Header Ads



மட்டக்களப்பு - கொழும்பு புகையிரதத்தில் வேலியே பயிரை மேய்கிறதாம்...!



முனையூரான்

வேலியே பயிரை மேயும் நிலையிலா  மட்டக்களப்பு -  கொழும்புக்கான புகையிர சேவையுள்ளது என்  பயணிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

மட்டக்களப்பு – கொழும்புக்கான இரவு நேரச் சேவை  புகையிரதங்களில் பயணிக்கும் பெண் பயணிகள் இளைஞர்களின் சேட்டைகளுக்கு ஆளாகுவதாகும் ஒரு சில வேளையில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடும் இரயில் பெட்டிக் காவல் உத்தியோத்தர்களின் சில்மிஷியங்களுக்கும் ஆண் துணையின்றி பயணிக்கும் பெண் பயணிகள் ஆளாகுவதாகவும் குறிப்பிடப்படுகிறது. வேலியே பயிரை மேய்ந்தால் என்ன செய்வது எனப் பயணிகள் கேட்கின்றனர்.

இதேவேளை, இலங்கை புகையிர சேவையில் தூரப் பிரதேசங்களுக்கான சேவையில் இலங்கை புகையிரத நிலையத்துக்கு  அதிகளவு வருமானத்தைப பெற்றுக் கொடுப்பது மட்டக்களப்பு – கொழும்புக்கான புகையிர சேவையாகும். 
இருப்பினும், இப்புகையிர நிலையத்தின் உள்ளக் கட்டமைப்பு வசதிகள் இன்னும் விருத்தி செய்யப்படாமல் உள்ளன. இந்நிலையத்திலுள்ள ஆண்கள் இளைப்பாறும் அறை மற்றும் பெண்கள் இளைப்பாறும் அறை என்பவை மின்விளக்குகள் இன்றி இருளில்; மூழ்கிக் கிடக்கின்றன. இவ்வறைகள் இளப்பாறுவதற்குரிய வசதிகளுமின்றிக் காணப்படுவதாக பயணிகள் கூறுகின்றனா

நாளொன்றுக்கு இலட்சணக்கான வருவாயைப் பெற்றுக் கொடுக்கும் இந்நிலையத்தில் குறைந்தது 100 ரூபாவுக்கு ஒரு மின்விளக்கை வாங்கி அவ்வறைகளில் பொறுத்துவதற்கு வக்கில்லாத நிலையிலா இப்புகையிரத நிலைய அதிகாரிகள் உள்ளனர் என்றும் அப்பயணிகள் வினா எழுப்புகின்றனர்.
அது தவிர, பயணத்துக்கான 'டிக்கட்'பவாங்குவதற்காக வரும் பயணிகள் இருப்பதற்கு ஆனங்கள் இன்றி; புகையிர நிலையத்தின் முற்றத்தில் நிற்கொண்டிருப்பதாகவும் இருக்கும் ஆனங்கள் மிகவும் பழைமை வாய்ந்ததாகவும் உள்ளதாகத் தெரிவிக்கும் பயணிகள். கம்பஹா, காலி போன்ற புகையிர நிலையங்களுடன் ஒப்பிடுகையில் மட்டக்களப்ப புகையிர நிலையத்தின் உள்ளகக் கட்டமைப்பு வசதிகள் மிகவும் பின்தங்கிய நிலையிலேயெ உள்ளதாகக் குறிப்பிடுகின்றனர்.

No comments

Powered by Blogger.