Header Ads



வடக்கில் இந்திய அரசாங்கத்தின் வீடமைப்புத்திட்ட ஆரம்ப நிகழ்வுகள் (படங்கள்)


இர்ஷாத் றஹ்மத்துல்லா

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள 50 ஆயிரம் வீடமைப்புத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை காலை மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பெரியமடு ம.வி பாடசாலையில் இடம் பெற்றது.

மகாத்மா காந்தியின் 143 ஆவது பிறந்த நாளான இன்று  குறித்த வீட்டுத் திட்டம் மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட 50 ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் 43 ஆயிரம் வீடுகள் வடக்கில் யுத்தத்தினால் பாதீக்கப்பட்ட மக்களுக்கும் ஏணைய 7 ஆயிரம் வீடுகள் கிழக்கு மாகாண மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

 செவ்வாய்க்கிழமை காலை பெரிய மடு ம.வி பாடசாலையில் இடம் பெற்ற குறித்த ஆரம்ப நிகழ்வின் போது பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ,கைத்தொழில் மற்றும் வானிபத்துரை அமைச்சர் றிஸாட் பதீயுதீன் ,இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அசோக்  கே.காந்தா,வீடமைப்பு  அமைச்சர் விமல் வீரவன்ச, ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது மன்னார்,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு,மடு ஆகிய 5 பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக குறித்த நிகழ்வு பெரியமடு கிராமத்தில் இடம் பெற்றது.

இதன் போது தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கு வீட்டுத்திட்டத்திற்கான  உறுதிக் கடிதங்கள்  வைபவ ரீதியாக அமை்சர்களினால் வழங்கி வைக்கப்பட்டது வழங்கி வைக்கப்பட்டது.









No comments

Powered by Blogger.