Header Ads



நபிகள் நாயகத்தை அவமதித்தவனை கொன்றால் மற்றுமொரு பரிசு


நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில், திரைப்படத்தை தயாரித்தவரை கொல்பவருக்கு, இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்கள் வெகுமதி அளிக்கப்படும் என, பாகிஸ்தான் முன்னாள் எம்.எல்.ஏ., அறிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய, "இன்னோசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்' என்ற திரைப்படத்தின் சில காட்சிகள், இணையதளத்தில் வெளியாகி, உலகெங்கும், அமெரிக்காவுக்கு எதிரான போராட்டங்களை வெடிக்கச் செய்தது. இத்திரைப்படத்தின் காட்சிகளை, இணையதளத்தில் வெளியிட, பாகிஸ்தான் அரசு தடை விதித்தது. 

இந்நிலையில், பெஷாவர் நகரில், "திபா -இ- பாகிஸ்தான்' என்ற பழமைவாத முஸ்லிம் அமைப்பின் பேரணி நேற்று நடந்தது. இந்த பேரணியில் கலந்து கொண்ட முன்னாள் எம்.எல்.ஏ., இக்ரமுல்லா ஷாகித், சர்ச்சைக்குரிய திரைப்படத்தை தயாரித்தவரை கொல்பவருக்கு, இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்கள் (1.14 கோடி ரூபாய்) அறிவித்தார். இந்த அறிவிப்பைக் கேட்ட, அங்கு கூடியிருந்த 15 ஆயிரம் பேர், மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.

No comments

Powered by Blogger.