Header Ads



நியூயோர்க் நகர் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாம் - முஸ்லிம் இளைஞர் கைது


அமெரிக்காவில் நியூயார்க் வர்த்தக மையத்தில் கட்டடங்கள் சிலவற்றை கார் குண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்ட இளைஞர் கைதானார். இது தொடர்பாக புலனாய்வு பிரவு போலீசார் விசாரண‌ை நடத்தி வருகின்றனர். வங்கதேச நாட்டைச் சேர்ந்த குவாஸிமுகமது ரிஸ்வானூல் ஆஷான் நபீஸ் (21) என்ற இளைஞர் அமெரி்க்காவிற்கு மாணவர் விசா பெற்று கடந்த ஜனவரி மாதம் வந்துள்ளார். 

நியூயார்க் நகரில் முக்கிய கட்டடங்களை நோட்டமிட்டு கடந்த செப்டம்பரில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளான். இந்நிலையில் நியூயார்‌க் நகரின் மன்ஹாட்டனில் உள்ள வர்த்தக கட்டடங்கள் உள்ளிட்ட இடங்களை கார் குண்டு மூலம் தாக்குதல் நடத்த முயன்றதாக எப்.பி.ஐ. போலீசார் நபீ‌‌ஸை இன்று கைது செய்தனர். தற்போது புரூக்ளின் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதன் மூலம் நியூயார்க் நகரில் நடத்த இருந்த மிகப்பெரிய தாக்குதல் சதி திட்டம் முறியடிக்கப்பட்டது.

1 comment:

  1. INTHA WAKAYAANA NADAWADIKKAIKAL MOOLAM ISLAAM PATRIYA PARANTHA ARIWU ILLAATHA SILA MADAYARKAL THOOYA ISLAATTHIN MEETHAANA THAWARAANA ENNAKKARUKKALAI PIRA MATHATTHAWARKAL MATTHIYIL WITHAIKKIRAARKAL .ISLAAM KATTRU THANTHA AHIMSAYAI KULI THOONDIPUTHAIKKINRANER.

    ReplyDelete

Powered by Blogger.