மலாலா உடல்நிலையில் முன்னேற்றம் - அமெரிக்க நரம்பியல் நிபுணர்
பாகிஸ்தான் பள்ளி மாணவி மலாலா யூசுப்ஷாஸ் பெஷாவரில் தலிபான்களால் சுடப்பட்டார். பெண் கல்வியை ஆதரித்து பிரசாரம் செய்ததால் ஆத்திரம் அடைந்த தலிபான்கள் இவரை சுட்டனர். அதில் அவரது, தலை மற்றும் கழுத்து பகுதியில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மலாலா மேல் சிகிச்சைக்காக லண்டன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தற்போது அவரது உடல்நிலை தேறி வருவதாக பாகிஸ்தானை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறினார். மேலும், அவர் தனது கை, கால்களை அசைக்கிறார் என்றும் கூறினார். மலாலா விரைவில் குணமடைந்து மீண்டும் சகஜமான நிலைக்கு திரும்புவார் என அமெரிக்காவின் நரம்பியல் நிபுணர் டாக்டர் ஜோனாதன் பெல்லஸ் தெரிவித்துள்ளார்.

Post a Comment