Header Ads



பூரண அறிவு இல்லாதவர்களே திவிநெகுமே சட்டத்தை எதிர்க்கின்றனர் - பசில ராஜபக்ஸ



கொழும்பிலிருந்து ஏ.ஜே.எம்.ஹனிபா + நூர்தீன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு நன்மை தரும் விடயங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் விமர்சிக்க கூடாது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.

அகில இலங்கை சமுர்த்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கத்தின் 15வது பிரதி நிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் பசில் ராஜபக்ச மேற்கண்டவாறு கூறினார்.

கொழும்பு பத்தறமுள்ளையிலுள்ள அகில இலங்கை சமுர்த்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்களத்தின் தலைமைக்காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை (5.10.2012)நடை பெற்ற இம் மாநாட்டில் தொடர்ந்துரையாற்றிய அமைச்சர் பசில் ராஜபக்ச அரசாங்கம் முன்வைத்தள்ள திவிநெகும சட்ட மூலத்தை பற்றி பூரண அறிவை பெற்றிராதவர்கள் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் இந்த திட்டத்தினையும் எதிர்த்து வருகின்றனர்.

இந்த திவிநெகும சட்ட மூலத்தில் சமுர்த்தி அதிகார சபையும் உள்வாங்கப்பட்டுள்ளது. திவிநெகும திணைக்களம் அமைப்பதன் மூலம் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஏனைய அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்கள் பெறும் அனைத்து சலுகைகளையும் நன்மைகளையும் பெற்றுக் கொள்வார்கள். இதன் மூலம் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் நிரந்தர ஓய்வூதிய உத்தியோகத்தர்களாக மாறுகின்றனர்.

இந்த திவிநெகு மிணைக்களத்தின் மூலம் வறிய மக்கள் நன்மை பெறக் கூடிய அனைத்து விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதனுடாக மக்கள் சிறந்த பயன்களை அடைந்து வருகின்றனர். ஆனால் இன்று நல்லவற்றையும் தீயவைகளாக எதிர்த்து வரும் சில தீய சக்திகள் இந்த நன்மையளிக்க கூடிய திவிநெகும திட்டத்தினை எதிர்த்ததன் காரணமாக இந்த சட்ட மூல நிறைவேற்றம் சற்று பின் தள்ளப்பட்டுள்ளது.

எனினும் திவிநெகும சட்ட மூலத்தை அமுல் படுத்துவதற்கு இலங்கையிலுள்ள அனைத்து மாகாண சபைகளும் முழு ஆரதவினை வழங்கியள்ளது இதனால் மிக விரைவில் இந்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டு சமுர்த்தி உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் நன்மை பெறுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் சங்கத்தின் தலைவர் கித்சிறி கமகே, பொதுச் செயலாளரும்  மேல் மாகாண சபை உறுப்பினருமான எஸ்.ஏ.டி.ஜகத்குமார் உட்பட பலரும் கலந்து கொண்டனர். இதன் போது உத்தியோகத்தர்களின் மரணக் கொடுப்பனவும் சங்கத்தினால் வழங்கப்பட்டது.








No comments

Powered by Blogger.