கல்முனை மாநகர அபிவிருத்தி தொடர்பாக வெளிநாட்டு பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்
(சௌஜீர் ஏ முகைடீன்)
அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் நிதியுதவியுடன் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் அனுசரணையுடனும் ஆசியா மன்றம் முன்னெடுத்து வரும் உள்ளூர், பொருளாதார ஆட்சி செயற்திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர அபிவிருத்தி தொடர்பாக ஆசிய மன்றத்தின் கொரிய நாட்டு ஆராய்ச்சியாளரான திருமதி கியோங்ஹவா ஹாவுடன் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கலந்துரையாடினார்.

ஆசிய மன்றத்தின் கிழக்குமாகாண நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.வலீதின் நெறிப்படுத்தலில் முதல்வர் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆசிய மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர்களான தம்மிக்க, சசிதரன், மாநகர சபை கணக்காளர் எல்.ரீ.சாலிதீன், மாநகர சபை நிர்வாக உத்தியோகத்தர் அலாவுதீன், மாநகர சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வெளிநாட்டு முதலீடுகளை எவ்வாறு தேசிய ரீதியிலிருந்து உள்ளுராட்சி மன்றங்களுக்கு கொண்டுவருவது தொடர்பாக 18 உள்ளுராட்சி மன்றங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட கல்முனை, அம்பாறை, அக்கரைப்பற்று, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய உள்ளுராட்சி மன்றங்களில் அபிவிருத்தி மாதிரியினை ஏற்படுத்துவதற்கு கொரிய நாட்டு அரசாங்கம் முன்வந்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் கல்முனையில் நவீன பல்வியாபார கட்டிடத் தொகுதி (சொப்பிங் கொம்பலக்ஸ்) அமைத்துத்தருமாறு முதர்வர் கேட்டுக் கொண்டதற்கினங்க இத்திட்டத்திற்கான அறிக்கையினையும் நிதி மூலங்களையும் ஆசிய மன்றம் பெற்றுத் தருவதாக ஆசிய மன்ற பிரதிநிதிகள் தெரிவித்தனர். கல்முனை நகர அபிவிருத்தி திட்டத்தினை தயாரிப்பதற்கான சாத்திய வளங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
குறித்த திட்டத்திற்கென மாநகர சபை வழங்கவிருக்கின்ற காணியினை இக்குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
Post a Comment