முஸ்லிம் காங்கிரஸ் பல்டி அடித்தது - ஹசன் அலியின் வாக்குறுதி காற்றில் பறந்தது
திவிநெகும சட்ட மூலத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்குவதற்கு முன்னதாக அதுகுறித்து ஆராயப்படுமென முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலி வாக்குறுதி வழங்கியிருந்த நிலையில் கிழக்கு மாகாண சபையில் கொண்டுவரப்பட்ட மாகாணங்களின் அதிகாரங்களை திருடும் சட்டமூலத்திற்கு முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஏகோபித்த ஆதரவு வழங்கியுள்ளனர்.
மாகாணங்களின் அதிகாரங்களை திருடும் இந்த சட்டமூலத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கக் கூடாதென பல்வேறு தரப்புகளும் வலியுறுத்தியிருந்த நிலையிலேயே முஸ்லிம் காங்கிரஸ் இந்த சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளது.
''இச் சட்டமூலத்தில் அடங்கியுள்ள சாதக பாதகங்கள் தொடர்பில் ஆராய்ந்து முடிவு ஒன்றை ௭டுப்பதற்கோ அல்லது அதில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் முன்மொழிவுகளை மேற்கொள்வதற்கோ ௭மக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. மூன்று தினங்களுக்கு முன்னர்தான் ௭மக்கு குறித்த சட்டமூலத்தின் பிரதி கிடைக்கப்பெற்றது. அதனால் இக் குறுகிய காலப்பகுதிக்குள் அதில் அடங்கியுள்ள விடயங்களை ஆராய முடியாது. அதிகாரப் பரவலாக்கல் விடயங்களைப் பொறுத்தவரை அவசரப்பட்டு முடிவுகளை ௭டுக்க முடியாது.௭னவேதான் திவிநெகும சட்ட மூலத்திலும் ௭மது கட்சி அவசரப்பட்டு முடிவெடுக்காது'' ௭ன ஹசன் அலி முன்னர் குறிப்பிட்டிருந்த நிலையிலேயே தனது முன்னைய முடிவிலிருந்துபல் அடித்துவிட்டு முஸ்லிம் காங்கிரஸ் இந்த சட்டமூலத்திற்கு ஆதரவளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறைந்தபட்சம் இச்சட்டமூலத்தை முஸ்லிம் காங்கிரஸ் அலசி, ஆராய்ந்து பார்த்துவிட்டாவது அதிலுள்ள சாதக பாதகங்கள் குறித்து முஸ்லிம் சமூகத்துடன் கலந்துரையாடலாவது செய்திருந்துவிட்டு இறுதியான தீர்மானத்தை மேற்கொண்டிருக்கலாம். எனினும் முஸ்லிம் சமூகத்துடன் அவ்வாறு எத்தகை கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளாது திவிநெகும சட்ட மூலத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கியுள்ளமையானது வரலாற்றில் ஒரு துயர்மிகு சம்பவம் எனலாம்

Post a Comment