலில், ஐதராபாத்தை ஆண்ட, கடைசி நிஜாமின் பெயர் இடம் பெற்றுள்ளது.

உலகின் நிரந்தர பணக்காரர்கள் பட்டியலை, "செலிபிரிட்டி நெட் வொர்த்' என்ற இணையதளம் வெளியிட்டுள்ளது. இதில், 25 பேர், இடம் பெற்றுள்ளனர். இந்த பட்டியலில், பெண்கள் யாரும் இடம் பெறவில்லை. இந்த இணையதளம் வெளியிட்டுள்ள பட்டியலில், 14 பேர் அமெரிக்கர்கள். தற்போது, இந்த பட்டியலில் உள்ளவர்களில், மூன்று பேர் மட்டுமே உயிரோடு உள்ளனர்.

ஐதராபாத்தை ஆண்ட கடைசி நிஜாம், உஸ்மான் அலி கான். இவரது சொத்து மதிப்பு, 13.50 லட்சம் கோடி ரூபாய். இவர் இந்தியாவின் நிரந்தர பணக்காரராக கருதப்படுகிறார். 1967ல், 80 வயதில் காலமானார். இவருக்கு, ஏராளமான ஆசை நாயகிகள் இருந்தாலும், மூன்று பேர் மட்டுமே மனைவியாக அங்கீகரிக்கப்பட்டனர்.

மத்திய ஆப்ரிக்க நாடான மாலியை, 14ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மன்சா மூசாவின் சொத்து மதிப்பு தான், உலகிலேயே அதிகம். இவரது சொத்து மதிப்பு, 23 லட்சம் கோடி ரூபாய். தன்னுடைய நாட்டில் இருந்த தங்கம் மற்றும் உப்பு வளங்களை சுரண்டி, சொத்து சேர்த்தார்.இந்த பட்டியலில், அமெரிக்க செல்வந்தரான ராக்பெல்லரின் பெயர், மூன்றாம் இடத்தில் உள்ளது. இவரது சொத்து மதிப்பு, 20 லட்சம் கோடி ரூபாய்.இப்பட்டியலில், இடம் பெற்றுள்ள குறைந்த சொத்து மதிப்புடைய பணக்காரர், வாரன் பப்பெட், 82 வயதான இவரின் சொத்து மதிப்பு, 3.7 லட்சம் கோடி ரூபாய்.

2 comments:

  1. ஹைதராபாத் நிஜாம் மிர் உஸ்மான் அலி கான் சித்திகி அவர்களுக்கும், யாழ்ப்பாணம் சொனகதேருவுக்கும் இடையில் நேரடியற்ற ஒரு தொடர்பு உள்ளது.

    ஹைதராபாத்திலுள்ள உலகப் புகழ் பெற்ற ஒஸ்மானியா பல்கலைக்கழகம், 1908 இல் இவரின் பெயராலேயே நிர்மாணிக்கப் பட்டது. 'யாழ்ப்பாணம் சாஹிராக் கல்லூரி' எனத் தீர்மானிக்கப் பட்டிருந்த பாடசாலைக்கு, மறைந்த கல்வியமைச்சர் கலாநிதி பதிய்யுத்தின் மஹ்மூத்
    அவர்கள் 'ஒஸ்மானியா கல்லூரி' என்று பெயர் சூட்டியது குறிப்பிடத் தக்கதாகும்.

    ReplyDelete
  2. இந்தியா எங்கள் தாய்நாடு இஸ்லாம் எங்கள் வழிபாடு !
    இந்திய பாதுகாப்புக்காக 1600 கோடி வாரி வழங்கிய வள்ளல் : நிஜாம் மீர் உஸ்மான் அலீ !

    கடந்த 1965-ல் பாகிஸ்தானுடன் நடந்த போரில் வெற்றி பெற்றபிறகு, சீனாவிடமிருந்து எழுந்த பெரும் அச்சுறுத்தலை சமாளிக்க போதுமான நிதி, இந்திய ராணுவத்திடம் இல்லாததால், நிதி திரட்ட ஆரம்பித்தார், அன்றைய பிரதமர், லால் பகதூர் சாஸ்திரி.

    இதற்காக, தேசிய பாதுகாப்பு நிதி (National Defense Fund) என்ற பெயரில் நிதி வழங்கிடும்படி அன்றைய குறுநில மன்னர்களுக்கு, மத்திய அரசு வேண்டுகோள் விடுத்தது.
    ஆனால், தேவையைப் பூர்த்தி செய்யும் படியான உதவிகள் எங்கிருந்தும் வரவில்லை.

    நிதி நெருக்கடியால் பதைபதைத்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, உடனடியாக ஹைதராபாத்திற்கு விரைந்தார்.
    இந்தியாவின் வேண்டுகோளை மறுக்காமல் நிறைவேற்றக் கூடிய ஒரு நல்ல மனிதர் அங்கிருக்கிறார் என்பதில் திடமான நம்பிக்கை கொண்டிருந்தார், லால் பகதூர் சாஸ்திரி.
    பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி நேரில் சென்று சந்தித்தவர், ஹைதராபாத் நிஜாம் மீர் உஸ்மான் அலீ கான் (Huzoor Nizam Mir Osman Ali Khan).

    ஹைதராபாத் நிஜாமை சந்தித்த பிரதமர், நாட்டின் மோசமான நிதி நிலைமையை விளக்கினார்.
    கூர்ந்து கேட்டுக் கொண்ட ஹைதராபாத் நிஜாம், மறுபேச்சு ஏதும் பேசாமல் எழுந்தார்.
    தனது கருவூலத்திலிருந்து 'ஐந்து டன்' எடையுள்ள தங்கத்தை உடனடியாக இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்காக அளிக்க உத்தரவிட்டார்.

    (நிஜாம் வழங்கிய நிதி இன்றைய மதிப்பீட்டின்படி 1600
    கோடிகளுக்கும் மேல்)
    பாதுகாப்பு நிதி கேட்டால், தனது சொத்தின் பெரும் பகுதியையே கொடுத்து விட்டாரே இந்த மனிதர் என்ற பேச்சு, மற்ற குறுநில மன்னர்களிடம் பரவி பெரும் சர்ச்சையானது.

    இன்றைய தேதிவரை, இந்தியாவில் எந்த ஒரு பிரமுகரோ - ஒரு நிறுவனமோ கொடுத்திராத தொகையை தனது சொந்த நிதியிலிருந்து வழங்கி, மிகப் பெரிய கொடை வள்ளலாய்த்திகழ்ந்த ஹைதராபாதின் கடைசி நிஜாம், 24-02-1967அன்று காலமானார்.

    இது[போன்ற வரலாறுகளையும் தியாகங்களையும் மறைத்து விட்டு வரும் தலைமுறையிடையே மனக்கசப்பை உண்டாக்கும் தீவிர முயற்சிகள் நடைபெறுவது வேதனை. இந்தியா எனும் அழகிய வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாட்டை தீய சக்திகளிடம் இருந்து பாதுகாப்பது ஒவ்வொரு இந்தியனின் கடமையாகும்!

    ReplyDelete

Powered by Blogger.