நடந்து முடிந்த ஆர்ப்பாட்டங்களும், நாம் பெற வேண்டிய படிப்பினைகளும்..!
(அபூஆஸியா - காத்தான்குடி)
அமெரிக்காவைச்சேர்ந்த கிறிஸ்த்தவ மதப் பாதிரியால் கண்மணி நாயகம் (ஸல்)அவர்களை ஒரு காமுகராகவும் வன்முறையாளராகவும் சித்தரித்தது (நவூது பில்லாஹி மின்ஹா) மாத்திரமல்லாது அல்-குர்ஆன் அவற்றை ஊக்குவிப்பது போன்ற வடிவத்தையும் ஏற்படுத்தி திரைப்படம் ஒன்றை உருவாக்கியிருப்பது உலக மக்கள் யாவரும் அறிந்த விடயம்.
அத்தோடு அத்திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள் யூ டியூப் (youtube) தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து உலகின் மூலை முடுக்கெல்லாம் முஸ்லிம்கள் கொந்தளித்து போய் ஆர்ப்பாட்டங்கள்,பேரணிகளை நடாத்தி அதில் சில முஸ்லிம்கள் சஹீதாக்கப்பட்டும் உள்ளனர்.
முஸ்லிம்களான எம்மைப் பொறுத்தவரையில் நமது உயிரிலும் மேலாக மதிக்கப்படும் ஒரு தலை சிறந்த மனிதராகவே நபிகளாரை நோக்க வேண்டும்.அதையேதான் நபிகளார் கூறினார்கள்.
உங்களில் ஒருவருக்கு அவருடைய தந்தை, அவருடைய பிள்ளை, ஏனைய மக்கள் அனைவரையும்விட நான் நேசத்திற்குரியவனாக ஆகாதவரை அவர் (உண்மையான) இறை நம்பிக்கை (ஈமான்) கொண்டவர் ஆகமாட்டார்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : புஹாரி (15)
ஒரு முஸ்லிம் இறை நம்பிக்கையுள்ள பூரண முஃமினாக மாறுவதற்கு நபிகளார் மேலுள்ள அன்பே பிரதானமான ஒன்றாகக் காணப்படுகின்றது.
இதனை உணர்ந்ததால்தான் இன்று உலகளாவிய ரீதியில் உணவுப்பஞ்சத்தில் அல்லாடும் சோமாலிய மக்கள் கூட நபிகளாரின் பெயருக்கு ஒரு யூதன் களங்கம் ஏற்படுத்தி விட்டான் என்பதற்காக கொதித்தெழக்கூடிய நிலையை நம் அவதானிக்கின்றோம்.
நபிகளாரின் மீது அன்பு செலுத்துதல்....
'நபியே சொல்லுங்கள் உங்களது பெற்றோர்களும் பிள்ளைகளும், சகோதரர்களும், மனைவிமார்களும், குடும்பத்தாரும், நீங்கள் சம்பாதித்த செல்வங்களும், நஸ்டமடைந்த விடுமோ எனப்பயப்படும் வியாபாரமும், நீங்கள் திருப்தியற்றிருக்கும் வசிப்பிடங்களும் அல்லாஹ்வையும் அவனது தூதரையும், அவனது பாதையில் போராடுவதை விடவும் மிகவும் விருப்பத்திற்குரியதாக இருந்தால் அல்லாஹ் தனது தண்டனையைத் தரும் வரை எதிர்பார்த்திருங்கள் இத்தகைய பாவிகளுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை.’ (அத்தௌபா:24)
நபிகளாரின் மீது நாம் வைக்கின்ற அன்பு நம் மனைவி மற்றும் உறவினர்கள்,நண்பர்கள்,பிள்ளைகள் போன்றவர்களிடம் செலுத்துகின்ற அன்பைப் போன்றதாக இருக்கக் கூடாது.அதை விடவும் மிகவும் உயர்ந்த தரத்தில் காணப்பட வேண்டும்.
காரணம்,நபிகளாரின் மீது செலுத்துகின்ற அன்பு நேரடியாக ஒரு முஸ்லிமுடைய இறை நம்பிக்கையோடு தொடர்புபட்டது.
உங்களில் ஒருவருக்கு அவருடைய தந்தை, அவருடைய பிள்ளை, ஏனைய மக்கள் அனைவரையும்விட நான் நேசத்திற்குரியவனாக ஆகாதவரை அவர் (உண்மையான) இறை நம்பிக்கை (ஈமான்) கொண்டவர் ஆகமாட்டார்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : புஹாரி (15)
நபிகளாரின் மீது வைக்கின்ற அன்பு ஒரு முஸ்லிமின் மறுமை வாழ்க்கையினை தீர்மானிக்கக் கூடியது.ஏனெனில்,அல்லாஹ்தஆலாவின்மீது நம்பிக்கை கொண்ட ஒரு முஸ்லிம் அடுத்ததாக நபிகளார் ஒரு இறைத்தூதர் என்பதனை சாட்சி பகர வேண்டும்.
எனவே அவ்வாறு சாட்சி சொல்கின்ற ஒரு மனிதன் நபிகளாரை வெறும் வார்த்தைகளால் மாத்திரமல்லாது செயற்பாட்டு ரீதியாக மதிக்க வேண்டும்,அன்பு செலுத்த வேண்டும்.
நமது சமூகத்தின் இன்றைய நிலை.......
சகல விடயங்களிலும் சகலருக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்த அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் தன்னை மக்கள் எவ்வாறு மதிக்க வேண்டுமென வழிகாட்டுவதிலும் மகவும் கரிசனையாக நடந்து கொண்டார்கள்.
ஆனால் முஸ்லிம்கள் என்றும் இறுதி நபியின் உம்மத்துக்கள் என்றும் தங்களைக் கூறிக்கொள்கின்ற இன்றைய சமூகம் நபிகளாரை புகழ்கிறோம்,நபிகளாரை மதிக்கிறோம் என்னும் பெயரில் பகிரங்கமாகவே இறைத்தூதரை கேவலப்படுத்திக் கொண்டிருக்கின்ற காட்சிகளை நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.
அல்லாஹ்வின் தூதர் எதையெல்லாம் தடுத்தார்களோ அதையெல்லாம் தங்களின் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு செயற்படும் ஒரு இழிநிலை சமூகமாக முஸ்லிம் சமூகம் மாறிவருகின்றது.
அல்லாஹ்வின் தூதரை ஒரு யூதன் கேவலப்படுத்தி விட்டான் என்பதற்காக போர்க்கொடி தூக்குகின்ற நாம் அத்தூதர் தொடர்பில் நமது நிலைப்பாடு என்னவென்பதனை ஒரு கணம் மீட்டிப் பார்க்க வேண்டும்.
ஒருவர் மற்றவர் மீது கொண்டுள்ள நேசத்தின் வடிவம் என்ன?
சாதாரணமாக ஒரு ஆண் ஒரு பெண்ணை (தன் மனைவியை) உளமாற நேசித்தால்,அந்த நேசமானது எவ்வாறிருக்கும்?
அவ்விருவரும் தனித்தனியாக இருக்கும்போது ஒருவர் மற்றவருக்கு அவரின் நலன் கருதி இட்ட கட்டளைகளை நிறைவேற்றுவதில் பெரிதும் சிரத்தை எடுத்துக் கொள்வார்கள்.
உதாரணமாக நேரத்திற்கு சாப்பிடுதல்,அழகான ஆடைகள அணிதல்,தன்னை அழகு படுத்திக் கொள்ளல் போன்றவற்றைக் கூறலாம். இது ஒருவரை ஒருவர் நேசிப்பதற்கு செயலுருவம் கொடுப்பதின் சுருக்கமான எடுத்துக் காட்டாகும்.
ஆனால் நபிகளாரை உயிரினும் மேலாக நேசிக்கிறோம் என்று கோஷமிடுகின்ற நாம் அந்த நபிகளார் கூறிய எந்த விடயத்தில் கரிசனை காட்டுகிறோம் என்பது கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது.
ஒரு யூதன் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை கேலி செய்து விட்டான் என்பதற்காக அந்த யூதனுக்கெதிராக கிளர்ந்து எழுகின்ற நாம் இன்று நம் கையில் வைத்திருப்பது தூய நபியின் கலாச்சாரமா?யூத கிறிஸ்த்தவர்களின் கலாச்சாரமா?
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள்.
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
(சஹீஹுல் புஹாரி.5892)
இன்று நம் முஸ்லிம் சமூகத்தில் நபிகளாரின் இப்போதனையை செயல்படுத்துகின்ற முஸ்லிம்கள் எத்தனை பேர்?
நபிகளாரை நேசிப்பதென்பது அவர்கள் காட்டிய போதனைகளை முற்றாகக் கடைப்பிடிப்பதேயன்றி வெறுமனே கோஷங்கள் எழுப்புவதோ ,பதாதைகள்,சுலோகங்கள் பிடிப்பதோ அல்ல. அதற்காக அவற்றைக் கூடாதென்று சொல்லவில்லை.
கட்டாயம் செய்ய வேண்டும்.ஆனால் நபிகளாரின் போதனைகளுக்கு செயலுருவம் கொடுக்கும் போதுதான் இவ்வாறான போராட்டங்களில் உயிரோட்டமிருக்கும்.
நபிகளார் எதை போதித்தார்களோ அதை புறக்கணித்து விட்டு யூதர்களின் கலாச்சாரமான முகத்திலுள்ள முடிகளை முற்றாக மளிப்பதை தங்களின் கலாச்சாரமாக தேர்ந்தெடுத்துள்ள நமது சமூகம் இன்று அந்த யூதர்களுக்கெதிராக போர்க்கொடி தூக்கியிருப்பது வேடிக்கைதான்.
யூதர்களும் கிறிஸ்த்தவர்களும் மர்யமுடைய மகன் ஈசா(அலை)வை அளவு கடந்து புகழ்ந்தது போன்று என்னை நீங்கள் புகழாதீர்கள் (சஹீஹுல் புஹாரி)
ஒரு ஈத்தம் பழத்தின் துண்டையேனும் தருமம் செய்து நரக நெருப்பிலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று போதித்த நபிகளார் (ஸல்)அவர்கள் தான் வாழ்ந்த அறுபத்தி மூன்று வருட காலத்தில் ஒரு நாளில் கூட 'இன்று எனது பிறந்த தினம்' என்று கூறி ஒரு ஈத்தம் பழத்தையேனும் தனது உறவினர்களுக்கோ,தோழர்களுக்கோ கொடுத்தது கிடையாது.
ஆனால் இன்று நம் முஸ்லிம் சமூகம் குழந்தை பிறந்து ஏழாம் நாளில் அக்குழந்தைக்கு செய்ய வேண்டிய கடமைகளை அழகான முறையில் நபிகளார் தெளிவாகக் கூறியிருக்க அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு ஒருவருட முடிவில் பிறந்த நாள் விழாக் கொண்டாடும் சமூகமாகவே காணப்படுகின்றது.
இதில் இன்னும் வேடிக்கையான விடயம்,
எந்த இறைத்தூதர் யூத,கிறிஸ்த்தவ காலாச்சாரம் என்பதற்காக பிறந்தநாள் விழாக்கள் கொண்டாடுவதைத் தடுத்தார்களோ அந்த இறைத்தூதருக்கே தேசிய மட்டத்தில் பிறந்தநாள் விழா எடுக்கக் கூடிய சமூகமாக நம் சமூகம் மாறிப்போயுள்ளது.
தலைமைத்துவங்களின் பொறுப்புக்கள்.
இன்று நமது நாட்டைப் பொறுத்தவரையில் முஸ்லிம்களுக்கென்று ஒரு தலைமைத்துவம் இன்றியமையாத ஒன்றாகவே காணப்படுகிறது.முஸ்லிம்கள் நாடளாவியரீதியில் தங்களின் உரிமையை,தேவைப்பாட்டை உணர்த்துவதற்கு தலைமைத்துவங்களின் பங்களிப்புக்கள் அத்தியாவசியமானவையாகும்.
முஸ்லிம் சமூகத்தின் தலைமைத்துவத்தைப் பொறுத்தவரையில் அவற்றை இரண்டாகப் பிரிக்கலாம்.
முதலாவது,இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் .
இரண்டாவது,முஸ்லிம் அரசியல்வாதிகள்.
முஸ்லிம்களைப் பிரதி நிதித்துவப் படுத்துகின்ற இவ்வாறான தலைமைகள் இஸ்லாத்தின் வரம்புகளுக்குள் நின்று தங்களின் சமூகத்திற்காகக் குரல் எழுப்ப வேண்டும்.
ஆனால் இன்றைய நம் மத்தியிலுள்ள தலைமைத்துவங்களை எடுத்து நோக்கினால் அவை இஸ்லாத்தை,அதன் கலாச்சாரத்தை பாதுகாப்பதை விடுத்து அதை அந்நிய சமூகத்தின் கைகளில் தாரை வார்த்துக் கொடுக்கின்ற நிலையே இன்று காணப்படுகின்றது.
ஒரு மாற்றுமத அரசியல்வாதியை தேர்தலில் வெற்றியடையச் செய்வதற்காக பள்ளிவாயில்களுக்கு,தர்காக்களுக்கு அழைத்துவந்து அவ்வரசியல்வாதியின் வெற்றிக்காக இருகரம் ஏந்திப்பிரர்த்திக்கும் எமது மார்க்க அறிஞர்கள் இது தொடர்பில் இஸ்லாம் எமகுக் காட்டித்தந்த வழிமுறை என்னவென்பதை ஒருகணம் சிந்திக்க வேண்டும்.
அது மட்டுமல்லாது,இன்று அரசியல் மேடைகளில் ஒருவரையொருவர் வஞ்சம் தீர்ப்பதற்குக் கூட நபிகளாரின் பொன்மொழிகள் பந்தாடப்படும் அவலநிலையை நாம் காண்கிறோம்.
முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகள் என்று தங்களை கூறிக்கொள்ளும் அரசியல் பிரமுகர்கள் இன்று தான் சார்ந்திருக்கும் கட்சியில் தனது நிலையை உறுதி செய்வதற்காக அப்பட்டமான மாற்றுமதக் கலாச்சாரங்களைக் கூட துளியளவும் தயக்கமின்றி மேற்கொடுவரும் நிலை மாற்றமத மக்களால் கூட விமர்சிக்கப் படுமளவிற்கு மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது.
ஒரு விழாவிற்கு அல்லது ஒரு கூட்டத்திற்கு வருகை தரும் ஒரு முஸ்லிம் அரசியல்வாதி,தான் ஒரு அதிகாரம் படைத்தவர் என்ற வகையில் அவ்விடத்தில் தனது கலாச்சாரத்தை நிலை நிறுத்த முடியும்.
எந்தவொரு பிரமுகரையும் யாரும் நிர்ப்பந்திப்பதில்லை.
ஆனால் நமது அரசியல்வாதிகள் தாங்களாகவே முன்வந்து மலர் மாலை அணிவித்தல்,குத்து விளக்கேற்றுதல்,பாண்டு வாத்தியக்கருவிகளை இசைக்ககும்படி ஏவுதல்,பெண்களின் நடன நிகழ்ச்சி போன்ற கலாச்சார சீர்கேடுகளுக்கு வழிவகுக்கின்றனர்.
நாடளாவிய ரீதியில் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்குக் குரல் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் மக்கள் அளித்த வாக்குகளால் பதவிகளை பொறுப்பேற்றிருக்கும் இம்முஸ்லிம் அரசியல் தலைமைகள் பதவிக்கு வந்த மறுநாளே பட்டாசு மற்றும் இசை முழக்கத்துடன் பவனி வருவது நாட்டில் முஸ்லிம்களின் இருப்பையே கேள்விக் குறியாக்குகின்றது என்பதை ஏனோ இவர்கள் சிந்திக்க மறந்து விடுன்றனர்.
கலாச்சாரங்களில் சிறந்தது நபி(ஸல்)அவர்கள் காட்டிய கலாச்சாரம்.
இன்று தனியார் வானொலிகள் மற்றும் தொலைக்காட்சிகள் மக்களைத் தன் வசப்படுத்திக் கொள்வதற்காகக் கங்கணம் கட்டிக் கொண்டு அலைகின்ற இவ்வேளையில் இஸ்லாத்தின் கலாச்சார விழுமியங்களைப் பற்றிய அறிவை அணுவளவும் கொண்டிராத எமது முஸ்லிம் சகோதரிகள் அந்நிய ஆண்களுடன் தொலைபேசியில் கொஞ்சிக் குலாவுவது தினந்தோறும் எமது காதுகளை வந்தடையும் ஒன்றாகவே காணப்படுகின்றது.
பாத்திமா,ஆயிஷா போன்ற பரிசுத்தமிக்க பெண்களின் பெயர்களை தங்களின் பெயர்களாகக் கூறிக்கொண்டு மாற்றுமத அறிவிப்பாளர்களுக்கு தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தி அவர்களிடம் தங்களின் விருப்பு வெறுப்புக்கள்,வயது,குடும்ப விபரம்,தொழில்,தொலைபேசி இலக்கம்,தான் அணியும் ஆடைகளின் அளவுகள் என்பவற்றை துளியளவும் தயக்கமின்றிக் கூறுகின்ற கேவலமான கலாச்சாரத்தினை நமது சகோதரிகள் கைக்கொண்டிருப்பதானது முஸ்லிம் சமூகத்தின் கலாச்சார ரீதியான வீழ்ச்சிப் பாதையினையே கோடிட்டுக் காட்டுகின்றது.
முஸ்லிம்களின் சமூகக் கட்டமைப்பை சீர்குலைப்பதற்கு மாற்று மதத்தவர்களால் உருவாக்கப் பட்ட இவ்வாறான திட்டமிடல்களிலிருந்து முஸ்லிம்கள் விடுபட முயற்சிக்க வேண்டும்.
இப்படியான யூத கிறிஸ்த்தவ விஷமிகளின் வலைகளுக்குள் அகப்பட்டுக் கொண்டு அதே யூதர்களுக்கெதிராக பதாதைகளை ஏந்துவதில் எதுவித பயனும் கிடைக்கப் போவதில்லை.
எமது பிள்ளைகள் ஒரு பிரத்தியேக வகுப்பொன்றிற்கு செல்வதற்காக பலநூறு ரூபாய்களை செலவு செய்து அனுப்பி வைக்கத் தயாராக இருக்கின்ற எமது சமூகம் ஒரு மார்க்க சொற்பொழிவை செவிமடுப்பதற்காக தங்கள் பிள்ளைகளை அவ்வாறான இடங்களுக்கு அனுப்பி வைப்பதில் அசமந்தப் போக்கினையே கொண்டுள்ளது.
முதலில் முஸ்லிம்களாகிய நாங்கள் இஸ்லாத்தை விளங்கவேண்டும்.எமது பிள்ளைகளுக்கு அதன் முக்கியத்துவத்தை புரிய வைக்க வேண்டும்.நபிகளாருடைய சுன்னாக்கள் உயிர்ப்பிக்கப் படவேண்டும்.
வெட்கம்,நடைமுறைகள்,அடுத்தவர்களை திருப்திப் படுத்தல் போன்றவைகள் நபிகளாரின் வழிமுறைகளை புறக்கணிப்பதற்குக் காரணியாக அமைந்து விடக்கூடாது.
நபிகளாரின் வழிமுறை என ஒரு விடயத்தை கண்டால் அதை செயல்படுத்துவதில் அக்கறை செலுத்தவேண்டும்.நபிகளாரின் வழிமுறைக்கு மாற்றமாக ஒரு விடயம் சமூகத்தில் அல்லது நமது குடும்பத்தில் ஊடுருவி இருக்குமென்றால் அதை இல்லாதொழிக்க முன்வரவேண்டும்.
ஒரு சுன்னாவை ஒருவர் உயிர்ப்பித்தால் அதற்குரிய நன்மையையும் அதை மற்றவருக்கு அறிவித்து அவரும் அதைசெய்தல் அவரின் நன்மையையும் அடைந்து பெற்றுக் கொள்வார்.
அதே போன்று ஒரு தீமையை செய்தால் அதற்குரிய பாவத்தையும் அதை மற்றவருக்கு அறிவித்து அவரும் அதைசெய்தால் அவருடைய பாவத்தையும் சுமந்து கொள்வார். (சஹீஹுல் புஹாரி)
நபிகளாரின் மீதுள்ள அன்பு என்பது அவர்களின் போதனைகளை முற்றுமுழுதாக கடைப் பிடித்து வாழ்வதேயாகும்.முஸ்லிம்கள் இஸ்லாத்தை விட்டும் விலகும்போதுதான் இப்படியான அந்நியசக்திகள் அதை சூறையாட முயற்சிக்கின்றன.
எனவே அல்லாஹ் அருளிய வேதமான அல் குர்ஆனையும் அண்ணலாரின் போதனைகளையும் நம் வாழ்வில் அணுவணுவாகப் பின்பற்றி வாழ்வதற்கு எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் அருபுரிவானாக.
يُرِيدُونَ أَن يُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَيَأْبَى اللَّهُ إِلَّا أَن يُتِمَّ نُورَهُ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ
தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான். (அல் குர்ஆன்.09:32)

யா அல்லாஹ் உனக்கே எல்லா புகழும் ......... அபூ ஆசியா உங்களுக்கு அல்லாஹ் துணை புரிவானாக இக்காலகட்ட தேவை உணர்ந்து முஸ்லிம்கள் முஸ்லிமாக வாழாதவரை இஸ்லாம் எம்மை விட்டு விலகி விடும் என்பதையும் நாமும் பெயர் தாங்கி முஸ்லிம்களாகவே இருக்கின்றோம் என்பதை மிக தெளிவாக இக்கட்டுரை மூலம் விளக்கி உள்ளீர்..... நன்றி.... உங்களுக்கு.
ReplyDeleteஒவ்வொரு முஸ்லீம்மும் தானாக உணர்ந்து திருந்தாத வரை எப்போதும் அதாவது மரணம் வரை பெயரளவு முஸ்லிமாகவே இருக்கத்தான் போகின்றது ........ யா அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்ல சுய சிந்தனையை தந்தருள்வாயாக
بارك االله فيك يا ابا اسيا! UNMAYAAKA UNKALIN KATTHURAYAAL MEY SILIURTHUPPOANEAN.MUSLIM SAMOOKATTHIN SAMA KAALA NILAYAI PADAMPIDUTTHUKKAADDIYULLEERKAL.UNKALIN WIMARSANAKAL KAALATTHIN THEAWAI.NANRIKALUM PAARAADDUKALUM .MEALUM AARPADDANKALINPOATHU MUSLINKAL MEARKKONDA WANMURAYKAYUM WIMARSITTHU ,AWAIKAL THODAPAANA ISLAAMIYA POATHANAIKALAYUM SUDDIKKAADINAAL PORUTTHMAAKA IRUKKUM.MAATRU MATHATTHAWARKALUM ISLAATTHAIPPATRI PURITHU KOLLA WALISAMAIKKUM.
ReplyDelete