Header Ads



ஒரே சூலில் ஐந்து குழந்தைகளைப் பிரசவித்த தாய் - கண்டியில் அதிசயம் (படங்கள் இணைப்பு)


(கண்டியிலிருந்து ஜே.எம்.ஹபீஸ்)

கண்டி வைத்திய சாலையில் ஒரே சூலில் ஐந்து குழந்தைகளைப் பிரசவித்த தாய்க்கு மத்திய மாகாண ஆளுணர் டிக்கிரி கொப்பே கடுவ நிதிஉதவி வழங்கினார்.

(15.10.2012) இன்று சற்று நேரத்திற்கு முன் அங்கு சமூகமளித்த ஆளுணர் டிக்கிரி கொப்பேகடுவ அவர்கள் தாய்சேய் நலன் பற்றி விசாரித்து அறிந்து கொண்டார்.
அருவைச் சிகிட்சை மூலம் பெறப்பட்ட ஐந்து குழந்தைகளில் ஒன்றின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.உடனடியாக இன்று கொழும்பு சிறுவர் வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இவற்றுள் ஒரு குழந்தை ஒரு கிலோவும்; இரண்டு குழந்தைகள் 950 கிராம் எடையும் மற்றொன்று 850 கிரேமும் ஒரு குழந்தை 500 கிராம் எடையும் கொண்டதாகும். இவற்றுள் 3 குழந்தை ஆண்களும் 2 குழந்தை பெண்களுமாகும்.

கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த ஹெட்டிமுல்லை என்னுமிடத்தில் வசிக்கும் இவர்கணவன் ஆளும் கட்சியின் கேகாலைப் பிரதேச சபை அங்கத்தவராவார். எரந்த விஜேபால என்பவரது மனைவியான திலினி ரசாங்கிகா என்பவருக்கே மேற்படி தலைப்பிரசவம் ஏற்பட்டு இவ்வாறு 5 குழந்தைகள் ஒரே நேரத்தில் கிடைக்கப்ப் பெற்றுள்ளன. 29 வயதான இவர் திருமனம் முடித்து மூன்று வருடங்கள் ஆவதாகவும் தெரிவித்தார்.

தும்மையும் தமது குழந்தைகளையும் உயிர் பிழைக்க வைத்தியசாலை டாக்டர்கள, தாதியர் உற்பட சிற்றூழியர்கள் வரை அனைவரும் கடும் பாடுபட்டு உழைத்ததாகத் தெரிவித்தார்.

உயிர் பிழைத்த குறை நிரைகொண்ட குழந்தைகளுக்கான அலகில் இக்குழந்தைகள்        (கண்ணாடியினால் மூடப்பட்ட மிதவெப்பம்மமான சூழலில்) வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அங்கு பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.






2 comments:

  1. இந்த இணிமையான செய்திக்கு நன்றி. 3 ஆண்கள், 2 பெண்கள் என்பதால் அது ஒரு சூலாக இருக்க முடியாது

    ReplyDelete
  2. இதில் அதிசயப்படுகிறத்துக்கு ஒன்றுமேயில்லை.அல்லாஹ் தான் நாடியோருக்கு இரண்டு இரண்டாகவோ,மூன்று
    மூன்றாகவோ வழங்குவதாக வாக்களித்து இருக்கிறான்.முஸ்லிம்களாகிய நாம் அதிர்ச்சி,ஆச்சரியம்,அதிசயப்படாமல்
    அல்ஹம்துலில்லாஹ் என்று சொல்லிக் கொண்டு அடுத்த கட்டத்துக்கு போக வேண்டியதுதான்.

    ReplyDelete

Powered by Blogger.