Header Ads



ஹமாஸ் போராளிகளிடம் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் - நடுங்குகிறது இஸ்ரேல்



(Tn)

இஸ்ரேல் விமானம் மீது ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் காசா பகுதியில் இருந்து விமான எதிர்ப்பு ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அது இலக்கில் இருந்து தவறியதாகவும் இஸ்ரேலின் ஹிப்ரூ மொழி பத்திரிகையான ‘யடியொட் அஹரொனொட்’ செய்தி வெளியிட்டுள்ளது.

காசா மீது இஸ்ரேல் தொடர்ச்சியான வான் தாக்குதலை நடத்திவரும் நிலையில் அங்கு விமான எதிர்ப்பு ஏவுகணை இருப்பது தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த விமான எதிர்ப்பு ஏவுகணைகள் லிபியாவில் இருந்து காசா பகுதிக்கு கடத்தப்பட்டதாக மேற்படி ஹிப்ரூ மொழி பத்திரிகை செய்தி குறிப்பிடுகிறது. லிபியாவில் முஅம்மர் கடாபி அரசு கவிழ்க்கப்பட்ட பின் அங்கிருந்து சுமார் 1000 விமான எதிர்ப்பு ஏவுகணைகள் காணாமல்போனதாக கூறப்படுகிறது.

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்ட்ரெலா 2 நிலத்திலிருந்து வானை நோக்கி தாக்கு ஏவுகணை முறையே காசாவில் இருந்து பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இவ்வாறான ஏவுகணை நிலத்திலிருந்து 7,500 அடி உயரத்தில் மணிக்கு 1,118 மைல் வேகத்தில் செல்லும் விமானத்தையும் தாக்கக்கூடிய வல்லமை கொண்டதாகும்.

ஏற்கனவே காசா வான்வெளியை தவிரித்துக் கொள்ளுமாறு இஸ்ரேல் வர்த்தக விமானங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.



No comments

Powered by Blogger.