தவறான சிகிச்சையும், நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பும்..!
தவறான சிகிச்சையால், குழந்தையின் மூளையை சிதைத்த மருத்துவமனை, 85 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. பிரிட்டனின் மான்செஸ்டர் பகுதியை சேர்ந்தவர் ஆன்ட்ரஸ். 1994ம் ஆண்டு, இவரது ஏழு மாத ஆண் குழந்தை பெட்ரோவுக்கு, வைரஸ் தொற்று ஏற்பட்டதால், மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தையை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்த, டாக்டர்கள் குழு அளித்த தவறான சிகிச்சையால், நல்ல உடல் நிலையில் சேர்க்கப்பட்ட குழந்தையின் மூளையில் சிதைவு ஏற்பட்டது. தற்போது பெட்ரோவுக்கு 19 வயதாகிறது. இன்னும் ஆறு மாத குழந்தையின் மன நிலையில் தான் உள்ளான்.
மூளை பாதிக்கப்பட்ட பெட்ரோவை இரவு பகலாக கவனிக்க இரண்டு பேர் தேவைப்படுகிறது. டாக்டர்களின் தவறான சிகிச்சையால், தங்களின் மகன் வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு, அவனை வாழ்நாள் முழுக்க பராமரிக்க மிகவும் சிரமப்படுவதாக கூறி, ஆன்ட்ரஸ் தம்பதியர், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
ஆன்ட்ரஸ் தம்பதியர் கோரிய, நஷ்ட ஈட்டை முதலில் தர மறுத்த, மருத்துவமனை, கோர்ட் தீர்ப்பில் கூறப்படும் தொகை அளிக்க முன்வந்துள்ளது. தற்போது, பெட்ரோவுக்கு செலவாகும் தொகை, ஆயுள் முழுக்க அவனை பராமரிக்க ஆகும் செலவு உள்ளிட்டவற்றை கணக்கிட்டு 85 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்ட ஈடு வழங்க, மருத்துவமனை, கோர்ட்டில் ஒப்புக்கொண்டுள்ளது.

Post a Comment