துருக்கியில் இஸ்லாமிய ஜனநாயகம்தான் இனிமேல் செயற்படும் - தயிப் எர்டோகன் பிரகடனம்
TU
துருக்கி தலைநகர் அங்காராவில் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அந்நாட்டுப் பிரதமர் பிரதமர் தயிப் எர்டோகன் தனது இஸ்லாமிய அடிப்படையில் வேரூன்றி வளர்ந்துவரும் தங்களது ஆளும் கட்சி கடந்த பத்து ஆண்டுகளில் எப்படி ஓர் பொறுப்பான வளரும் ஜனநாயக சக்தியாக முஸ்லீம் உலகிற்கு முன் உதாரணமாக விளங்கி வருகின்றது என்று, சான்றுகளை பட்டியலிட்டுப் பேசினார்.
அவரது நீதி மற்றும் அபிவிருத்தி (ஏ.கே.) கட்சியின் மாநாட்டில், கட்சி உறுப்பினர்கள் மற்றும் பிராந்திய தலைவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான முன்னிலையில் உரையாற்றிய அவர், ஏழரைக் கோடி துருக்கி மக்கள் அனுபவித்து வந்த ராணுவ கொடுங்கோன்மை நிறைந்த இருண்ட கால ஆட்சி அகன்றுவிட்டது இனி அதற்கு இங்கு இடமில்லை, ஜனநாயக உரிமைகள் நிறைந்த இஸ்லாமிய ஜனநாயகம் தான் இம்மண்ணில் இனி செயல்படும் என்று பெருமையாக கூறினார்.
மேலும் அவர் ஒரு மாறுபட்ட அரசியல் புனர் நிர்மாணத்தைப் பற்றியும், 15 மில்லியன் துருக்கி வாழ் குர்துகளுடனான உறவுகளை ஒரு புதிய பாதையில் கொண்டு செல்லும் ஏ.கே. கட்சியின் அடுத்த பத்தாண்டு நிகழ்ச்சி நிரல் பட்டியலினை விளக்கிப் பேசினார் .
“நம்மை பழமைவாத ஜனநாயகவாதிகள் என்று பேசி ஒதுக்கி தள்ளியவர்கள் நாம் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரம் மூலம் மேற்க்கொண்ட உறுதியான மாற்றம் மூலம் இன்று தங்களது கவனத்தை நம் மீது திருப்பியுள்ளனர் ” என்றார் தயிப் எர்டோகன்.
“நம்முடைய இந்த நிலைப்பாடு நம் நாட்டின் எல்லைகளை கடந்து அனைத்து முஸ்லீம் நாடுகளுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.” என்று கூறிய பொழுது கூடி இருந்த மக்கள் உற்சாகத்தால் கரகோஷம் எழுப்பினர்.
இக்கூட்டத்தில் எகிப்து அதிபர் முஹம்மத் முர்ஸி, கிர்கிஸ் அதிபர் அல்மெழ்பேக் அடம்பேவ் மற்றும் ஈராக் நாட்டின் தன்னாட்சி குர்திஸ்தான் பகுதியின் ஜனாதிபதி மசூத் பர்சனி உட்பட தலைவர்கள் விருந்தினர்களாக கலந்துக்கொண்டனர் .
தயிப் எர்டோகன் அவர்களின் சீரிய தலைமையின் கீழ் ஏ.கே. கட்சி இராணுவ ஆட்சியை வீழ்த்தி சரித்திர சிறப்புமிக்க ஆட்சியை , 2002 முதல் தொடர்ந்து மூன்று தேர்தல்களில் பெற்ற வெற்றியின் மூலம் தந்து வருகின்றது என்பது குறுப்பிடத்தக்கது.
தயிப் எர்டோகன் ஆட்சியில் தனிநபர் வருமானம் கிட்டத்தட்ட மும்மடங்கு உயர்ந்து உள்ளது, மேலும் ஸ்திரதன்மையற்ற ஒரு நாட்டில் ஜனநாயக நிலைத்தன்மை மற்றும் இஸ்லாமிய கலாச்சாரம் கலந்த கலவையை பார்த்து துருக்கியின் நட்பு நாடுகளும் தங்களை தயிப் எர்டோகன் மாதிரியில் இணைந்து கொண்டுள்ளன. இதன் மூலம் எர்துகான் ஒரு பிராந்திய சக்தியாக தன்னை மீண்டும் நிலைநிறுத்தி கொண்டார்.
“துருக்கியில் இஸ்லாமியம் பிரகாசமான முகம் காட்டுகிறது” என்றும் வெளிநாட்டு சுற்றுபயணத்தில் உள்ள ஹமாஸ் தலைவர் காலீத் மிஷால் இக்கூட்டத்திற்கு அனுப்பிய செய்தியில் கூறியுள்ளார். மேலும் “தயிப் எர்டோகன், நீங்கள் இப்போது துருக்கியின் தலைவர் மட்டும் இல்லை நீங்கள் முஸ்லீம் உலகின் ஓர் முன் மாதிரி தலைவர்” என்றும் குறிபிட்டுருந்தார்.
மேலும் அவர் “இன்று, நாம் ஒரு புதிய சஹாப்தத்தை திறக்க வேண்டும், நாம் அதை நம் குர்திஷ் சகோதரர்களுடன் சமாதானம் மற்றும் சகோதரத்துவ மூலம் செய்ய வேண்டும்,” என்று கூறினார். “குர்திஷ்கள் எங்கள் சகோதரர்கள், அவர்கள் எங்களை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்கவேண்டும், பயங்கரவாத குரல் உயர்த்தியது போதும் என்று எதிர்பார்க்கிறோம்.”என்றார்
மசூத் பர்சனி , ஈராக் நாட்டின் தன்னாட்சி குர்திஸ்தான் பகுதியில் தலைவர் பேசும்போது; “இந்த பகுதியின் மக்கள் வாழ்வதற்கு நாம் ஒத்துழைக்க வேண்டும். எந்த பிரச்சினையும் வன்முறை மூலம் தீர்த்துவிட முடியாது, நாங்கள் இப்பகுதியில் மக்களின் இரத்த ஓட்டப்படுவதை நிறுத்தப் பாடுபடும் எர்துகான் அவர்களின் கரத்தை உறுதிபடுத்துவேன்” என்று உணர்ச்சிப் பொங்க கூறினார்.
குர்திஷ் போராளிகள் 1984 முதல் ஆயுதம் ஏந்தி நடத்திவரும் போராட்டத்தால் ஆயிரகணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.
இப்பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்திட முயலும் எர்துகானின் முயற்சிக்கு அண்டை நாடுகளின் ஒத்துழைப்பு அண்மைகாலமாக அதிகரித்து வருகின்றது. அண்டை நாடுகளில் மட்டும் அல்ல, துருக்கியை தங்களோடு சேர்க்காமல் ஒதுக்கிவைத்திருந்த ஐரோப்பிய யூனியனுக்கும் துருக்கி ஓர் தவிக்க முடியாத சக்தியாக உள்ளது, அதற்கு இஸ்லாமிய அடிப்படையிலான ஏ.கே பார்ட்டியும் அதன் தலைவர் எர்துகானும் காரணம் என்றால் மிகையாகாது, அதற்கு அங்காராவில் நடைப் பெற்ற இக்கூட்டமே நல்ல உதாரணம்.

Islaamiya aadchi sari athu Enna islaamiya jananaayagam vilanga villai!!
ReplyDeleteBr. Saleem Read the book islatthil jananayaham.
ReplyDelete