முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா ஏற்பாட்டில் பள்ளிவாசல்களுக்கு நிதியுதவியும், செயலமர்வும்
மத்திய மாகாண முதல் அமைச்சர் சரத் ஏக்கநாயகவின் ஏற்பாட்டில் அஹதிய்யாப் பாடசாலை, குர்ஆன் மத்ரஸா ஆசிரியர்களுக்கான செயலமவும், பள்ளிவாசல்களுக்கான நிதிஉதவி வழங்கும் நிகழ்வும் மாத்தளை ஆமினா மகளீர் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
முதல் அமைச்சரின் இணைப்பதிகாரி எம். ரியாழ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உயர் கல்வி பிரதி அமைச்சர் நந்தமிக்க ஏக்கநாயக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இதில் மத்திய மாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் நஜீம் மற்றும் கண்டி ஐடெக் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் ஐ. ஐனுடீன் மற்றும் கண்டி, மாத்தளை, நுவரெலியா மாவட்டங்களைச் சேர்ந்த அஹதிய்யாப் பாடசாலை ,குர்ஆன் மத்ரஸா ஆசிரியர்களும், பள்ளிவாசல்களின் தலைவர்கள், ஆரசியல் பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






Post a Comment