Header Ads



மஹிந்த ராஜபக்ஸவிடம் ஏமாந்துவிட்டோம் - முன்னர்ள் நீதியரசர் சரத் என்.சில்வா

ஹெல்பிங் அம்பாந்தோட்டை வழக்கில் இருந்து உயர்நீதிமன்றம் விடுதலை செய்யாது போயிருந்தால், மகிந்த அதிபராகியிருக்க முடியாது என்று  முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். 

“சுனாமி நிவாரண நிதி முறைகேடு தொடர்பான குற்றசாட்டில் இருந்து எனது தலைமையிலான உயர்நீதிமன்ற அமர்வு, அவரை விடுவிக்காது போயிருந்தால், மகிந்த ராஜபக்சவினால் 2005 அதிபர் தேர்தலில் போட்டியிட்டிருக்கவோ, அதிகாரத்துக்கு வந்திருக்கவோ முடியாது. 

மகிந்த ராஜபக்ச மக்களின் உரிமைகளுக்குப் பாதுகாப்பாக இருப்பார் என்று எதிர்பார்த்துத் தான் நாம் அதைச் செய்தோம். ஆனால், அது இன்று நடக்கவில்லை.  மகிந்த ராஜபக்சவை அதிகாரத்துக்குக் கொண்டு வந்தது நான் தான் என்ற குற்றச்சாட்டுகள் பல உள்ளன. 

உயர்நீதிமன்றத்தின் முடிவினால் தான், அவரால் சிறிலங்கா அதிபராக முடிந்தது என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன்.” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். 

2004 டிசெம்பர் 26ம் நாள்  சுனாமி அனர்த்தம் ஏற்பட்டதை அடுத்து, வெளிநாடுகளில் இருந்து திரட்டப்பட்ட பெருமளவு நிவாரண நிதியை அப்போது சிறிலங்காவின் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கில் இட்டு கையாடியதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தார்.

No comments

Powered by Blogger.